ரொம்ப ஒன்னும் குழப்பம் இல்லை, இரண்டு தடவை பார்த்தாலே நல்லா புரியுது (சிலவற்றை தவிர). என்னதான் டெக்னிகலா மிரட்டுனாலும், நோலனோட எல்லா கதையிலும் ஒரு எமோஷ்னல் டச் இருக்கும், இப்படத்தில் அது நட்பு - கம்மி எமோஷன் தான் ஆனா டச்சிங்கா இருக்கும். ஹீரோ உட்பட அத்தனை பேர் நடிப்பும் தரம் (2/4)
Prestige பார்த்தவர்களுக்கு தெரியும், அந்த படமே மேஜிக் ட்ரிக்ல வர்ர Pledge, Turn & The Prestige ன்ற மூன்று படிகள் மாதிரிதான் இருக்கும். அதேபோல இந்த படமே டைட்டில் மாதிரி ஆரம்பிச்ச இடத்திலேயே முடியும் (Inversion). இந்த மாதிரி படம், தலைவர் Nolanஐ தவிர யாராலும் எடுக்கவே முடியாது (3/4)
#TheHandmaiden 🔞 - பெரும் பணக்கார பெண்ணை, திருமணம் செய்து சொத்துக்களை அபகரிக்க நினைக்கிறான் ஒருவன். அதை நிறைவேற்ற அப்பெண்ணின் வேலைக்காரியை துரத்திவிட்டு, இவனுக்கு தெரிந்த பெண்ணை வேலைக்கு பரிந்துரைக்கிறான். அவள் அங்கு சேர்ந்து தன் வேலையை ஆரம்பிக்கிறாள் (1/4)
அவளது வேலையே, பணக்கார பெண்ணிற்கு இவன் மீது காதல் வர வைப்பது தான். ஆனால் அங்கு தான் ஒரு திருப்பம், கதை வேறு மாதிரி மாறும் - சரியென்று பார்க்க ஆரம்பித்தால் 20 நிமிடங்களில் இன்னொரு திருப்பம். இப்படி கடைசி வரை twists & turns தான். கதைக்கு ஏற்ற வேகம், but Gripping ஆன story. (2/4)
படத்தில் எனக்கு பிடித்ததே slownessம், கண்னை கவரும் visualsம் தான். Very rich setup, Artwork & Spellboundingly beautiful Cinematography. Different ஆன கதை + பல திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை. சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கவும். 🔞 Scenes பல இடங்களில் வரும் - கவனம்!
#WhyDontYouJustDie - காவலதிகாரியை கொல்ல, ஒருவன் பொய் சொல்லி அவர் வீட்டிற்குள் நுழைகிறான். சில நிமிடங்களில் அவர் அதை கண்டுபிடித்து, அடித்து உதைத்து காரணம் கேட்க அவனது பதில் - முதல் அதிர்ச்சி. அந்த காவலர் பற்றிய ரகசியம் தெரியும்போது இரண்டாவது அதிர்ச்சி. (1/3)
இப்படி அடுத்தடுத்து வர்ற ட்விஸ்ட்களும், மிரட்டலான மேக்கிங்கும் second halfல ஏற்படும் சிறு தொய்வை மறக்க வச்சிடும். உண்மையிலேயே வித்தியாசமான, ஸ்டைலிசான மேக்கிங், அதுக்கு பாப் மியூசிக்னு டேரன்டினோவை ஞாபகப்படுத்துகிறார் டைரக்டர். Future filmmakers பார்க்க வேண்டிய படம். (2/3)
IMDB Rating : 6.7
My Rating : 7.0
படம் தமிழில் இல்லை.
Russian audio with English subtitles only.
Download செய்ய கீழே உள்ள Telegram சேனல்களில் தேடவும். (3/3) நன்றி.
#Nepotism சுஷாந்த் சிங் இறந்ததுல இருந்து நம்ம அதிகம் கேள்விப்படுற வார்த்தை. அது பாலிவுட்டில மட்டும் தான் இருக்கா? , நம்ம தமிழ் சினிமாவிலுமா?. முதல்ல Nepotism னா என்ன? - அதைப் பற்றி என் கருத்து இந்த த்ரெட்ல!
(1/11)
#Nepotism - தம் வாரிசுகளுக்கு (மகன், மகள், அண்ணன், தங்கை) எந்த திறமையும் இல்லாத போதும், தன் செல்வாக்கை பயன்படுத்தி வாய்ப்புகள், ஆதாயங்கள் கிடைக்க செய்தல்!
#Favouritism - தனக்கு விருப்பமானவருக்கோ, தெரிந்தவருக்கோ எந்த தகுதியும் இல்லையென்றாலும் வாய்ப்புகள் கிடைக்கச் செய்வது (2/11)
ஆம் பாலிவுட்டில் Nepotism தலைவிரித்து ஆடுகிறது. Aliya bhatt, Tiger shroff போன்றவர்கள் கூட எதோ நடிப்பு, நடனம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எதுவுமே அறியாத Sonam Kapoor, Ananya pandey உள்ளிட்ட பலபேர் இன்னும் தாக்குப்பிடிக்க காரணம், அவர்களின் குடும்ப ஆதரவே! (3/11)
ஒரு classic movie, mass audience ஆலும் அதிகம் விரும்பப்படும் என்றால் அதில் முதலிடம் #மகாநதி க்கு தான்! என்னை பொறுத்தவரை கமல் எல்லா துறைகளிலும் உச்சம் தொட்டத் திரைப்படம் மகாநதி. வழக்கம் போல் இதிலும் தன்னை கடவுளாக சித்தரிக்கும் காட்சிகள் வைத்திருப்பார்..! #CineversalS_thread (1/6)
இராமாயணத்தில் வரும் சபரி எனும் பக்தை, ராமனுக்கு சுவையான பழங்களை மட்டுமே தரவேண்டும் என்று, தான் சுவைத்த இனிய பழங்களையே அவனுக்கு தருவாள். அதுபோல இக்காட்சியில் - மஞ்சு சரக்கை சுவைத்து தந்து, நான் ராமாயணத்தில் வரும் சபரி போல என்பார். Indirectly கமல் = ராமர் (2/6)
இப்படத்தின் ஒரு ஷாட்டில் தன்னை கருடாழ்வாராகவும் காட்டுவார். கமல் வைணவத்தை தங்குவதை தாண்டி, தன்னை வெறும் கடவுளாகவும் பலவிடத்தில், பல படங்களில் காட்டியுள்ளார். இப்படத்தில் sonakashi யிலுள்ள, பெண் 'நீங்க தெய்வம்யா' என்பார் - இயல்பாய் இருந்தாலும் கமலின் பல படங்களில் இதை காணலாம் (3/6)