இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வேலைவாய்ப்பில் OBC, SC/ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு மறுப்பு! இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே17 இயக்கம்
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (Indian Council of Medical Research - ICMR)...
1/11
அதன் கீழ் செயல்படும் பல்வேறு நிறுவங்களுக்கான D மற்றும் E நிலை அறிவியலாளர்களின் 65 பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதிர்ச்சி என்னவெனில், அரசு பணிகளான இவற்றிற்கு இடஒதுக்கீடு இல்லை என்பதே! மருத்துவ படிப்பை தொடர்ந்து, மருத்துவ பணியிடங்களுக்கும்...
2/11
இட ஒதுக்கீட்டை தொடர்ந்து மறுக்கும் பாஜக-மோடி அரசை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
மருத்துவ படிப்பில் BC, MBC பிரிவினருக்கான 50% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் வரை சென்று மறுத்த பாஜக அரசு, தற்போது மருத்துவ ஆராய்ச்சி சார்ந்த பணிகளுக்கு SC, ST, BC, MBC பிரிவினருக்கு...
3/11
சேர வேண்டிய வேலைவாய்ப்பை மறுத்துள்ளது. பாஜக அரசின் இந்த செயல், சமூகரீதியாக, கல்விரீதியா பின்தங்கிய சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டு உரிமையை வழங்கும் இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானதாகும்.
நேரடி ஆட்சேர்ப்பு என்ற போதும் அதற்கான இடஒதுக்கீடு விவரங்கள் அறிவிப்பில் இடம்பெறவில்லை.
4/11
குறிப்பிட்ட சில நிலை பணியிடங்களுக்கு இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது என்று அந்நிறுவனத்தை சேர்ந்த அதிகாரியே கூறுகிறார். அதே போல், BC,MBC பிரிவினருக்கு ரூ.1500 விண்ணப்பட்ட கட்டணம் என்று வரையறுக்கப்பட்ட நிலையில், மாதம் 60,000 சம்பளம் பெரும் உயர் சாதியினருக்கு விண்ணப்பகட்டண...
5/11
சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமாக உயர் சாதி பார்ப்பனர்களை கொண்டு மருத்துவ பணியிடங்களை நிரப்ப முயலும் செயலாகும்.
பாஜக அரசின் இடஒதுக்கீடு மீதான வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உயர் சாதி பார்ப்பனர்கள் பயனடையும் வகையில் பொருளாதார அடிப்படையில்...
6/11
10% இட ஒதுக்கீட்டை அனைத்து துறைகளிலும் முழுமையாக நடைமுறைப்படுத்திய மோடி அரசு, பெரும்பான்மையான BC, MBC, SC/ST பிரிவினர் கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறுவதை அனைத்துமட்டத்திலும் தடுக்க முயலுக்கிறது. இது, மனுதர்மத்தின்படி, சூத்திரர்கள் கல்வி கற்க கூடாது, உயர் பதவிகளில்...
7/11
பணிபுரியக்கூடாது என்பதை நிலைநாட்ட முயலும் முயற்சியாகும்!
இட ஒதுக்கீட்டின் மூலம் தற்போது தான் முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாகியுள்ளனர். அதனை பார்ப்பனியம் செரித்துக்கொள்ள இயலவில்லை. இந்துக்கள் என்று கூறி சாதி, மத சண்டைக்கு ஆள் சேர்க்கும் பாஜக, அதே பெரும்பான்மை இந்துக்கள்...
8/11
சமூகங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பை மறுத்து அப்பட்டமாக துரோகம் இழைக்கிறது. பாஜக கூறும் இந்துக்கள் என்பவர்கள் பார்ப்பனர்களே! BC-MBC, SC/ST இளைஞர்கள் தங்கள் சாதி, மதத்தை மறந்து பாஜகவிற்கு எதிராக ஒன்று திரள வேண்டும். இடஒதுக்கீட்டை பாதுகாப்பதன் மூலம் மட்டுமே அடுத்த தலைமுறையின்...
9/11
வாழ்வாதாரத்தை நாம் உறுதிசெய்ய முடியும்.
