தேசிய உணர்வு, நாட்டின் பாதுகாப்பு, நிலையான ஆட்சி, வலுவான தலைமை, பாகிஸ்தான் - சீனாவிடம் அஞ்சாத நடவடிக்கைகள், அரசியலிலும் நிர்வாகத்திலும் நேர்மை, இதுவரை எந்த அரசும் செய்யாத பிரம்மாண்டமான மக்கள் நலத்திட்டங்கள்,
அதை ஊழலில்லாமல் நிறைவேற்றிய வழிமுறை, இரவு பகல் பார்க்காத அயராத உழைப்பு, உலக அரங்கில் பாரதத்தின் அந்தஸ்தை உயர்த்தியது - போன்ற பல சாதனைகளைச் செய்த நரேந்திர மோடிக்கு, மக்கள் அன்புடன் அணிவித்த மாபெரும் பூமாலை இந்த வெற்றி என்றால் அது மிகையாகாது. #TNWelcomesModi
ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் பெருவாரியான பத்திரிகைகளின் ஒத்துழைப்புடன், காலங்காலமாக நடத்தி வரும் போலி செக்யுலர்வாத, ஹிந்து விரோத, ஜாதிச் சார்பு அரசியலுக்கு, சுனாமியாக மாறிய இந்த மோடி அலை, மரண அடி கொடுத்திருக்கிறது.
எல்லா மதங்களும் சமமே என்கிற அரசியல் நோக்கை (தமிழ்நாடு தவிர) நாட்டின் எல்லா மாநிலங்களிலும் இப்போது காணமுடிகிறது. ரம்ஜான் கஞ்சி குடிப்பதும், கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கூறுவதும் செக்யுலரிஸம்; #TNWelcomesModi
தீபாவளிக்கு வாழ்த்துக் கூறுவது வகுப்புவாதம் என்று கருதிய நகைப்புக்குரிய அரசியலும் மாறி வருகிறது. நான் சிவபக்தர், பூணூல் அணியும் பிராமணர், தாத்தாத்ரேய கோத்ரம் என்று கூறி, விபூதி அணிந்த ராஹுல் காந்தி முதல் காங்கிரஸ்காரர்கள் எல்லோரும், #TNWelcomesModi
2014-ல் ‘ஹிந்து வெறியர்’ என்று பழிக்கப்பட்ட மோடி, தொடர்ந்து வெற்றிவாகை சூடியதால், அரசியலில் ஹிந்து சமுதாய அடையாளம் என்பது மற்ற சமூக அடையாளங்களுக்கு சமமே என்கிற நிலையை மக்கள் ஏற்றதால், #TNWelcomesModi
'நாங்களும் ஹிந்துக்கள்தான்’ என்று கம்யூனிஸ்ட்கள், தி.மு.க.வினர் உள்பட அனைவரும் இப்போது அதைக் கூற வேண்டி வந்திருக்கிறது. பா.ஜ.க. வெற்றி அடைந்த பிறகு, பா.ஜ.க. அலுவலகத்தில் மோடி உரை ஆற்றும்போது, ‘நாங்கள் செக்யுலர் என்று பேட்ஜ் அணிந்து, #TNWelcomesModi
ஜாதி அரசியலுக்கும் அதே கதி நேர்ந்திருக்கிறது. ஜாதி அரசியல் வலுவாக இருக்கும் உ.பி., பிஹார், மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் ஜாதிக் கட்சிகள் மண்ணைக் கவ்வியிருக்கின்றன. #TNWelcomesModi
உ.பி.யில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் அமைத்த எஸ்.சி. + யாதவ் + முஸ்லிம் சமுதாயங்களின் மகா கூட்டணி, பா.ஜ.க.வைக் கவிழ்க்கும் என்கிற கணிப்பு வெறும் கனவாகியது. #TNWelcomesModi
உ.பி.யில் 2014 தேர்தலில் 44 சதவிகிதம் வாக்குகள் பெற்ற பா.ஜ.க., இந்த முறை (ஏறக்குறைய) 50 சதவிகித வாக்குகளைப் பெற்று, 62 இடங்களைப் பிடித்து ஜாதிவாத - மதவாத அரசியலை வீழ்த்தி இருப்பது மிகப் பெரும் சாதனை. #TNWelcomesModi
உ.பி.யில் 8 சதவிகித முஸ்லிம்களும், நாடு முழுவதும் 10 சதவிகித முஸ்லிம்களும் பா.ஜ.க.வுக்கு வாக்களித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ‘பா.ஜ.க. உயர்ஜாதிக் கட்சி’ என்கிற வாதமும் தவிடு பொடியாகியிருக்கிறது.
