*மகாபாரத காலத்துடன் தொடர்புடைய இந்த கிராமத்திற்குச் சென்றால் வறுமை நீங்குமாம். எங்குள்ளது தெரியுமா?*
சரஸ்வதி நதிக்கு சாபம் விட்ட விநாயகர், சிவபெருமானின் ஆசி பெற்ற இடம் என இந்தியாவிலேயே மிகவும் புனிதமான இடமாக கருதப்படும் ஒரு கிராமத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.🙏🇮🇳1
மகாபாரத காலத்துடன் தொடர்புடைய இந்த கிராமத்திற்கு சென்றால் வறுமை நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பல கிராமங்கள், பல்வேறு புராண ரகசியங்களுடன் தொடர்பு கொண்டவையாக உள்ளன.
🙏🇮🇳2
அப்படிப்பட்ட ஒரு கிராமத்தை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம். உத்தரக்காண்டில் உள்ள இந்த கிராமம் 'இந்தியாவின் கடைசி கிராம்' அல்லது 'உத்தரகாண்டின் கடைசி கிராமம்' என்று அழைக்கப்படுகிறது.
🙏🇮🇳3
இந்தியாவின் புனித இடங்களில் ஒன்றாக கருதப்படும் பத்ரிநாத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. மகாபாரத காலத்தோடு தொடர்புகொண்ட இந்த கிராமத்திற்கு விநாயகருடனும் தொடர்பு உள்ளது. 🙏🇮🇳4
பாண்டவர்கள் இந்த கிராமத்தின் வழியாக தான் சொர்க்கத்திற்கு சென்றதாகவும் நம்பப்படுகிறது.
சுமார் 19,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தின் பெயர் 'மனா'. முன்பொரு காலத்தில் மணிபத்ர தேவ் என்ற பெயரில் இது அழைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மனா என்ற பெயரால் அழைக்கப்படுகிறது🙏🇮🇳5
புராணக்கதைகளின் நம்பிக்கைப்படி, இந்தியாவிலேயே இந்த கிராமம் மட்டும் தான் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. மேலும் சாபம் மற்றும் பாவம் இல்லாத கிராமம் என்றும் மக்கள் இதனை நம்புகின்றனர்.
🙏🇮🇳6
இந்த கிராமத்திற்கு வரும் ஒவ்வொருவரின் வறுமையும் நீங்கும் என்ற நம்பிக்கையும் இங்கு உள்ளது. ஆம்.. சிவபெருமானின் சிறப்பு ஆசீர்வாதம் இந்த கிராமத்திற்கு கிடைத்திருப்பதால், இங்கு வரும் மக்களின் வறுமை ஒழிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
🙏🇮🇳7
இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவதற்கு மற்றொரு முக்கிய காரணமும் இருக்கிறது. மகாபாரதக் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பாலம் இன்றும் இங்கு உள்ளது. 'பீமன் பாலம்' என்றழைக்கப்படும் இந்த பாலத்தின் வழியாக தான் பஞ்ச பாண்டவர்கள் சொர்க்கத்திற்கு சென்றார்காளாம்..
🙏🇮🇳8
அப்படி அவர்கள் செல்லும் போது அங்கு பாயும் சரஸ்வதி நதியை கடக்க வழி தேடினார்களாம்.. ஆனால் சரஸ்வதி தேவியோ அவர்கள் செல்வதற்கு வழிக்கொடுக்க மறுத்துவிட்டதாம். 🙏🇮🇳9
அதன்பின்னர், பீமன் இரண்டு பெரிய பாறைகளை ஆற்றின் மீது வைத்து வழியை உண்டாக்க, அந்த பாலத்தின் மீது ஏறி தான் பாண்டவர்கள் சொர்க்கத்திற்கு சென்றார்கள் என்றும் கூறப்படுகிறது.
🙏🇮🇳10
விநாயகருக்கும் இந்த கிராமத்திற்கும் கூட ஒரு தொடர்புள்ளது. வியாச முனிவரின் உத்தரவின் பேரில் விநாயகர் இந்த கிராமத்தில் அமர்ந்து தான், மகாபாரதத்தை எழுதிக் கொண்டிருந்தாராம். 🙏🇮🇳11
அப்போது இங்கு ஓடும் சரஸ்வதி நதியின் அதீத சத்தம் விநாயகரின் காதில் விழவே, சத்தத்தை குறைக்கும் படி, அவர் சரஸ்வதியிடம் கூறினாராம்.. எனினும் சரஸ்வதி நதியின் சத்தம் குறையாததால், கோபமடைந்த விநாயகர், இதனை தாண்டி யாரும் உங்களை (நதியை) பார்க்க முடியாது என்று சாபம் விட்டாராம்..
