*ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!*
*சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்துக்கொண்டிருந்தாள்!*
காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்! ....
அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்தி க்கொள்ளுங்கள் என்றாள்!
உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்! உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் *சந்திரன்* ! ஒருவர் *சூரியன்* ! இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்! ....
சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்! உடனே அந்த பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான்! ஒன்று *செல்வம்* , இரண்டு *இளமை* ! இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்! சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார்! ....
உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான்! ஒன்று *பூமி* ! எவ்வளவு மிதித்தாலும், எவர் மிதித்தாலும் தாங்கும்! மற்றொன்று *மரம்* ! யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக்கொண்டு காய்களைக் கொடுக்கும் என்றாள்!
சற்று கோபமடைந்த காளிதாசர் நான் ஒரு பிடிவாதக்காரன் என்றார்! அதற்கும் அந்த பெண் உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான்! ஒன்று *முடி* ! மற்றொன்று *நகம்* ! இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும்
பிடிவாதமாக வளரும் என்றாள் சிரித்தபடி!....
தாகம் அதிகரிக்கவே நான் ஒரு முட்டாள் என்று தன்னை கூறிக்கொண்டார்! உடனே அந்த பெண், உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான்! ஒருவன் நாட்டை *ஆளத்தெரியாத அரசன்* மற்றவன் அவனுக்கு *துதிபாடும்* *அமைச்சன்* ! என்றாள்! ...
காளிதாசர் செய்வதறியாது, அந்த பெண்ணின் காலில் விழுந்தார்! உடனே அந்த பெண் மகனே எழுந்திரு என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப்போனார்! சாட்சாத் *சரஸ்வதி* தேவியே அவர் முன் நின்றாள்! காளிதாசர் கைகூப்பி வணங்கியதும், தேவி தாசரைப்பார்த்து
காளிதாசா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ, அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான்! நீ மனிதனாகவே இரு என்று தண்ணீர் குடத்தை காளிதாசர் கையில் கொடுத்து சரஸ்வதி தேவி மறைந்தாள்!
இதுபோலத்தான் குழந்தைகள் எதிர் காலத்தில் பணம் சம்பாதிக்கவும், வசதியாக வாழவும் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்கிறார்களே தவிர, மனிதனாக, தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார் உறவினருக்கு, நம் தாய் நாட்டிற்கு, நமக்கு உணவு தரும் பூமிக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுத்தரவேண்டும்!
பெற்றோரை தாய்நாட்டை , உறவுகளை பிரிந்து, ஏசி அறையே உலகம், தொலைபேசியே உறவு, பணம் சம்பாதிப்பதே வாழ்க்கை யென வாழ்க்கையை இயந்திரமயமாக்கி மனித நேயமில்லா வாழ்க்கை வாழக் கூடாது!
’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத்திக் குத்து...
பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோவில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரத்தை, வரலாற்றாசிரியர் சாமுவேல் பெடி என்பவர் கடந்த 16 - ம் தேதி கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசும்போது மாணவர்களிடம் காட்டினார்.
அதனால், அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...
கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மகன் போதை பொருள் வழக்கில் கைது!
கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெங்களூருவில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் பல இடங்களில் சோதனை நடத்தினர். இதில் , முகமது அனுப் என்பவர் கைது செய்யப்பட்டார். அனுப்பிடமிருந்து ஏராளமான போதை பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில், அனுப்புடன் கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினேசுக்கு ‘தொடர்பு இருந்ததாக சொல்லப்பட்டது.
இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வுப்படி மதிப்பெண் தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை- யூஜிசி
இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களின் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இறுதி பருவ தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பல்கலைக்கழக மானியக்குழு, இறுதிப்பருவத் தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியமானது என்று குறிப்பிட்டுள்ளது.
தேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் இருப்பதற்கு காரணம் யார்? -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் இருப்பதற்கு அனுமதி வழங்கிய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தான் காரணமா? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா காலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள்,
அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் போராட்டம் நடத்தினால், நடவடிக்கையை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி வந்து விடுவார்களா? -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், போராட்டம் நடத்தினால் அதிகாரிகள் நடவடிக்கையை கைவிட்டு திரும்பி விடுவார்களா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
கரூர் மாவட்டம் தாந்தோணி கிராமத்தில் ஓடை மற்றும் வாய்க்கால் ஆக்கிரமிப்பு குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வினாவினர்.
பிரான்ஸில் பெண் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை
பிரான்ஸில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நைஸ் நகரில் தேவாலயம் அருகே ஒருவன் கத்தியால் சரமாரி தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரோசி தெரிவித்துள்ளார்.
இதில், ஒரு பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டதாகவும், இந்த பயங்கர வாத தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் சுட்டு பிடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.