ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
*சிவவாக்கியம்* 3
அருட்பெருஞ் சோதியான ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள்.
Retweet
அவன் உங்கள் உடம்பின் உள்ளே கலந்து சோதியாக ஓடி உலாவுவதைக் காணாது, அவனையே நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய் கொண்டிருக்கிறது. அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதை,
மாண்டு போகும் மனிதர்கள் எண்ணற்ற கோடி பெறற்கரிய இம் மானிடப் பிறவியை பெற்ற இவர்கள் என்றுதான் சோதியாக இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோ? தம்முளே உறையும் உயிரை அறியாமல் அவ்வுயிரை ஈசனிடம் சேர்த்து பிறவா நிலை பெற முயலாமல்
அவனை அகிலமெங்கும் தேடி ஓடி நாடி வாடி இறந்து போகின்றனரே.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இங்கு மூலவர் அர்த்தநாரீஸ்வரரும், தாயார் பாகம்பிரியாளும் அருள்பாலித்து வருகிறார்கள்.
இந்தக் கோயிலில் என்ன அதிசயம் என்றால்....இங்கு மார்கழி மாதம் மட்டும் பிருங்கி முனிவர் வழிபட்ட மரகத லிங்கத்தை வைத்து வழிபடப்படுகிறதாம்.
மற்ற மாதங்களில் அதற்குப் பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து
வழிபடுகிறார்கள். இதற்காக, குறைந்தது 5 மணிக்குள்ளாக
கோவிலில் இருக்க வேண்டும்.
பிருங்கி முனிவர் வழிபட்ட மரகத லிங்கம்
முன்பு ஒரு காலத்தில் ஆதிஷேசனும் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என அறிய இருவரும் போர் புரிந்தனர். அந்தப் போரினால் உலகில் அதிக பேரழிவுகள் ஏற்பட்டன.
40 ஏக்கர் பரப்பில் பரந்து விளங்கும் நடராஜர் கோயிலிலிருந்து உபரிநீரை வெளியேற்ற பூமிக்கடியில் சுரங்க நீர்வடிகால்பாதை அமைக்கப்பட்டு உள்ளதை இப்போது பார்ப்போம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மழைக் காலங்களில் வரும் அதிகப்படியான உபரி நீரினை வெளியேற்றுவதற்காக கிபி 10-13 நூற்றாண்டில் பூமிக்கடியில் கால்வாய் அமைத்து சுமார் 1200 மீட்ட தூரத்திற்கு அப்பால் நீரினை கொண்டு சென்று வெளியேற்றி உள்ளனர் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்கள்
ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
பூமிக்கடியில் கால்வாய் அமைப்பு: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள யானைக்கால் மண்டபத்தின் மேற்கு பகுதியில் இருந்து நிலவறை கால்வாய் வழியாக மழைக் காலங்களில் வரும் உபரிநீரினை கோயிலின் நேர் வடக்கே அமைந்துள்ள தில்லைக் காளிக்கோயில் சிவப்பிரியை குளத்தை
வியாழனன்று பிரதோஷ வழிபாடு அமைதல் குருகுந்தள சக்திகளை, உத்தமர்களின் நல்லாசி நிரம்பிய நல்வரங்களாகப் பெற்றுத் தருவதாகும்.
குந்தளம் எனில் முன்னும் இருப்பும், பின்னுமாகப் பொலிந்து நல்வரங்கள் நன்கு விருத்தி அடைய உதவுவதாகும்.
🌿குருவாரப் பிரதோஷ பூஜா பலன்கள்🌿
முன்னுமாக - முன்னோர்களின் நன்னிலைகளுக்கும்,
இருப்பாக - அதாவது நடப்பு வாழ்வு வாழ்விற்கும்,
பின்னுமாக - வருங்காலச் சந்ததிகளுக்கும் நல்ல பலன்களைப் பெற்றுத் தருவதாகும்.
பிரதோஷ பூஜையின் மகத்துவம் யாதெனில், இதில் திரள்வது புண்ய சக்திகள் மட்டுமல்ல, இறைவனே பிரதோஷ நேரத்தில் திருநடனக் காட்சி அளிப்பதால், நடராஜத் தத்துவமாகிய - அனைத்தும் எப்போதும் இறையருளால்
தர்ப்பை புல் ஆதியிலிருந்து கிரியை மார்க்கங்களில் இறைவனுக்கும், ஜீவனுக்கும் தொடர்புடைய பாலமாக கருதப்படுகிறது.
தர்ப்பை புல்லின் அடிப்பாகம் பிரம்மனும், மத்தியில் விஷ்ணுவும் , நுனியில் ருத்ரனும் இருப்பதால் பரமபவித்ரமாகிய சுத்த சக்தியயன்று அறிக.
தர்ப்பபை சுபத்தை, புனிதத்தன்மையை தருவது, எல்லா பாவங்களையும் போக்க வல்லது.இந்த புல்லில் அதிகமான தாமிர சத்து உள்ளது.
நமது உடலில் வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது.
தருப்பைப்புல் புண்ணியபூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. இதற்கு அக்னிகற்பம் என்பது பெயர். இந்த புல் தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர்.