🙏🇮🇳12
வியாச முனிவர் வாழ்ந்த குகையும் இந்த கிராமத்தில் உள்ளது. இங்கு தான் வியாசர் பல வேதங்களையும், புராணங்களையும் இயற்றினார். 🙏🇮🇳13
வியாச குகையின் மேற்தோற்றத்தை பார்த்தால், பல்வேறு புத்தகங்களை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கியது போல இருக்கும். இதன் காரணமாக இந்த குகை 'வியாச போதி' என்றும் அழைக்கப்படுகிறது.
வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அன்று இளையராஜாவின் ஸ்டுடியோவில் ஒரு ரெகாடிங். பாடல் எல்லாம் தயார்.
கே. ஜே.ஜேசுதாஸ் பாடுவதாக இருந்தது. இளையராஜா முதல் எல்லா இசை கலைஞர்களும் வந்தாகி விட்டது. ஆனால் ஜேசுதாசை காணோம்.
சரி, அவர் வரும் வரையில் ஒரு ட்ரையல் பார்ப்போம் என முடிவு செய்து, இளையராஜா அந்த பாடலை பாடி ரெகாடிங் செய்து பார்த்தார். பாடல் நன்றாக வந்திருந்தது.
நீண்ட நேரம் ஆகியும் ஜேசுதாஸ் வரவில்லை. பிறகு ஒரு போன் வந்தது.. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் தன்னால் வர இயலவில்லை என ஜேசுதாஸ் வருந்தினார். இளையராஜா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த நாள் ரெகாடிங்கை வைத்து கொள்ளலாம் என கூறினார்.
ஆட்டுவிக்கும் சீனாவும், கூத்தாட்டுப் பொம்மை இந்திய எதிரிக் கட்சிகளும்
இந்திய அரசியலில் ஜனநாயகம் ஒரு ஆபத்தான வழியில் செல்வதாகப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் மத்தியில் தோன்றியுள்ள மனப்பாங்கு,
மத்தியில் ஆளும் அரசுக்கு ஆலோசனை வழங்கி வழிகாட்டும் ஒரு உன்னதமான மற்றும் கௌரவமான பொறுப்பில் இருந்து விலகி ஜென்ம விரோதிகளைப் போல நடந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதை கண்கூடாகக் காணமுடிகிறது.
அதிலும், குறிப்பாக மே 2014ல் மோடி தலைமையிலான தேசீய முற்போக்கு கூட்டணி அரசு பதவி ஏற்றதிலிருந்தே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடைப்பிடித்துவரும் வெறுப்பு அரசியல்
ஸ்டாலின் வேலைப் பிடித்தாலும் கடவுளின் வரம் கிடைக்காது - முதலமைச்சர்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முருகனின் வேலைப் பிடித்தாலும் கடவுள் அவருக்கு வரம் தர மாட்டார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இரண்டு நாள் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டாம் நாள் பிரச்சாரத்தைத் தொடங்குமுன் இன்று புலியகுளம் விநாயகர் கோவிலில் வழிபாடு செய்தார்.
சிங்காநல்லூரில் பிரச்சாரத்தைத் தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடவுளை இழிவாகப் பேசியவர்கள் தற்போது கையில் வேலைப் பிடித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தியா அனுப்பி வைத்த 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் பிரேசிலுக்கு போய்ச் சேர்ந்தன.... ராமாயண கதையை சித்தரிக்கும் படத்துடன் பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி
இந்தியா அனுப்பி வைத்த 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் பிரேசிலுக்கு போய்ச் சேர்ந்ததை அடுத்து அந்நாட்டு அதிபர் ராமாயண கதையை சித்தரிக்கும் படத்துடன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ராமாயணப் போரில் காயம் அடைந்த லட்சுமணனின் உயிரைக் காப்பாற்ற அனுமன் சஞ்சீவி மலையையே தூக்கி வந்தார்.
இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான விளக்கங்கள் (காரணங்கள்)!
ஒவ்வொரு சடங்குகளுக்கு பின்னால் இருக்கும் காரணங்களை தெரிந்து கொள்வதில் அவ்வளவு சுவாரசியம் உண்டாகும்.
*நமஸ்காரம்:*🙏🇮🇳
நமஸ்காரம் செய்வது இந்துக்களின் உன்னதமான சைகையாகும். பொதுவாக இதை மரியாதை அளிக்கும் சைகையாக பார்க்கிறனர். ஆனால், நமஸ்காரம் செய்யும் போது, இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது, உங்களின் விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும்.
அவைகள் ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்பட தொடங்கும். இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்க செய்யும்.