எல்லாரும் 🔞+ திரைப்படங்கள் பற்றி பகிர்கிறதால நான் கொஞ்சம் வித்தியாசமா, Raw sex content வரும் தமிழ் நாவல்களை பகிரலாம்னு நினைக்கிறேன். நீங்களும் அதை வாசிச்சுட்டு, 'என்னடா இவ்வளவு பச்சையா இருக்குன்னு?' கேட்டிறாதீங்க. ஏன்னா, இலக்கியம்னா அப்பிடித்தான் இருக்கும்.
01. பொண்டாட்டி
ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, அம்மன் என எல்லாரையும் நாவலின் கதாபாத்திரங்கள் ஆக்கி இருக்கிறார். பல வகையான பெண்டாட்டிகளை நாவலில் உலாவ விட்டிருக்கிறார்.
02. நான் ஷர்மி வைரம்.
Call boy network, பெண்கள் மட்டும் பங்குகொள்ளும் பிரபலமான பார்ட்டிகள் என ஆரம்பிக்கும் நாவல் ஒரு வைரக்கொள்ளையுடன் முடிவடைகிறது.
03. ரகசியத்தின் அரூப நிழல்கள்.
ஒரு call boyயின் அனுபவங்கள் போல செல்லும் நாவல், பல tabooக்களை உடைத்து பேசுகிறது.
04. பெர்முடா
மூன்று ஜோடிகள். ஒவ்வொன்றிலும் வயதான ஆண், இளம் பெண். இந்த மூன்று ஜோடிகளையும் இணைக்கும் புள்ளி காமம். யார் யாரை எப்படி உபயோகப்படுத்துகிறார்கள், உபயோகப்படுகிறார்கள். இவர்களுக்கு இடையேயான உறவு சிக்கல்களை நாவல் பேசுகிறது.
05. பழி
வன்முறையும் காமமும் இரண்டறக் கலந்த ஒரு கூட்டத்தின் வாழ்க்கை முறையே இந்த நாவல். தமிழ் நாவல்களில் சொல்லப்படாத Contract killer ஒருவனை சுற்றி கதை நகர்கிறது.
06. ராஸ லீலா
கண்ணாயிரம் பெருமாள் எனும் ஓர் மனிதனின் இருபது வருட வாழ்வில் நடந்த சம்பவங்கள், வந்துபோன மனிதர்கள், ஒரு அரசாங்க அமைப்பு (தபால் துறை) தந்த அழுத்தத்தின் explodeதான் ராஸ லீலா.
07.தேகம்
ராஸ லீலாவின் miniatureதான் இந்த நாவல். பன்றியைக் கொல்வது எப்படி என்றும், சிலரை சித்ரவதை செய்வதைப் பற்றியும் இந்த நாவலில் விளக்கி இருக்கிறார்.
08. ஸீரோ டிகிரி
இது ஒரு Lipogrammatic நாவல். இதில் ஒரே ஒரு அத்தியாயத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் ‘ஒரு’ ‘ஒன்று’ என்ற இரண்டு வார்த்தைகளும், கமா, கேள்விக்குறி போன்ற நிறுத்தற்குறிகளும் பயன்படுத்தப்படவில்லை.
- சாரு நிவேதிதா
09. உப்பு நாய்கள்.
பெருநகர வெளியில் நிகழும் குற்றங்களையும் வாதைகளையும் இந்த நாவல் பேசுகிறது.
10.கொமோரா
தன் தந்தையை கொல்லும் பழி உணர்ச்சியுடன் இருக்கும் ஒருவனை மையமாக வைத்து சுற்றி பின்னப்பட்ட நாவல். இந்த நாவல்,'வெறுப்பின் சுவையை பேசுகிறது' என நாவலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
11.ரோலக்ஸ் வாட்ச்
தர்மம் எது? தர்மனிடம் கேட்கப்பட்ட அதே கேள்வி வேறொரு உலகத்தின் பின்னால் நின்று மறுபடியும் வலுவாகக் கேட்கப்படுகிறது. தர்மத்தின் மீது அக்கறையே இல்லாத நட்சத்திர வாழ்விற்குப் பின்னால் இருக்கிற சல்லித்தனங்களைக் காட்சிப்படுத்துவதன் வழியாக நாவல் பேசுகிறது.
இங்கு பதிவிடப்பட்டுள்ள நூல்களை தமிழில் எழுதி 🔍 தேடி எடுத்துப் படிக்கலாம்..!! t.me/ThamizhArivula…
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
KGF படத்துக்கெல்லாம் முன்னாடி தமிழ்ல வந்த , KGF பாணி action படம் தான் போர்க்களம் (2010). எதிரியின் கோட்டைக்குள்ள போய் எதிரிகளை அழிக்கிறதுதான் கதை. ஆடுகளம் கிஷோர் ஹீரோவா நடிச்சிருப்பாரு. இதுல ஹீரோக்கு கண்பார்வை குறைபாடு இருக்கும். செம மாஸ் படம். 2010ல ரிலீஸ் ஆனப்போ பார்த்தது.
போர்க்களம் (2010) படத்தை online platform எல்லாத்துலேயும் தேடியும், எங்கேயும் முழுசா கிடைக்கல. யாராச்சும் நல்ல Quality print வச்சிருந்தா லிங்க் share பண்ணுங்க. Trailer லையே செமையா மிரட்டி இருப்பாங்க. ரொம்ப வித்தியாசமாவும் இருக்கும். போர்க்களம் trailer.
போர்க்களம் (2010) படத்தை Youtube ல தேடினப்போ பார்ட் பார்ட்டா, போஸ்மாட்டம் பண்ணின body மாதிரி பிரிச்சு போட்டு வைச்சிருக்காங்க.
அந்த லிங்க் இது. youtube.com/playlist?list=…