இந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்கள் பட்டியலில் சுப்ரமணியம் பழனிசாமி (P. சுப்ரமணியம்) என்ற பெயரை காண முடிகிறது. இவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தி.
tntenders.gov.in என்ற வலைத்தளத்துக்கு சென்று, 2017_TNRSP_73923_1 என்ற டென்டர் ஐடியை பயன்படுத்தி ஒப்பந்த விவரங்களை பார்க்கலாம்.
அதில் finsummary_95887.pdf என்ற fileஐ டவுன்லோட் செய்தால் நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் கிடைக்கும்
இந்த ஊழல் நெட்வொர்க்கில் இருக்கும் இன்னொரு பெரிய புள்ளி சேகர் ரெட்டி
SPK & Co நிறுவனத்தின் இயக்குநரான செய்யாதுரை நாகராஜன் வேறு சில நிறுவனங்களிலும் இயக்குனராக இருக்கிறார். அதில் ஒன்றுதான் Sri Balaji Tollways (Madurai) Pvt Ltd.
அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் சேகர் ரெட்டி
ஜகன்நாதன் சேகர் என்ற பெயரை பார்த்து குழம்பி விட வேண்டாம்.
அவரது பெயரில் இருக்கும் Jsr Infra Developers Pvt Ltd என்ற நிறுவனத்தையும், அந்த நிறுவனத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையையும் சேர்த்து பார்த்தால் அது சேகர் ரெட்டி என்பது புரியும்
இப்படி பல வழக்குகளில் சிக்கியுள்ள Ramalingam Constructions நிறுவனம் பாஜகவுக்கு தேர்தல் நிதி வழங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, வழக்கு ஆமை வேகத்தில் நகரும் என்று எதிர் பார்க்கலாம்.