யார் இந்த சாணக்கியன்?

கி.மு 4 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று சொல்லப்படுகிறது, நந்தர்களை ஒழித்து சந்திரகுப்த மௌரிய பேரரசை நிறுவினான் என்று கூறப்படுகிறது. 1/28
பிறக்கும் போதே எல்லா பற்களுடன் பிறந்தானாம் இதனைக் கண்ட ஒரு ஞானி இவன் இந்த உலகையே ஆள்வான் என்று ஆரூடம் சொன்னாராம், அதைக் கேட்ட சாணக்கியனின் தந்தை அதிர்ந்து பிராமணன் நாடாளுவது தர்மம் இல்லை வேதம் ஓதுதல் தான் பிராமணன் கடமை தர்மம் என்றுச் சொல்லி உடனே சாணக்கியனின் பற்களை… 2/28
பிடுங்கி எறிந்தாராம்.

பற்களை பிடுங்கி எறிந்தாலும் இவன் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவிக் காட்டுவான் என்று சொன்னாராம் அந்த ஞானி! யார் அந்த ஞானி எந்த குறிப்பும் எங்கும் இல்லை! 3/28
சாணக்கியன் தனநந்தனின் அரண்மனையில் நடந்த விருந்தில் அவமானம் அடைந்ததால் இந்த நந்தவம்சத்தை அழிக்காமல் விடமாட்டேன், அதுவரையில் இந்த அவிழ்ந்த குடுமியை ஒரு போதும் முடிந்து கட்டமாட்டேன் என்று சபதம் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது, அப்படி என்ன அவமானம் நேர்ந்தது அந்த விருந்தில் என்று… 4/28
கேட்டால் அதைப்பற்றிய எந்த குறிப்பும் எந்த நூலிலும் இல்லை!

சரி, யார் இந்த நந்தர்கள்?

நாவிதன் மகாநந்திக்கு பிறந்த மகாபத்மநந்தன் தான் நந்தவம்சத்தை நிறுவியதாக புராணங்கள் கூறுகின்றன, மகாபத்மநந்தனை "நாவீததாசன்" என்கிறது அவாங்யக சூத்திரம். 5/28
நந்தர்களை "அனாதகுலத்தவா" என்கிறது பௌத்த நூலான மகாவம்சம்.
நந்தர்களின் ஆட்சியை நிறுவியவர்கள் ஒரு தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்கிறார் கர்டியஸ் என்ற கிரேக்க அறிஞர்.
ஆக... வட இந்தியாவில் முதல்முதலாக ஒரு பேரரசை நிறுவியது நாவீதர் குலத்தைச் சேர்ந்த ஒரு சூத்திரன். 6/28
அவமானத்துடன் அவிழ்ந்த குடுமியுடன் கங்கை கரையில் நடந்த சாணக்கியன் புல் தடுக்கி விழுந்தான், சினம் கொண்ட சாணக்கியன் அந்த புற்களை தீயிட்டு சுட்டு பொசுக்கி சாம்பாலாக்கி கங்கையில் கரைத்தான் இதனை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த சந்திரகுப்தன், ‘என்ன ஒரு அற்புத சக்தி!’ என்று… 7/28
வியந்து சாணக்கியனைப் பற்றி கேட்க இருவரும் தத்தமது கதைகளை பறிமாறிக் கொண்டனர்.
சந்திரகுப்தன் பற்றிய தெளிவான எந்த வரலாறும் இல்லை ஆனால் சாணக்கியனுக்காக புனையப்பட்ட கதைகளில் நந்தர்களின் பங்காளி உறவு என்று சரடு விட்ட கதைகள் ஏராளமாக இருக்கிறது! 8/28
சரி, யார் இந்த மௌரியர்கள் / சந்திரகுப்தன்?

மயில் வளர்க்கும் இனக்குழுவினர் என்று கூறப்படுகிறது, பாலி, பிராகிருத மொழிகளில் மயிலுக்கு மயூரா என்று பெயர் மௌரிய நாணயங்களிலும் மயில் சின்னம் இருக்கிறது எனவே "மௌரியர்" பெயர் வந்திருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் முடிவு. 9/28
கவனிக்க... சனாதன வர்ணத்தின்படி இந்தியாவின் முதல் பேரரசராக இருந்த நந்தவம்ச ஆட்சியும் சூத்திரர் ஆண்ட ஆட்சி.