மத்திய பாஜக அரசே! சமூக நீதியை பாதுகாத்திடும் வகையில் இட ஒதுக்கீட்டை முழுமையாக அனைத்து துறைகளிலும் முறையாக நடைமுறைப்படுத்து. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் 65 பணியிடங்களுக்கான அறிவிப்பை இட ஒதுக்கீட்டு முறையில் மீண்டும் வெளியிடு.
10/11
சமூகரீதியாக, கல்விரீதியாக பின்தங்கிய சமூகத்தவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் இட ஒதுக்கீட்டை, பொருளாதார அடிப்படையில் உயர் சாதியினருக்கு வழங்காதே!
மே பதினேழு இயக்கம்
9884027010
01/01/2021
11/11
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்துத்துவ மோடி அரசே! தொழிலாளர்களை வஞ்சிக்கும் புதிய தொழிலாளர்கள் சட்டத்தை உடனடியாக கைவிடு! மே17 இயக்கம்
கொரோணா பெருந்தொற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பது, விவசாயிகள் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை வாழ்வாதார...
1/9
...உரிமைகளை பறித்து அதை முதலாளிகளுக்கு ஏகபோகமாக பகிர்ந்தளிக்கும் வேலையை இந்த மோடி அரசு திட்டமிட்டு செய்து வருகிறது. அதன்படிதான் நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் பாதிக்கும் விதமாக தொழிலாளர் விரோத சட்டங்களை மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது.
2/9
நாட்டில் தொழிலாளர்கள் நலனைக் காப்பதற்காக இதுவரை இருந்த 44 சட்டங்களையும் சுருக்கி நான்கு சட்டங்களாக மாற்றி அதனை உறுப்பினர்கள் யாரும் இல்லாத நேரத்தில் நிறைவேற்றியிருக்கிறது மோடி அரசு.
1) இந்த சட்டத்தின்படி ஏற்கனவே 100க்கும் அதிகமான தொழிலாளர்களை பணியில் அமர்த்தி உள்ள...
3/9
தமிழக அரசே! எட்டு ஆண்டுகளாக தமிழ்நாடு எஸ்சி/எஸ்டி ஆணையம் கூடாமல் இருக்கும் அவலத்தை உடனடியாக சரிசெய்க - மே17 இயக்கம்
தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் வேரூன்ற சாதிவெறியை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டு வருகிற சூழ்நிலையில், அதை தடுத்து நிறுத்தி பட்டியலின மக்களை பாதுகாக்கும்...
1/5
...பொறுப்பு எஸ்சி/எஸ்டி ஆணையத்திற்கு உண்டு. இதற்காகத்தான் இந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகள் பாதுகாப்புச் சட்டம் 1989 கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்தின்படி எஸ்சி/எஸ்டி ஆணையம் வருடத்திற்கு இரண்டு முறை கண்டிப்பாக கூடி விவாதிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இந்த ஆணையம்...
2/5
...கடைசியாக 2013 ஜூன் 25ஆம் தேதி கூடியதே தவிர அதை தவிர்த்து கடந்த 8 ஆண்டுகளில் ஒருமுறைகூட சந்தித்து பேசவில்லை என்ற அதிர்ச்சிகரமான செய்தி தற்போது வெளியே வந்திருக்கின்றது.
இப்படித்தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட 'பிற்படுத்தப்பட்ட வாரியத்திற்கான'...
3/5
சாதி ஒழிப்பு போராளி ஐயா தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளில் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக போராட உறுதியேற்போம்!
இம்மானுவேல் சேகரனார் அவர்கள், பட்டியலின மக்களை சமமாக நடத்த கோரியும், இரட்டை குவளை முறையை ஒழிக்க தனது 19ஆம் வயதில் மாநாட்டை நடத்தியவர். 1953இல்...
1/7
ஒடுக்கப்பட்டோர் இளைஞர் இயக்கத்தை துவக்கி, இராமநாதபுரம் பகுதிகளில் சமூக விடுதலைப் போராட்டங்களில், சாதி ஒழிப்பு பணிகளில் தீவிரமாக செயல்பட்டார். இவரின் வளர்ச்சி அப்பகுதி பட்டியலின மக்களுக்கு மிகப்பெரும் எழுச்சியாக அமைந்தது. இதனால் ஆதிக்க சமூகத்தின் எதிர்ப்புகளைச் சந்தித்தார்.
