பாரதப் போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இடையே நடந்த யுத்தத்தில், தேரிலிருந்தபடியே அர்ஜுனன் ஓர் அம்பை எடுத்து கர்ணனது தேர் மீது எய்தான்.
அந்த அம்பின் வீரியத்தால், கர்ணனது தேர் சற்று நிலைகுலைந்து, நான்கு அடி பின்னோக்கி நகர்ந்தது.
இதனால் கோபமுற்றான் கர்ணன். மறுகணம் அவன் ஆக்ரோஷத்துடன் அம்பு ஒன்றை எடுத்து அர்ஜுனனின் தேர்மீது எய்தான். அதனால் அர்ஜுனனின் தேர் ஓர் அடி பின்வாங்கியது.
அப்போது அர்ஜுனன் அருகிலிருந்த கண்ணனிடம் பெருமிதம் பொங்க,
"பார்த்தாயா கிருஷ்ணா! நான் எய்த ஒரே அம்பு, கர்ணனின் தேரை நான்கு அடி பின்னோக்கி நகர்த்தி விட்டது. ஆனால் பதிலுக்கு அவன் எய்த அம்பு, எனது தேரை ஒரே அடி மட்டுமே பின்னுக்கு நகர்த்தியது!’’ என்றான். அவனை இடைமறித்த கண்ணபிரான், ‘‘அர்ஜுனா! இதை நீ பெருமைக்குரிய செயலாகக் கருதாதே"
என்று வாய் விட்டுச்சிரித்தார் கண்ணபிரான். எரிச்சலுற்ற அர்ஜுனன்,"கிருஷ்ணா ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டான்.
‘"உனது அறியாமையை எண்ணி" என்று கண்ணபிரான் அமைதியாகக் கூறி பின்னர் விளக்கினார்.
"உனது இந்தத்தேரின் மேலே என்ன இருக்கிறதென்று தெரியுமா? சகல வல்லமையும்,பலமும்,பராக்கிரமும் பொருந்திய ஸ்ரீஆஞ்சநேயரின் கொடி.அவர் இந்தத்தேரில் அமர்ந்து, நம்மைக் காத்து வருகிறார். மேலும் உலகைக் காக்கும் பரந்தாமனான நான், வில் வித்தையில் நிகரற்றவனான நீ.இப்படி மூன்று பேர் இதில் உள்ளோம்.
ஆனால், இதையெல்லாம் மீறி, ஓர் அம்பின் மூலம் தேரை ஓரடி நகர்த்தி விட்டான் கர்ணன். அதனால் உண்மையில் அவன்தான் பெருமைக்குரியவன்." கண்ணனின் விளக்கம் கேட்டு அர்ஜுனனின் தலை வெட்கத்தால் கவிழ்ந்தது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு சமயம் அர்ஜுனனும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்துக் கொண்டிருந்தது. கிருஷ்ணர் அதைப் பார்த்தார். அதை அர்ஜுனனுக்கும் காட்டினார். "அர்ஜுனா,அது புறா தானே?" என்று கேட்டார் கிருஷ்ணர்.
ஆமாம் கிருஷ்ணா,அது புறா தான்"என்றான் அர்ஜுனன். சில விநாடிகளுக்குப் பிறகு, "பார்த்தா,எனக்கென்னவோ அந்தப் பறவை பருந்தைப் போல் தெரிகிறது" என்றார் கிருஷ்ணர். அடுத்த விநாடியே, "ஆமாம்...ஆமாம்...அது பருந்து தான்" என்று சொன்னான் அர்ஜுனன்.
மேலும் சில விநாடிகள் கழித்து, "அந்தப் பறவையை உற்றுப் பார்த்தால்,அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது" என்று
கிருஷ்ணர் சொல்ல, கொஞ்சமும் தாமதிக்காமல், "தாங்கள் சொல்வது சரிதான், அது கிளி தான்" என பதிலளித்தான் அர்ஜுனன்.
