ஆண், பெண் உறவை பொறுத்தமட்டில் இங்குள்ள சிக்கல் என்ன?
கொஞ்சம் மற்ற நாடுகளின் பாணியை பார்ப்போம். குறிப்பாக மேலை!
Prom Night: பள்ளி பருவம் முடிகையில் இந்த விழா கொண்டாடப்படும். கிட்டத்தட்ட நம்ம ஊர் ஆண்டுவிழா போல். ஆனால் ஹை ஸ்கூல் மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்படும்.
இந்த நாளுக்கு மாணவ, மாணவிகள் ஜோடியாக வர வேண்டும். தன் மகளை prom nightக்கு அழைக்க ஒரு மாணவன் வருகிறான் எனில், பெற்றோர் வரவேற்பார்கள். ஒருவேளை யாரும் வரவில்லை எனில், கவலைப்படுவார்கள். தன் மகள் எதிர்பாலினத்தில் ஒருவனை கூட ஈர்க்கும் அளவுக்கு வளரவில்லையோ என. இதேதான் மாணவனுக்கும்.
அந்த விழா வெறுமனே ஜோடி நடனமும் சிறந்த ஆண், சிறந்த பெண், சிறந்த ஜோடி முதலியவற்றுக்கான விருதளிப்பும் கொண்ட விழா மட்டுமே. ஆனாலும் அடிப்படையில் சமூகரீதியாக இணைதேடலை அங்கீகரிக்கும் நிகழ்வு அது.
விழாவின்போது வரும் ஜோடி முன்னமே காதலர்களாக இருக்கலாம். அல்லது பின்னர் காதலர்கள் ஆகலாம்.
அல்லது நண்பர்களாக தொடரலாம் அல்லது பிரிந்து அவரவர் வாழ்க்கைக்கு செல்லலாம் எதற்கும் எவ்வித கட்டாயமும் இல்லை.
Dating: இதற்கு பருவம், நேரம் எல்லாம் இல்லை. எப்போதும் நேரம்தான். தன்னை ஒருவர் ஈர்த்து, அவர் தனக்கான துணையாக இருக்கும் தகுதியும் புரிதலும் கொண்டவர்கள் என நினைப்பவர்களுக்கான வாய்ப்பு. தான் விரும்பும் வகையில் விரும்பப்படும் நபர் இருக்கிறாரா என பரிசோதிக்கும் காலம்தான் டேட்டிங் காலம்.
Do you have a date? Shall we go for a date?
இது ஒருநாளாக இருக்கலாம். ஒருவாரமாக இருக்கலாம். அல்லது ஒரு மாதமாக கூட இருக்கலாம். அதற்கு மேலும் இருக்கலாம். Comfort லெவல் வரும்வரை தொடரும். அல்லது உடையும்வரை தொடரும்.
தோகை விரித்து மயில் ஆடும் காலம் இது. உங்கள் அழகு, நற்பண்புகள் மட்டும் காண்பித்து இணையை கவர முற்படுவீர்கள்.
Love: Datingம் சரியாகி தனக்கான துணையே என்ற நம்பிக்கை வருகையில்தான் இந்த அடுத்தக்கட்டம் இதை love என்று கூட சொல்ல மாட்டார்கள் Relationship என்பார்கள் இன்னும் நெருக்கமாவார்கள்
இந்த கட்டத்திலும் மனம் ஒப்பவில்லை எனில், மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு, 'Get the hell outta my life' என விலகி வந்துவிட முடியும்.
Marriage: ரிலேஷன்ஷிப்பிலும் தேறி, பரஸ்பர நம்பிக்கை, மதிப்பு, புரிதல் என ஏற்பட்டபிறகுதான் அந்த முக்கியமான நாள்.
ஆண் மண்டியிட்டு அமர்ந்து மோதிரத்தை பெண்ணுக்கு கொடுத்து, 'Will you marry me?' என்னும் நாள்.