2/7
1957ல் முதுகுளத்தூர் தொகுதியில் நடைபெறவிருந்த தேர்தலை ஒட்டி, பள்ளி விழா ஒன்றில் பங்கேற்று இரவு 9 மணியளவில் வீடு திரும்பிய போது, ஆதிக்க சாதியை சேர்ந்த கூட்டத்தினரால் சரமாரியாக வெட்டி வீழ்த்தப்படுகிறார். இம்மானுவேல் சேகரனாரின் சமூகப்போராட்டம் முடிவுற, ராமநாதபுர மாவட்டத்தின்...
3/7
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் (30-08-20) - மே 17 இயக்கம் வேண்டுகோள்
தமிழீழ விடுதலைப்போராட்டம் துவங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை, போராடுபவர்கள் கடத்தி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்படுவது விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் ஒரு செயல்திட்டமாக இலங்கை அரசினால் செயல்படுத்தப்படுகிறது.
இராணுவத்தினர் விசாரிப்பதற்கு அழைத்து சென்றும், அரசியல் காரணங்களால் கைது செய்யப்பட்டும், வெள்ளை வேன் கடத்தல் என சட்டத்திற்கு புறம்பாக தமிழர்களை கடத்தி சென்று இலங்கை அரசினால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, 60,000 முதல் 1 லட்சம் வரையிலான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வழக்குகள்...
நிலுவையில் உள்ளன. அப்படியாக கடத்தி செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நிலை இன்று வரை என்ன என்று தெரியவில்லை.
ஐ.நா. மனித உரிமை ஆணையம் மூலமாக அழுத்தம் ஏற்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த புகார்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதியளித்த பிறகும், இலங்கை அரசு...
ஸ்விகி பணியாளர்களின் போராட்டம் வெல்லட்டும்! - மே 17 இயக்கம்
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்க மறுப்பதோடு, தொடர் ஊதிய குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது, பணியாளர்களை தரக்குறைவாக நடத்துவது போன்ற காரணங்களால் @swiggy_in நிர்வாகத்திற்கு எதிராக அதன் பணியாளர்கள்... #Swiggy #SwiggyStrike 1/7
கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைவாய்ப்புகளற்ற சூழலில் பெரும்பாலும் பட்டதாரிகளே இந்த பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களின் நிலையை சாதகமாக பயன்படுத்தி அவர்கள் உழைப்பை சுரண்டும் வேலையை ஸ்விகி நிர்வாகம் செய்கிறது. இது குறித்து சிலர் முறையிட்ட போது...
2/7
பணியாளர்களின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் வகையில் நிர்வாகம் தரக்குறைவாக நடத்தியுள்ளது.
ஸ்விகி நிர்வாகத்தின் இது போன்ற செயல்களை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. பணியாளர்களின் போராட்டத்திற்கு மே 17 இயக்கம் ஆதரவளிக்கிறது. தொடர் போராட்டம் வெல்லும் வரை பணியாளர்களுக்கு...
3/7
கீனி மீனி: தமிழினப்படுகொலையில் ஈடுபட்ட பிரிட்டனின் தனியார் ராணுவம்
கடந்த புத்தாண்டின் போது பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட பாதுகாக்கப்பட்ட தரவுகளில் தமிழினப்படுகொலையில் ஈடுபட்ட கூலிப்படையினர் குறித்த தகவலும் வெளிவந்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த கீனி மீனி (#KeenieMeenie)...
1/8
...என்ற நிறுவனம், 1980களில் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பது என்ற ஒப்பந்தமிட்டுருந்தாலும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான மற்றொரு ஆயுதக்குழுவாக அது செயல்பட்டது. இலங்கை ராணுவத்தினரோடு இணைந்து புலிகள் மட்டுமல்லாது பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தி கொலை செய்தனர்.
2/8
கீனி மீனி கூலிப்படையினர் ஈவு இரக்கமற்று செயல்பட்டுள்ளனர். அதில் ஒன்றாக, 1986 ஜூன் 7 அன்று, ஒரு பேருந்தில் பொதுமக்களோடு புலிகளும் செல்கின்றனர் என்ற சந்தேகத்தில் ஹெலிகாப்டரில் இருந்து அப்பேருந்தை சரமாரியாக சுட்டனர். தப்பி ஓடிய குழந்தைகள் பெண்கள் என அனைவரையும் சுட்டுக்கொன்றனர்.
3/8