கி.மு 322 முதல் கி. மு 180 வரையில் இந்தியாவின் மிகப்பெரிய புகழ்பெற்ற மௌரிய பேரரசும் சூத்திரன் ஆட்சியே! 10/28
இப்படி புகழ்பெற்ற ஆட்சியை தோற்றுவித்த சந்திரகுப்தனது தோற்றம் பற்றிய தெளிவான வரலாற்றுக் குறிப்புகள் இல்லை, பொய் கதைகள் புராணங்கள் எழுதியே பிழைக்கும் கூட்டம் அதுவும் பார்ப்பன பங்களிப்பு இல்லாமல் இவ்வளவு புகழ்வாய்த பேரரசு இருந்தால் பொறுக்குமா? 11/28
அதனால்தான் அவிழ்ந்தது பார்ப்பனிய சாணக்கிய குடுமி! அவிழ்ந்த குடுமியை இன்றுவரை கட்டாமல் கட்டுக்கதைகளை, பொய் புராணங்களை எழுதிக் கொண்டே இருக்கிறது பார்ப்பனீயம்.12/28
அர்த்த சாஸ்திரம் எழுதியது சாணக்கியனா? கவுடில்யனா? விஷ்ணு குப்தனா?

அர்த்த சாஸ்திரம் பற்றி பல்வேறு புராணங்களில் பல இடங்களில் வருகிறது ஆனால் அதை எழுதியவர் பற்றியக் குறிப்புகள் எங்கும் இல்லை. 13/28
அர்த்த சாஸ்திர ஓலைச்சுவடிகளை 1904ல் பெயர் தெரியாத ஒரு தஞ்சாவூர் பார்ப்பனர் தன்னிடம் தந்ததாக அதைத் தொகுத்த சாமா சாஸ்திரிகள் எழுதியிருக்கிறார், கிமு நான்காம் நூற்றாண்டில் இருந்து எப்படி யார் கண்ணிலும் படாமல் / கெடாமல் இருக்கும்?
அது என்ன இரும்பால் செய்த சுவடியா? 14/28
ஏன் 1904ல் அர்த்த சாஸ்திரம் கண்டெடுக்கப்பட்டது – திடீரென்று முளைத்தது? 15/28
குப்தர்கள் காலத்தில் (கி பி 320 – 551) ஏராளமான இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட புராண, வேதங்களை மீள்பதிவு செய்தவர்கள் ஏன் அர்த்த சாஸ்த்திரத்தை பற்றியோ, சாணக்கியன் பற்றியோ, மௌரிய பேரரசு பற்றியோ எந்த ஒரு குறிப்பு கூட எழுதமுடியாமல் போனது? 16/28
காரணம், 1837 ஆம் ஆண்டு ஜேம்ஸ் பிரின்செப் என்பவரால் முதன்முதலில் அசோகரது கல்வெட்டுகள் படித்தறியப்பட்டன. பாலிமொழியினும், ஒரு சில இடங்களில் பிராகிருத மொழியிலும் அவை எழுதப்பட்டுள்ளன. பிரம்மி வரிவடிவத்தில் அவை அமைந்துள்ளன. 17/28
1837 ஆம் ஆண்டு ஜேம்ஸ் பிரின்செப் இந்த கல்வெட்டுகளைப் படித்து சொல்லும் வரையில், சந்திரகுப்தன், பிந்துசாரர், அசகோர், மௌரிய பேரரசு பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை, மகாவம்சத்தில் மட்டும் சிலபல குறிப்புகள் இருக்கிறது, மகாவம்சம் பௌத்த நூல் என்பதாலும், அது பாலி மொழியில்… 18/28
இருந்ததாலும் அதைப் படித்தறிய குப்தகள் காலத்தில் புராணங்களை மீள்பதிவு செய்தவர்கள் தவறிவிட்டனர்.