கையில் செம்பு காப்பு அணிவதால் உடலில் ஏற்படும் அற்புத பலன்கள்:
செம்பு காப்பு அணிவது என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கமாகும். செம்பு காப்பு அணிவது நமது சருமத்திற்கும், இரத்த ஓட்டத்திற்கும் மிகவும் அவசியமானது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
காப்பர்
தாமிரம் என்று அழைக்கப்படும் செம்பானது, உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். நட்ஸ், மீன் போன்ற உணவுகளில் தாமிரம் இயற்கையாகவே உள்ளது. அதிகளவு ஜிங்க் மற்றும் வைட்டமின் சி எடுத்துக்கொள்வது உங்கள் உடலில் தாமிர குறைபாட்டை ஏற்படுத்தும்.
அதிகளவு மது அருந்துவதும் தாமிர குறைபாட்டை ஏற்படுத்தும். செம்பு காப்பு அணிவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
ஆர்திரிடிஸ் :
ஆய்வுகளின் படி செம்பு காப்பு அணிவது உங்கள் சருமம், தாமிரத்தை உறிஞ்சும் அளவை அதிகரிக்கிறது.
தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது.
முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்.ஆனால் இப்போது டைனிங் டேபிள். முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதன் நோக்கமென்ன?சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.
சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால், ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.
பாண்டவர் தூதனாக கிருஷ்ணர், அஸ்தினாபுரம் சென்றான். பரந்தாமன் வருகை அறிந்த ஆன்றோர் அனைவரும் அவனை எதிர்கொண்டனர். கண்ணன் இராசவீதி வழியாக வந்து கொண்டிருந்தான். வீதியின் இருமருங்கிலும் வானளாவிய மாளிகைகள் கண்ணனை வரவேற்பதற்காக அலங்கரிக்கப்பட்டு விளங்கின.
முதல் மாளிகையைக்கண்ட கண்ணன் "இது யாருடையது?" என்றான். "என்னுடையது" என்று பதில் வந்தது. பதில் சொன்னவன் துரியோதனன். இப்படியே ஒவ்வொரு மாளிகையையும் கண்ணன் கேட்டுக் கொண்டே வந்தான். அவனைத் தொடர்ந்து எதிர் கொண்டவர்கள், தங்கள் மாளிகையை என்னுடையது என்னுடையது என்றே சுட்டிக் காட்டினர்.
துரோணர்,வீடுமர்,கிருபர்,துச்சாதனன்,கர்ணன் முதலியோர் அனைவரும் அவ்வாறு கூறியவருள் முக்கியமானவர்கள்.
கண்ணன் அவர்கள் வரவேற்பைப் பொருட்படுத்தாமல், சென்றுகொண்டேயிருந்தான். வீதியின் கடைசிப் பகுதிக்கு வந்தாகிவிட்டது. அங்கே ஒரு கூரைச் சிறுகுடில். தவக்குடில் போல விளங்கியது.
ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார்.அவர் ஒரு நாள், இறைவனிடம் “எல்லா நேரமும் இப்படி நின்கிறாயே, உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன். நீ
ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்டார்.
இறைவன், “சரி.எனக்கு பதிலாக நாளை ஒருநாள் நீ நில். ஆனால், ஒரு முக்கிய நிபந்தனை.என்ன நடந்தாலும்,நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும்.யாருக்கும் பதில்சொல்லக்கூடாது எனக் கூறினார். அதற்கு அந்தப் பணியாளும் சம்மதித்தார். அடுத்த நாள்,இருவரும் தங்கள் தோற்றத்தை மாற்றிக்கொண்டனர்.
முதலில், ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டி, ஒரு மிகப்பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தினான்.அவன் திரும்பிச் செல்லும் போது, தவறுதலாக
தனது பணப்பையை தவற விட்டுச்சென்றான்.
கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். திங்கட்கிழமை தோறும் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படும். ‘சோமன்’ என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள்படும். அத்தோடு சந்திரன் என்ற பொருளும் உண்டு.
சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது. அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. கார்த்திகை மாத முதல் சோம வாரத்தில் இருந்து சோம வார விரதத்தை தொடங்குதல் வேண்டும்.
இந்த விரதத்தை ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்கலாம்.
கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். சோமவாரம் என்பது வார நாட்களில் திங்கட்கிழமையைக் குறிப்பது. சந்திரன் கடைபிடித்து மேன்மை பெற்ற விரதமிது.