ஒரு முறை மகாபெரியவரிடம் ஒரு பெண்மணி, ‘நான் நிறைய ஸ்லோகம் சொல்றேன். ஆனா பிரச்னைகள் தீரலை. பகவான் கண்திறந்து பார்க்கலை’ என்று வருத்தப் பட்டார்.
ஸ்லோகம் சொல்லும் போது சுவாமி முன் உட்கார்ந்து, சுவாமியை மனசிலே நிறுத்திதானே பாராயணம் பண்றேள்?" கேட்டார் மகா பெரியவர்
.வேற வேலை பார்த்துக் கொண்டே தான் சொல்றேன். மனப்பாடம் பண்ணினது" என்றார் அவர்.
அதற்கு மகா பெரியவர் சொன்னார்:
காய்கறி நறுக்கணும்னா அரிவாமணை, கத்தியை கிட்டே வெச்சுக்கறோம். சமைக்கணும்னா அடுப்புகிட்டே போகணும். குளிக்கணும், துவைக்கணும்னா தண்ணீர் பக்கத்திலே போறோம்.
ஸ்கூட்டர், கார் எதுவானாலும் கிட்ட இருந்து ஓட்டினாதான் ஓடறது. ஸ்லோகம் சொல்லணும்னா மனசு சுவாமி கிட்டே போக வேண்டாமா? ஸர்வ அந்தர்யாமி அவன். ஆனாலும் பிரச்னை பெரிசுன்னா, பக்கத்துல உட்கார்ந்து அனுசரணையா சிரத்தையா சொல்லுங்கோ.
நிச்சயம் கேட்பான்...
கல்லைத் தூக்கி சமுத்திரத்திலே போட்டா மூழ்கிடும். ஆனா மரத்தாலே கப்பல் பண்ணி, அதிலே எத்தனை கல் ஏத்தினாலும் மூழ்கிறதில்லே. நம் கவலைகள் கல் மாதிரி. பகவான் தெப்பம் மாதிரி. மனசு என்கிற சமுத்திரத்திலே பகவானைத் தெப்பம் ஆக்கணும்.
தெய்வத்தை இணைக்கிற ஆணிகள்தான் பூஜை மந்திரங்கள் எல்லாம். அப்புறம் கவலைகளைத் தூக்கி தெப்பத்தில் இறக்கலாம்.
சம்சார சாகரத்தில் மூழ்கடிக்கப் படாமல் கரை சேர்ந்து விடலாம்".
ஹர ஹர சங்கர 🇮🇳
ஜெய ஜெய சங்கர 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் மூலம் ஜோ பைடன் வென்றார் - டிரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் மூலம் ஜோ பைடன் வென்றதாகவும், விரைவில் தான் மீண்டும் வெற்றி பெறப் போவதாக டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தீவிர இடது சாரிகளுக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தால் வாக்குகள் எண்ணப்பட்டதால் ஜோ பைடன் வென்றதாகக் குற்றம் சாட்டிய அவர், வாக்கு எண்ணிக்கையின் போது பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகள் அனைத்தும் தனது வாக்குகளை திருடும் போது ஏற்பட்டதாகத் தெரிவித்த டிரம்ப், பைடன் தரப்பினர் சிக்கிக் கொள்ளாமல் சாமர்த்தியமாக தப்பித்து விட்டதாக தெரிவித்தார்.
கந்த சஷ்டி சிறப்பு பதிவு 🙏🙏முருகனை இப்படி வழிபடுவதற்கு பின்னால் உள்ள வாழ்க்கை தத்துவம்.
ஒவ்வொரு தெய்வத்தையும் ஒவ்வொரு விதமாக வழிபடுகிறோம். அந்த வகையில் முருகனை வழிபட பாதயாத்திரை செல்கின்றனர். அதுமட்டுமின்றி காவடியும் எடுத்து செல்கின்றனர். 🙏🇮🇳1
முருகனை வழிபடும் முறைகளில் காவடி எடுத்தலும் ஒன்றாகும். நாம் ஏன் முருகனுக்கு காவடி எடுத்து செல்கிறோம் என்று தெரியுமா?
இதன் பின்னனியில் உள்ள காரணத்தை விரிவாக காணலாம்.
🙏🇮🇳2
🙏 இடும்பன்.
இடும்பன் அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவர். அகஸ்தியர் ஒருமுறை தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு மலைகளையும் கொண்டு வரும்படி கூறினார்.
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடுங்குளிரையும் சீனப்படையினரையும் ஒருசேர எதிர்கொள்ளும் இந்திய வீரர்கள்
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் துருவப் பகுதிகளில் நிலவுவது போன்ற கடுங்குளிரையும், சீனப் படையினரையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் வகையில் இந்தியப் படையினர் நிலைகொண்டுள்ளனர்.
கிழக்கு லடாக்கில் எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் துருவப் பகுதிகளைப் போன்று உறைநிலைக்குக் கீழே கடுங்குளிர் நிலவுகிறது. சீனப் படையினர் கோக்ரா ஹாட் ஸ்பிரிங்ஸ், வடக்கு பாங்காங் சோ, தெற்கு பாங்காங் சோ ஆகிய நிலைகளில் உள்ளனர்.
தூய்மை இந்தியா திட்டத்தால் கிராமப்புற இந்தியாவுக்கு கிடைத்த ஆதாயம் என்ன?
பிரதமர் மோடி தனது கனவுத் திட்டமாக ஸ்வச் பாரத் மிஷன் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தை அக்டோபர் 2, 2014 அன்று துவக்கி வைத்தார்.
2019 அக்டோபருக்குள் மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை முற்றிலுமாக தவிர்க்க இந்தியா முழுவதிலும் இலவசமாக கழிப்பறைகளை கட்டித் தருவதாக அறிவித்தார்.
இந்த கழிப்பறை வசதிகளை பெற்றபின் கிராமப்புற இந்தியாவில் ஒரு வீட்டுக்கு ஆண்டுக்கு ரூ.53,000 (727 அமெரிக்க டாலர்கள்) க்கும் அதிகமான மதிப்பிலான நன்மைகளை பெற்றுள்ளனர்.