புதுடில்லி: தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா உள்ளிட்டோர் மீதான, '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கின் விசாரணை, டில்லி உயர் நீதிமன்றத்தின் வேறு நீதிபதிக்கு மாறுகிறது.
காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஏலம் விடுவதில் மோசடி நடந்ததாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன. இது தொடர்பாக விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், 2017, டிச., 21ல் தீர்ப்பு அளித்தது.
வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகள், கனிமொழி உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில், 2018ல், டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை, நீதிபதி, பிரிஜேஷ் சேத்தி விசாரித்து வருகிறார்.
வரும், 30ம் தேதியுடன் அவர் பதவி ஓய்வு பெறுகிறார்.
அதற்குள் வழக்கை விசாரிக்க முடியாது என்பதால், வேறு நீதிபதிக்கு மாற்றும்படி, தலைமை நீதிபதிக்கு, நீதிபதி, பிரிஜேஷ் சேத்தி பரிந்துரை செய்துள்ளார்.
இந்த வழக்கு தற்போது, தினமும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பரிந்துரையை அடுத்து, டிச., 1 முதல், வேறு நீதிபதி அல்லது அமர்வு முன், வழக்கின் விசாரணை நடக்க உள்ளது.
இந்நிலையில், 'ஊழல் தடுப்புச் சட்டம், 2018ல் திருத்தப்பட்டது. அதில், இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
அதனால், தங்கள் மீதான, மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல' என, ராஜா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
'ஏற்கனவே இருந்த சட்டத்தின்கீழ் வழக்கு நடந்து வருவதால் விசாரணை தொடரும். புதிய சட்டத் திருத்தம், ஏற்கனவே உள்ள வழக்குகளுக்கு பொருந்தாது' என, மனுக்களை தள்ளுபடி செய்தார், நீதிபதி சேத்தி.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
லக்னோ : திருமணத்துக்காக மதம் மாற்றம் செய்தால், 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு, உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநில அமைச்சரவை கூட்டம், நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங் கூறியதாவது:
திருமணம் செய்வதற்காக, மதம் மாற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் காதலித்து, கட்டாயப்படுத்தி, மதமாற்றம் செய்யப்படுகிறது. இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது.
உலகிலேயே பழைய சடங்கு ஒன்றைப் பினபற்றும் ஒரே இனம் பிராமணர்கள்; அவர்கள் உலகிலேயே பழைய சடங்கைச் செய்வதாக விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடியாக்கள் உரைக்கும்.
அது என்ன பழைய சடங்கு?
சந்தியாவதந்தனம்!
அதில் அவன் ஒரு நாளைக்கு மூன்று முறை சுமார் 100 கடவுளர், ரிஷிகள் பெயரைச் சொல்லுகிறான்.
தொல்காப்பியம் உரைக்கும் தமிழ் கடவுள்கள் இந்திரன், வருணன், விஷ்ணு பெயர்களையும் சங்கத் தமிழ் நூல்கள் போற்றும் சப்த ரிஷிக்களையும் , வரலாற்றுப் புருஷர்களான ஜனமேஜயன் முதலியோர் பெயர்களையும் சொல்கிறான்.
ஒருவர் ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் என அனைத்தும் தீருவதற்கு ;
சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப் போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும்.
அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.
அப்படித் தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக் காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.
எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும்.
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
தி.நாராயணன், பா.ஜ., செய்தி தொடர்பாளர், சென்னையிலிருந்து எழுதுகிறார் : மொழி அரசியலை முன்னெடுக்கும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு சில கேள்விகள்...
மத்திய அரசு ஊழியரின் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது, கேந்திர வித்யாலயா பள்ளி. பணி மாற்றம் அடிப்படையில், அவர்களின் குழந்தைகள் எங்கு சென்றாலும், ஒரே சீரான பாடத் திட்டத்தில் பயில வேண்டும் என்பதே, அதன் நோக்கம். இது, உங்களுக்கு தெரியுமா?
ஒரு வகுப்பில், 20 மாணவர்கள் படித்தால் மட்டுமே, கே.வி., பள்ளியில், மூன்றாவது மொழி பயிற்றுவிக்கப்படும் என்ற விதி, தி.மு.க., மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருந்தபோது இருந்ததே... அப்போது ஏன், அதை எதிர்க்கவில்லை?
தவறாக பிரசாரம் செய்ய சதி நடத்திய ஜே.என்.யு., மாணவர் திட்டம் அம்பலம்
புதுடில்லி : இந்தியாவில், சிறுபான்மையினருக்கு துன்புறுத்தல்கள் இழைக்கப்படுவதாக, உலக அளவில் தவறாக பிரசாரம் செய்யும் நோக்கத்தில்,
அதிபர் டிரம்ப் வருகையின்போது, டில்லியில் வன்முறைகளை அரங்கேற்ற ஜே.என்.யு., மாணவர் காலித் திட்டமிட்டது,
தெரியவந்துள்ளது.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
குற்றப்பத்திரிகைஇங்கு, மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, கடந்த பிப்ரவரி, 24ம் தேதி நடந்த போராட்டத்தின்போது வன்முறைகள் வெடித்தன. அதில், 53 பேர் உயிரிழந்தனர். இதில் தொடர்புடைய, 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.