#சக்ரா தெரியாம கூட இந்த படம் பார்க்க தியேட்டர் பக்கம் போயிட்டீங்கனா முதல் பாதி முடிஞ்சதும் ஒடி வந்துருங்க. 1/n
கதாநாயகிக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்தது, வில்லன் யார் என்பதில் ஒரு சின்ன சர்ப்ரைஸ் வைத்தது, விறுவிறுப்பான காட்சிகள் (திரைகதை அல்ல) போன்றவற்றால் முதல் பாதி முடிந்தவுடன் படம் பரவாலயே என தோன்றியது. #சக்ரா - 2/n
படத்துல கதாநாயகி, வில்லன், கதாநாயகன் உட்பட அடிக்கும் கலரில் லிப்ஸ்டிக் போட்டு வருவது கண்களை உறுத்தியது. எந்த கதாபாத்திரத்துடனும் எமோஷனலாக கனெக்ட் ஆகும் படி காட்சிகள் வைக்காதது அரம்பத்தில் இருந்தே படத்தின் பெரிய பலவீனம். #சக்ரா - 3/n
படத்தின் முக்கியமான திருப்பத்தையும், குற்றம் எப்படி நடந்தது என்பதையும் வெளிபடுத்தியபின் அதை வைத்து என்ன செய்வது என்பதில் தினறியிருக்கிறார்கள். இடைவேளைக்கு பின் சில நிமிடங்களில் நாயகனும் வில்லனும் செஸ் விளையாடும் காட்சியிலையே கதை முடிந்து விடுகிறது. #சக்ரா - 4/n
அதன் பிறகு வந்த காட்சிகளின் செயற்கைதனமும் தர்க்க பிழைகளும் படத்தையே மொத்தமாக கவிழ்த்து விட்டது. கதாநாயகி முக்கியதுவம், வில்லன் கதாபாத்திரம் என சில வித்தியாசமான முயற்சிகள் இருப்பினும் பெரும்பாலும் விஷாலின் ஹீரோயிஸம் தான் ஹைலைட் செய்யபடுவதும் படத்தின் முக்கியமான பலவீனம். - 5/n
இதற்கு மத்தியில் ரோபோ சங்கரின் சிரிப்பே வராத காமெடிகள் வேறு. படத்தின் செயற்கையான வசனங்களுக்கு மத்தியில் ரசித்த இரு வசனங்கள் "எதிராளி அதிபுத்திசாலியா இருந்தா நம்மள அடிமுட்டாளா காட்டிக்கனும்." "அறிவில்லாம இருக்கவன் மட்டும் முட்டாள் இல்ல அதிகமா கோப படுறவனும் தான்" #சக்ரா - 6/n
விஷால் நடித்து இதற்கு முன் வெளியான ஆக்ஷ்ன் படத்தை விட இந்த படத்தின் இரண்டாம் பாதி மோசமாக இருந்தது. விஷால் இனியாவது கதை தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். #சக்ரா#chakra - End #KarthicdmReviews