அப்போது அந்த பெண், 'Oh my god!' என உலக அழகி பட்டம் கிடைத்தது போல் கண்ணில் ஜலம் வைத்துக்கொண்டு சுற்றிமுற்றி அனைவரும் பார்க்கின்றனரா என பார்ப்பாள். ஏனெனில் அவளுக்கு அதுதான் பெருமைமிகு தருணம்
"See here everybody.. Finally there is this guy, on his knees, who wants to spend his rest of life with me" என கர்வமும் நிம்மதியும் கொள்ளும் தருணம்.
ஆக, திருமணம் என்ற கட்டம் வருவதற்கே அங்கெல்லாம் அவ்வளவு காலம் பிடிக்கிறது. அவ்வளவு கஷ்டம் இருக்கிறது.
இந்தியாவில் சிறுநீர் கழிக்கும் அளவுக்கு எளிதான விஷயம் திருமணம் செய்து கொள்வது. அதிலும் மேலைநாடுகளில், marriage proposal கட்டத்தையும் தாண்டி, பெண்ணின் பெற்றோர் வீட்டுக்கு ஆணும் ஆணின் பெற்றோர் வீட்டுக்கு பெண்ணும் சென்று முறைப்படி அறிவிக்க வேண்டும்.
அவர்களும் ஒப்புக்கொண்ட பின்னே கல்யாணம். அந்த கல்யாணமும் தேறவில்லை எனில், இருக்கவே இருக்கிறது விவாகரத்து.
இனி, நம்மூரில் என்ன நடக்கிறதென பார்ப்போம்.
ஒரு பெண் தன் ஆண் நண்பனை வீட்டுக்கு கூப்பிட்டு வரவே மாமாங்கம் காத்திருக்க வேண்டும். அதிலும் நிறைய பேச்சுகள் வரும். ஆண் ஒரு பெண்ணை தன் வீட்டுக்கு கூட்டி வர வேண்டுமென்றால் சொல்லவே வேண்டாம். சுவர்கள் கூட ரகசியம் பேசும்.
ஆணுக்கு பெண்ணை பற்றிய அறிவும் பெண்ணுக்கு ஆணை பற்றிய அறிவும் தெரியாமலேயே பள்ளிக்காலத்தை முடிக்கிறார்கள் பிறகு, தத்தக்காபித்தக்கா என தட்டு தடுமாறி சைட், 'கண்கள் இரண்டால்', லெட்டர் என ஓடி, காதல் என சொல்லிக்கொள்ளும் நிலையை ஓர் ஆணும் பெண்ணும் அடைந்துவிடுவதாக வைத்துக்கொள்வோம்.
இங்கு அவர்கள் இழந்திருப்பது இரண்டை Prom & dating இந்த இரண்டு விஷயங்களையும் காதலில்தான் அவர்கள் செய்ய வேண்டியுள்ளது
ஆணை பெண் அறியவும் பெண்ணை ஆண் அறியவும் பின் கலவிக்கான முத்தாய்ப்புகளும் பின் இவன் அல்லது இவள் தனக்கு சரியான துணையா என்பதையெல்லாம் இதற்குள்ளேயே செய்து முடிக்க வேண்டும்
இதற்கு பிறகு 'வேலைக்கு ஆகாது' என datingல் இருந்து விலகுவதை போல் விலகினால் இங்கு அது காதல் முறிவு என அழைக்கப்படும். 'அவ அவன்கூட நல்லா பழகிட்டு காசெல்லாம் செலவழிக்க வச்சுட்டு, கடைசில கழட்டி விட்டுட்டா.. வீட்ல சொல்றவன கட்டிக்கிட்டா',
'அவன்தான் மச்சி கெத்து.. முடிஞ்ச வரைக்கும் அந்த பொண்ணு கூட சுத்துனான்.. நல்லா எஞ்சாய் பண்ணான்.. அப்புறம் எஸ்கேப் ஆகிட்டான்!' என்ற பேச்சுகளை நாம் கேட்பதெல்லாம் இப்படித்தான். ஏனென்றால் இங்கு நமக்கு பிரச்சினை ஒன்றே ஒன்றுதான். கற்பு!.
'அவன் எஞ்சாய் செஞ்சதும்', 'அவள் பழகியது' மட்டும்தான் நமக்கு பிரச்சினையே தவிர அதை தாண்டிய உணர்வு, உயிரியல் தேவை, தனிமை எல்லாம் அல்ல.
