**********
புனே நகருக்கு அருகே உள்ள 'பீமா' என்ற நதிக்கரையில் போர் நடந்து 200 ஆண்டுகள் ஆகும் இந்த வேளையில் அதன் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம் !
1800-களில் பார்ப்பன பேஷ்வாக்கள் மராட்டியத்தை ஆண்டு வந்தனர். அப்போது, இந்துமத வேதப்பண்பாடுகளும், மனுசாஸ்திரக் கொடுமைகளும் மிகக்கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டன.
தலித்துகள் பகலில் தெருக்களில் நடமாடக்கூடாது;நடந்தாலும் தெருவில் எச்சில் துப்பிவிடக்கூடாது;
எச்சிலைத் துப்புவதற்கு தம் கழுத்தில் ஒரு மண் கலயத்தைக் கட்டித்தொங்க விட்டுக்கொண்டு வரவேண்டும்.
தலித்களின் கால் தடத்தைப் பார்ப்பனர்கள் மிதித்தால் பார்ப்பனர்களுக்குத் தீட்டாகிவிடும்.அதனால் அவர்கள் பின்பகுதியில் ஒரு பனை ஓலையைக் கட்டிக்கொண்டு நடக்க வேண்டும்.
அந்தப் பனைஓலை கால் தடத்தை அழித்துக்கொண்டே வரவேண்டும்.தலித்கள் கல்வி கற்கக்கூடாது.ஆயுதம் வைத்திருக்கக் கூடாது.இவைபோன்ற எண்ணற்ற சாஸ்திர, சம்பிரதாயக் கொடுமைகளுக்கு எதிராக, தாழ்த்தப்பட்ட மகர் மக்களும்,பிற்படுத்தப்பட்ட மக்களும்,சிறுபான்மை இஸ்லாமியரும் இணைந்து போராட்டத்தைத் தொடங்கினர்.
1817 டிச31 இரவு,புனே நகர் அருகே கோரிகான் என்றஊரில் உள்ள ‘பீமா’ என்ற நதிக்கரைதான் போர்க்களம்.2ம் பாஜிராவ் என்ற பார்ப்பன தளபதியான, ‘கோகலே’ தலைமையில் 28000 பார்ப்பனப்படைவீரர்கள் ஒருபுறம் 500 மகர் சமுதாயவீரர்களும்,100 பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமியச் சமுதாயவீரர்களும் இணைந்த படை மறுபுறம்.
போர் தொடங்கிய 12 மணி நேரத்தில் 600 பார்ப்பனப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.பார்ப்பன படைத்தலைவன் கோகலே களத்திலேயே படுகொலை ஆனான்.ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களும்,அவர்கள் ஆதரவுப்படைகளும் சிதறின. பாஜிராவ் கைதானான். பார்ப்பன பேஷ்வாக்களின் மராட்டியப் பேரரசுக்கு ரத்தத்தால் முடிவுரை எழுதியது
மகர் ரெஜிமண்ட்,வெற்றியின் நினைவாக, சாதி ஒழிப்புப் போராளிகள் விதைக்கப்பட்ட ‘பீமா’ நதிக்கரையில் ஒரு வெற்றிச்சின்னம் நிறுவப்பட்டது.
1927 ஜனவரி-1ல் தோழர் அம்பேத்கர் இந்த நினைவிடத்திற்குச் சென்றார்.அன்றுதான் பீமா நதிக்கரை வெற்றியின் நினைவாக #ஜெய்_பீம் எனும் வெற்றி முழக்கம் வெடித்தது.
**
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையோட NIRF நிறுவனம் தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களோட ரேங்கிங் பாட்டியல 2020க்கு அறிவிச்சு இருக்கு.
*மொத்தம் 660 கல்வி நிறுவனங்கள துறைவாரியா வெளியிட்ட பட்டியல்ல தமிழ்நாட்ட சேர்ந்த 116 கல்வி
நிறுவனங்கள் (அதாவது மொத்த பட்டியல்ல 18% ) இடம்பிடிச்சிருக்கு.
**இதுல பாத்தா பல்கலைக்கழகம், பொறியியல், மருத்துவம், கலைக்கல்லூரி, ஆர்க்கிடெக்சர் ஆகிய பிரிவுல எல்லாம் தமிழ்நாடு தான் முன்னணில இருக்கு.
*இவனுங்க கொண்ட வர்ற NEP (தேசிய கல்வி கொள்கை-2020) படி 'உயர்கல்வில சேர்ப்புக்கான சதவிகித' (GER) டார்கெட் 30%, ஆனா ஏற்கனவே செப்டம்பர்2019 கணக்கெடுப்பு படி தமிழ்நாடு 49% தொட்டு இருக்கு.
*அதே போல தமிழ்நாட்டுல மட்டும்தான் மாவட்டதுக்கு ஒரு மருத்துவ கல்லூரி இருக்கு,
"திராவிட இயக்க தீரர்கள்" #வரலாறு_அறிவோம் – கே.ஆர்.இராமசாமி :
(ராயபுரம் "அறிவகம்" உருவான கதை)
திமுக என்ற புதிய அரசியல் கட்சி எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருந்த ஆரம்ப காலகட்டம் அது. கட்சியின் அன்றாட அலுவல்களைக் கவனிப்பதற்கு ஏதுவாக, மாநிலம் தழுவிய அளவிலான கட்சிப் பணிகளை
ஒருங்கிணைக்க வசதியாக கட்சிக்கென்று ஒரு தலைமை அலுவலகம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற யோசனை அண்ணா உள்ளிட்ட திமுக தலைவர்களுக்கு உருவாகியிருந்தது.
சென்னை ராயபுரம் சூரியநாராயண செட்டித்தெருவில் உள்ள 24 ஆம் இலக்கக் கட்டடம் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னார் அண்ணாவின் அணுக்க நண்பர்
தேவராஜ முதலியார். விசாலமான தாழ்வாரம், அகலமான அறைகள் என்று இரண்டு அடுக்கு கட்டடம். நல்ல இடம்தான். ஆனால் அதை வாங்குவதற்குத் தேவையான பணத்தை எப்படித் திரட்டுவது?
நான் திரட்டுகிறேன் என்று சொல்லி முன்வந்தார் கே.ஆர். ராமசாமி. அன்றைய தமிழ்த் திரையுலகில் மிகப் பிரபலமாக இருந்த நட்சத்திரம்