கோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம்: உயர்நீதிமன்றம் தடை
சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை, கோயில் நிலத்தில் அமைக்கும் பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் சிவன் கோயிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு விசாரித்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் அமைக்க கோயில் நிலத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பாக அக்.,29 ல் ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்.
ஆனால், அக்கூட்டம் நடப்பதற்கு 6 நாட்களுக்கு முன்பே முதல்வர், கலெக்டர் அலுவலகம் அமைக்க அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கிவிட்டன. 100 கோடி ரூபாய் மதிப்பு நிலத்தை அரசுக்கு ரூ.1 கோடியே 98 லட்சம் ரூபாய்க்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்'' என வாதிட்டார்.
ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கருத்து கேட்பு கூட்டத்தின் அடிப்படையில் கோயில் நிலத்தை அரசுக்கு சொந்தமாக வழங்குவதற்கு பதிலாக குத்தகைக்கு வழங்க ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் முடிவு செய்துள்ளார்.
பரிந்துரையின் மீது அரசின் முடிவுக்கு காத்திருப்பதாக விளக்கமளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக டிச.,9 ம் தேதிக்குள் தமிழக அரசு மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு, அதுவரை கலெக்டர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க இடைக்கால தடை விதித்தார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்த கோயில் செங்கல்பட்டுக்கு அருகில் "நென்மேலி" என்ற சிறிய ஊரில் அமைந்துள்ளது.
இந்த ஸ்தலத்தின் பெருமாள் - " ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ". இந்த கோயிலின் உற்சவர் - " ஸ்ரீ ஸ்ரதா சம்ரக்ஷனா நாராயணன் ".
🙏🇮🇳1
இந்த ஸ்தலத்தின் சிறப்புகள் :
நம்முடைய பித்ருக்களுக்கு நாம் ஸ்ரார்த்தம் செய்ய முடியாவிட்டால், பெருமாள் நம் சார்பில் தானே ஸ்ரார்த்தம் செய்கிறார்.
🙏🇮🇳2
தற்கொலை, கொலை, விபத்து போன்ற வகையில் துர்மரணம் அடைந்த முன்னோர்களுக்கும் நம் சார்பில் ஸ்ரார்த்தம் செய்ய இந்த ஸ்தலத்தின் பெருமாள் ஸ்ரீ ஸ்ரார்த்தா சம்ரக்ஷனா நாராயணணை நாடினால் பெருமாள் நம் சார்பில் தானே ஸ்ரார்த்தம் செய்கிறார்.
மெஹபூபா வெற்றிக்காக பயங்கரவாதிகளின் உதவி நாடல் : என்.ஐ.ஏ., அதிர்ச்சி தகவல்
ஸ்ரீநகர்: காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். அவரின் வெற்றிக்காக ஹிஸ்புல் முஜாஹிதின் பயங்கரவாதிகளின் உதவியை அவரது கட்சி இளைஞரணி தலைவர் நாடியதாக என்.ஐ.ஏ., தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்து ரத்து செய்யப் பட்டது. முன்னதாக மெஹபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தியது.
இந்துக்களே ஒன்று சேருங்கள் : டிரெண்டிங்கில் அழைப்பு
புதுடில்லி : சமூகவலைதளமான டுவிட்டரில் 'இந்துக்களே ஒன்று சேருங்கள்' என்ற பெயரில் #joinhinduecosystem என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது.
சினிமா மற்றும் வெப்சீரிஸ்களில் தொடர்ந்து இந்து கடவுள்கள், அவர்களின் நம்பிக்கையை பொய்யாக்கும் விதமான காட்சிகள் அதிகளவில் இடம் பெறுகின்றன. அதிலும் தணிக்கை இல்லாத வெப்சீரிஸ்களில் இந்த காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றன.
சமீபத்தில் கூட ஒரு வெப்சீரிஸில் கோவிலில் வைத்து ஹீரோ, ஹீரோயின் முத்தமிட்ட காட்சி இடம் பெற்று சர்ச்சையானதுடன், அந்த வெப்சீரிஸ் குழு மீது வழக்கும் பதிவானது. மேலும் மறைமுகமாக லவ்-ஜிகாத் பிரச்சாரமும் அதிகமாகி வருகிறது.
நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...
இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது...
இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...