இந்த படத்தில் நெறைய விஷயத்தை Hidden details ah வச்சு இருப்பாங்க.. அதெல்லாம் எப்படி கதையோட கனெக்ட் ஆகுதுனு நமக்கு தெரியும் போது.. சூப்பர் ல்ல அப்படி னு நமக்கு ஒரு ஃபில் வரும்.
அந்த மாதிரி நான் பார்த்த/தெரிஞ்சிக்கிட்ட சில விஷயங்கள்..
படம் ஆரம்பிக்கும்போது "வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை" னு பாட்டு ஓடிட்டு இருக்கும்.. விஷுவல்ல பார்த்தா ஒரு ஷேர் இருக்கும்.. பக்கத்துல ஒருசில பொருள்கள்லாம் உடைஞ்சு போயிருக்கும்.. ஆனா ஷேர் உடையாம அப்பிடியே இருக்கும்..
தலைவரோட intro சீன்ல ஒரு சிலைய காட்டிட்டு அப்படியே அவர் வர லாரியை காட்டுவாங்க..
அந்த சிலைய பார்த்தா ஒரு "guardian of angel" மாதிரி இருக்கும்..
அதாவது தலைவர் ஒரு Guardian ah தான் வராரு அப்படி னு சொல்லியிருப்பாங்க.
தலைவர் ஒரு ரேடியோ வச்சிருப்பாரு..
அந்த ரேடியோ அவர் கூடவே இருக்கும்.. கடைசியில அன்வரை அட்டாக் பண்ற குரூப்ல ஒருத்தர் அதை மிதிச்சு ஒடைச்சிடுவாரு,
அந்த ரேடியோ தலைவரோட "காளி" அப்பிடின்ற பேர் அவரோட unrevealed identity. அவரோட ஒரிஜினல் ஸ்டோரி அந்த ரேடியோ உடையும் போது தெரிஞ்சிடும்..
உல்லாலா பாட்டு முடிஞ்சவுடனே ரெண்டு குரூப் ஹாஸ்டல்லுக்கு போவாங்க.. 1 மைக்கேலோட குரூப் இன்னொன்னு ஜித்து அனுப்பின நார்த் இந்தியன் குரூப்
அவங்க உள்ளே போகும் போது சிலந்தி வலையை காட்டுவாங்க.. ஆனா அதுல சிலந்தியோ, இரையோ இருக்காது.. அதாவது இது ஒரு ட்ராப் ஆனா அதுல யாரும் மாட்ட மாட்டார்கள்
அதே மாதிரி அந்த குரூப்பை அடிச்சி விரட்டின அப்புறம் அடுத்த குரூப் வரும்போது தலைவர் அவங்களுக்காக காத்துட்டு இருப்பார் அப்போ அதே மாதிரி சிலந்தி வலைய காட்டுவாங்க(அதுவும் அந்த guardian of angel சிலையோட கைல) அப்போ அந்த சிலந்தி வலையில சிலந்தி இருக்கும்.. இந்த ட்ராப் தலைவரோடது
மாலிக், அன்வர் ரெண்டு பேருக்கும் பிரச்சனை வரும்போதும் சரி, உதவி தேவப்பட்டாலும் சரி.. தலைவர் வரமாதிரி தான் காட்டுவாங்க..
அப்புறம் ரிவன்ஞ்ச் ஸ்டோரி.. அதுவும் Exact ah வில்லன் பண்ண மாதிரி அப்பிடியே அதே மாதிரி.. அந்த சிட்டிங் பொசிஷன் உட்பட எல்லாமே சேமா இருக்கும்..
பாம் வெடிக்க வச்சு, மிச்ச இருக்கவங்களை சுட்டு கொல்றது அதையெல்லாம் ஜாலிய உட்கார்ந்து பார்க்கறது..
ஜித்துவை பேட்ட இருக்கிற எடத்துக்கு வர வைக்கிறதுக்கு ப்ளான் போடும் போதே ஜித்துவை வச்சி தான் சிங்காரத்தை கொல்ல முடியும் னு ப்ளான் போட்டு இருப்பாரு.. அதை ஒரு போர்ட்ல குரங்கு பொம்மை மாதிரி வரைஞ்சி பேரை எழுதி ஜித்துவை மட்டும் ரவுண்ட் பண்ணியிருப்பாங்க..
அதுல 1st அர்ஜித் (சிங்காரோட இன்னொரு பையன்) 2nd சிங்காரம். லாஸ்டா ஜித்து அப்பிடினு இருக்கும். அதாவது மத்த ரெண்டு பேருக்கு அப்புறமா தான் ஜித்து சாகணும் னு ப்ளான்