இல்லையென்றால் குப்தர்கள் காலத்தில் மௌரிய பேரரசு பற்றிய பொய் புருடா புராணங்கள் வந்திருக்கும், சாணக்கியனோ அல்லது வேறு பெயரில் ஒரு பார்ப்பனனை கட்டுகதைகட்டி புணைந்திருப்பார்கள். 19/28
அர்த்த சாஸ்திரத்தில் பல இடங்களில் "இது கவுடில்யன் கூற்று" என்று உள்ளது.
கவுடில்யன் என்றால் "சூதுக்காரன்" என்று பொருள் ( புரிகிறதா சாணக்கியனுக்கு ஏன் அந்த குரூரமான முகத்தை தந்தார்கள் என்று! 20/28
நிற்க.... கௌடில்ய கோத்ரம் என்பது வேறு...
அது பிராமனர்களின் கோத்ரத்தில் ஒரு பிரிவு, கவுடில்யன் என்ற பெயர் இப்படித்தான் வந்தது என்றால், கௌடில்ய கோத்ரத்தில் பிறந்தவகள் சூதுக்காரர்கள், கொடுமதியாளர்கள் என்று ஒப்புக்கொள்வார்களா?
21/28
அர்த்த சாஸ்திரத்தில் பல்வேறு நகரங்கள், நாடுகள், அரசர்கள் பெயர் வருகிறது ஆனால் சாணக்கியனால் நிறுவப்பட்டு அவன் அமைச்சராக இருந்த பேரரசின் சந்திரகுப்த மௌரியர் அல்லது அவரது மகன் பிந்துசாரர் பெயரோ அவர்கள் ஆண்ட நாட்டின் பெயரோ தலைநகரான பாடலிபுத்திரம் பெயரோ ஏன் இல்லை? 22/28
6000 சுலோகங்கள் கொண்ட ஒரு புத்தகத்தில் ஒரு இடத்தில் கூடவா இடம் இல்லை?
மாறாக கிரேக்க நூல்களில் சந்திரகுப்த மௌரியர் பெயரும் அவரது அரசைப் பற்றிய குறிப்புகளும் ஏராளமாய் இருக்கின்றதே?! 23/28
இந்திய புராணங்களில், காளிதாசன் எழுதிய குமார சம்பவத்தில், அர்த்த சாஸ்திரம் பெயர் வருகிறது ஆனால் சாணக்கியன் பெயர் ஏன் இல்லை?கிரேக்க நூல்களிலோ, மெகஸ்தனீஸ் குறிப்புகளிலோ அவ்வளவு அரசியல் தந்திரங்களும் பெருமையும் மிக்க சாணக்கியன் பெயர் ஏன் இல்லை? 24/28
விஷ்ணு குப்தன் பெயர் அர்த்த சாஸ்திரத்தில் வருகிறது, விஷ்ணு குப்தன் எப்படி சாணக்கியன் ஆவான்?

அர்த்த சாஸ்திரம் நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை, சாணக்கியன் என்ற ஒருவன் வாழ்ந்ததற்கான எந்த சான்றுகளும் வரலாற்றில் எந்த குறிப்பிலும் இல்லை. 25/28
ஆனால் சாணக்கியன் பற்றிய சரடுகள், பொய் புராணங்கள் ஏராளமாய் கொட்டிக் கிடக்கிறது அதையெல்லாம் எழுதி உங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. 26/28
சாணக்கியன் என்பவன் அர்த்த சாஸ்த்திரத்தை கண்டெடுத்ததாக சொல்லி அதை 1909 ல் பதுப்பித்த தஞ்சை பார்ப்பனர் சாமா சாஸ்திரிகள் கண்டுப்பிடிப்பும் இல்லை!
சாணக்கியன் என்பவன் பார்ப்பன நலனுக்காக வழக்கம்போல் பார்ப்பனர்களால் கடைந்தெடுத்த ஒரு கட்டுக்கதை! 27/28
சாணக்கியனால் எழுதப்பட்ட நூல்கள் என்று சொல்வெதெல்லாம் 1909 பிறகு பலராலும் எழதப்பட்ட பொய்களின் தொகுப்பே ஆகும்.

ஆனால் இன்றைய நவீன சாணக்கியனுக்கு இரத்தம் சொட்ட சொட்ட உண்மையான வரலாறு உண்டு அதற்கு நாமே சாட்சிகளாகி நிற்பதுதான் காலக்கொடுமை! 28/28
*அசோகர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ராஜ்ராஜே

ராஜ்ராஜே Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @macblaze2020

26 Oct
தமிழனுக்கு கடவுள் உண்டா?

உலகத்தில் மற்ற மதக்காரர்களுடைய கடவுளைப்பற்றிக் கவனித்துப் பார்த்தாலும், இவ்வளவு ஆபாசமாக இல்லா விட்டாலும், யுக்திக்கோ, வாதத்திற்கோ நிற்க முடியாமல் அவைகளுக்கு பெரிதும் பரிகசிக்கத்தக்கதாய்த் தானிருக்கின்றது. அதாவது, (1/29)
உலக சிருஷ்டிக்கு கடவுளைப் பொறுப்பாக்கி அதனோடு கடவுளைப் பொருத்துகிறபோது எல்லாக் கடவுள்களின் யோக்கியதைகளும் ஒரே மாதிரியாகத் தானிருக்கின்றன. உதாரணமாக, இந்துமதத்தில் உலக சிருஷ்டிக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் சொல்லுகிறபோது, கடவுள் முதலில் தண்ணீரை உண்டாக்கி, (2/29)
அதன்மீது இருந்து கொண்டு அதில் ஒரு விதையைப் போட்டு. அந்த வித்திலிருந்து உலகத்தை உண்டாக்கி அவ்வுலகத்திலிருந்து பிர்மாவை சிருஷ்டித்து, அந்த பிர்மா அந்த உலகத்தை இரண்டாக்கி ஒன்றைச் சுவர்க்கமாகவும், மற்றொன்றை பூலோகமாகவும் செய்து, அந்த பூலோகத்தில் பஞ்ச பூதங்களையுண்டாக்கி, (3/29)
Read 30 tweets
25 Oct
லீலா... லீலா... பஞ்சாப் லீலா...
அடங்காத லீலா....
மக்களின் உண்மையான லீலா
Read 4 tweets
25 Oct
நவராத்திரியாம்!