இந்த லட்சணத்தில் எங்கே ரிலேஷன்ஷிப், 'ஒன்றாய் தங்குவது' எல்லாம்? நேரடியாக திருமணம்தான்.
அந்த திருமணத்தில்தான் மேற்சொன்ன ரிலேஷன்ஷிப் மற்றும் 'ஒன்றாய் தங்கல்' எல்லாம் வெளிப்படும். ஆனால் இச்சமயத்தில் ஆணும் சரி, பெண்ணும் சரி, உறவில் இருந்து வெளியேற முடியாதபடிக்கு இருவருக்கும் சமூகம் ஆப்படித்து செருகியிருக்கும் திருமணம் என்ற பெயரில்!
ரிலேஷன்ஷிப் அல்லது 'ஒன்றாக தங்கல்' என்பதையும் தங்கள் கேடுகளுக்கு ஒரு கூட்டம் பயன்படுத்தி கொள்வதெல்லாம் சுத்த அரைவேக்காட்டுத்தனம்
தனக்கான துணை அல்ல என்ற புரிதலுக்கு பின் வாழும் ஜீவனற்ற மிச்ச வாழ்க்கைதான் திருமணம் என்பது இதனால்தான் marital rape, suicide, murder எல்லாம் நிகழ்கின்றன
ஒரு பெண் தனக்கு முத்தமிட வரும் காதலனை தள்ளிவிடுவதில்தான் தன் குடும்ப கவுரவம் இருப்பதாக நினைக்கிறாள். விருப்பமில்லையென விலகினாலும் தான் விரும்பிய பெண்ணை மணப்பதுதான் காதலின் நேர்மை என ஆண் நினைக்கிறான் இங்கே எங்கு உன் குடும்பம் வந்தது, உன் நேர்மை வந்தது? All is good in love and war!
விவாகரத்துகள் அதிகம் ஆகிக் கொண்டிருக்கின்றன. இன்னுமே அதிகம் ஆகும். காரணம் நாங்கள் அல்ல. காதலர்களும் அல்ல. நீங்கள்தான். உங்கள் கட்டுப்பெட்டி கட்டுப்பாடுகள்தான்.
புத்திசாலித்தனம் என்பது, இங்கு இருக்கும் இந்த பாணி உறவுநிலைகளையும் இணை தேடல்களையும் ஆண், பெண் உறவுகளையும் காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்றார்போல் இலகுவாக்குவதுதான். இல்லையெனில் முறிவுகள் அதிகமாக இருக்கும்; மனதிலும் மணத்திலும்! தனிமை தேடும் நபர்களும் அதிகமாவார்கள்.
அவர்கள் தனிமையில் என்ன செய்கிறார்கள் என்பதையும் உங்களால் ஊகிக்கவே முடியாது.
பதிவு - ராஜசங்கீதன்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மைட்டோகாண்ட்ரியா என்பது நமது செல் க்குள் இருக்கும் சிறிய உறுப்புகள் ஆகும், இது செல் வேலையைச் செய்வதற்கான ஆற்றலை உருவாக்குகிறது. மைட்டோகாண்ட்ரியாவிற்கு சொந்த மரபணு மற்றும் அதன் செல்லுலார் டி.என்.ஏ மூலக்கூறு உள்ளது.
அவை விந்தணுக்களில் இல்லை.
அவை தாயால் மட்டுமே பரவுகின்றன. நீங்கள் ஆணோ பெண்ணோ உங்களது மைட்டோகாண்ட்ரியல் DNA உங்கள் தாயிடம் இருந்தே வருகிறது. உங்கள் தாய்க்கு அவரது தாயிடம் இருந்து கிடைக்கிறது.
இப்படியே பின்னோக்கி சென்றால் அனைத்து மனித சமூகத்திற்கும் இருக்கும் மைட்டோகாண்ட்ரியல் DNA ஒரு பெண்ணிடம் இருந்தே வந்து இருக்கிறது. இதை தான் ஈவ் மரபணு என்று அழைக்கப்படுகிறது. நாம் அனைவருமே ஒரே தாயில் இருந்து வந்தவர்கள் தான்.