இந்து மதத்தில் பொழுது விடிந்து பொழுது போனால், இந்த மதத் தொல்லைதான்; ஓயாப் பண்டிகைகள்தான், சடங்குக் குவியல்கள்தான்.
மனிதனின் அறிவு வேறு எந்த உருப்படியான செய லிலும் பாவக் கூடாது - இந்தச் சகதிகளுக்குள் முடங்கி முணுகிக் கிடப்பதுதான் மனித வாழ்வு என்று ஆக்கிவிட்டது இந்த இந்து மதம்.
ஒவ்வொரு மாதமும் பண்டிகை மட்டுமல்ல; ஒவ்வொரு வாரத்திலும்கூட விரதம், படையல் என்று பார்ப்பனப் பிடுங்கல் சுரண்டலுக்கு வழிவகுப்பவை யாகும்.
Read 19 tweets
24 Oct
உங்கள் மனைவி திருமணத்துக்கு முன்பு விபச்சாரி ???

மந்திரம்: ஸோம ப்ரதமோ விவித கந்தர்வ விவிவத உத்தர!
த்ருதியோ அக்னிஷ்டே பதி துரியஸ்தே மநுஷ்ஐயா!!
ஸோமோ ததத் கந்தர்வாய கந்தர்வோ ததத் அக்னயே!
ரயிம்ச புக்ராம் சாசாத் அக்னிர் மஹ்யம் அதோ இமாம்
பொருள்: அதாவது மணப்பெண்ணை சோமன் முதலில் மனைவியாக அடைந்தான். பிறகு கந்தர்வன் அடைந்தான். இவளுடைய மூன்றாவது கணவன் அக்னி, நான்காவது கணவன் மனித சாதியில் பிறந்தவன். சோமன் உன்னை (மணப்பெண்ணை) கந்தர்வனுக்குக் கொடுத்தான்....
கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான். அக்னிதேவன் இவளுக்குச் செல்வத்தையும் குழந்தையையும் கொடுத்த பிறகு எனக்குத் தந்தான்... என்பதே புரோகிதர் கூற அதை திருப்பி மணமகன் கூறும் மந்திரத்தின் பொருள்
Read 8 tweets
24 Oct
பெண்களுக்கு தனி அடையாளங்களையோ சுயேச்சையான செயல்பாடுகளையோ மனு தர்மம் நிராகரிக்கிறது. அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை அது அனுமதிக்கவில்லை.
9.3: இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர்.
5.150: வீட்டு வேலையில் திறமும் மகிழ்வும் பொருள்களைப் பேணுதலும் சிக்கனமும் பொருந்தியிருக்க வேண்டும்.

5.147: எந்தப் பருவத்தினளாயினும் தனது இல்லத்தில் கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது.
Read 17 tweets
24 Oct
பெரியார் எழுதிய...

மனு நீதி: ஜாதிக்கொரு நீதி

பட நூலாக jpg format ல்

14 பக்கங்கள் மட்டுமே...

#RejectManu #சனாதனம்_வீழ்த்துவோம்
உலகில் எந்த நாட்டிலாவது சொந்தநாட்டு மக்களை, உழைக்கும் மக்களை, வேறு இனத்தவர் தங்களது வைப்பாட்டி மக்கள் என்று அழைக்கக்கூடிய அநீதி எங்காவது உண்டா?

#RejectManu #சனாதனம்_வீழ்த்துவோம்
இந்த ரிஷிகளின் மூலம்(பிறப்பு) எல்லாம் இயற்கைக்கு மாறானதும், ஆபாசமும் அசிங்கமும் நிறைந்தவையாகவும் அறிவுக்குப் பொருந்தாதனவாகவும் உள்ளன. எடுத்துக்காட்டாக...

#RejectManu #சனாதனம்_வீழ்த்துவோம்
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!