அகில இந்திய அளவில் 41 சதவிகித எஸ்.சி. பிரிவினர் பா.ஜ.க.வுக்கு வாக்களித்திருக்கின்றனர். காங்கிரஸுக்கு 28 சதவிகிதத்தினர் மட்டுமே வாக்களித்துள்ளனர். #TNWelcomesModi
என்று அனைத்து சமுதாயங்களும் பெருவாரியாக பா.ஜ.க.வுக்கு வாக்களித்திருக்கின்றனர். படித்தவர்களில் 48 சதவிகிதம் பேர் பா.ஜ.க. வுக்கும், 24 சதவிகிதத்தினர் காங்கிரஸுக்கும், வாக்களித்திருக்கின்றனர். #TNWelcomesModi
மேற்கு வங்கத்திலும் 53 சதவிகித எஸ்.டி. சமுதாயமும், 57 சதவிகித எஸ்.சி., 53 சதவிகித ஓ.பி.சி. சமுதாயங்களும் பா.ஜ.க.வுக்கு வாக்களித்திருக்கின்றன. #TNWelcomesModi
இந்த விபரங்களை இந்தியா டுடே @ ஆக்ஸிஸ்-மை- இந்தியா எக்ஸிட் கணிப்பு ஆய்வு வெளியிட்டிருக்கிறது. 131 எஸ்.சி., எஸ்.டி. தொகுதிகளில் பா.ஜ.க. 77 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. #TNWelcomesModi
‘மோடி பதவிக்கு வந்த நாள் முதலே பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அவரைக் குறி வைத்து எதிர்த்து இயங்கி வருவது ஏன்’ என்கிற கேள்வி பலரது மனதிலும் இருந்து வந்திருக்கிறது. #TNWelcomesModi
அதற்கு விடை - தேர்தல் பிரசாரத்தின் இறுதிக் கட்டத்தில் நரேந்திர மோடி, ‘நான் டெல்லி கான் மார்க்கெட் கும்பல் (khan market gang) உருவாக்கிய தலைவன் அல்ல’ என்று கூறியதில்தான் பொதிந்திருக்கிறது. #TNWelcomesModi
மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும், அந்த அரசின் மீது மறைமுக ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்குள்ள கும்பல்தான் தில்லி கான் மார்க்கெட் கும்பல். அதை ‘தில்லி லட்யன்ஸ் கும்பல்’ என்றும் கூறுவார்கள். #TNWelcomesModi
லஞ்ச - லாவண்யங்களில் ஈடுபடும் அந்த அக்கப்போர் கும்பலை, ரிபப்ளிக் டி.வி.யின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, 2018-லிருந்து தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். #TNWelcomesModi
(quora.com/What&is&Lutyen… &is&Arnab&Goswami&against&it) லட்யன்ஸ் கும்பல் ஒருவரை ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும் என்கிற அளவுக்கு, அதன் செல்வாக்கு வளர்ந்து எல்லா கட்சிகளும், தலைவர்களும் அதற்கு அஞ்சுகிறார்கள். #TNWelcomesModi
மோடி ஒருவர் மட்டுமே அதற்கு அஞ்சவும் இல்லை, அதன் அடாவடிகளுக்கு இடம் கொடுக்கவும் இல்லை. அதை அடியோடு ஒதுக்கிய மோடியை அந்தக் கும்பல் குறிவைத்துத் தாக்கியது.
நகர்ப்புற நக்ஸலைட்களுக்கு ஹீரோவான கண்ணையா குமாரையும், மற்றவர்களையும் ஆதரித்த ராஹுலும், காங்கிரஸும் பெரும் தோல்வி கண்டிருப்பது, ஒரு தேசியக் கட்சியானது தேசியத்தை விட்டு விலகினால், மக்கள் அதை விட்டு விலகுவார்கள் என்பதற்கு உதாரணம்.
மோடியின் முதுகில் குத்திவிட்டு, அவருக்கு எதிராகத் திரும்பி, அவரது எதிர்ப்பாளர்களை இணைக்க முயன்ற சந்திரபாபு நாயுடு - போன இடம் தெரியவில்லை. அப்படியே எதிர்க்கட்சிகள் இணைந்திருந்தாலும் கூட, பா.ஜ.க.வை வீழ்த்தியிருக்க முடியாது. #TNWelcomesModi
10 மாநிலங்களில் அனைத்து இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது பா.ஜ.க.. முடிவாக, எல்லா அபாண்டங்களையும் தாங்கி, நாடு முழுவதும் சூறாவளிப் பயணம் செய்து, #TNWelcomesModi
#TNWelcomesModi
'பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்துடன் சுதந்திரத்துக்குப் பிறகு துணிவாக, தேசியத்துடன் அரசியலை இணைத்து, நாட்டின் எல்லா பிரிவினரின் ஆதரவையும் பெற்று மோடி வெற்றிவாகை சூடியது, இந்திய தேசியத்துக்குப் பெரும் வெற்றி என்பதை மறுக்க முடியாது. #TNWelcomesModi
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சில நாடுகளுக்கு திரும்ப சென்றது சேர்த்து மொத்தம் 108 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கு அதிகபட்சமாக ஆறுமுறை, பிரான்ஸ், சீனா, ரஷ்யாவுக்கு ஐந்து முறை சென்றுள்ளார். மோடியின் வெளிநாட்டு பயணங்கள், ஒப்பந்தங்களின் விபரம்.
பல அரசியல்வாதிகளின் லாரிகள்,ஆம்னி பஸ்கள் ( சொகுசு பேருந்து ) ஒரே ரெஜிஸ்டர் ரேஷனில் தான் ஓடுகிறது,,,,, ஒரேயொரு வண்டிக்கான கணக்கும் அதன் தொடர்பான வரியும் மட்டுமே செலுத்தப் படுகிறது
பெட்ரோல் போடும் போதெல்லாம் கோபம் வந்தது. இந்த முறை பெட்ரோல் பங்கில் புலம்பவே ஆரம்பித்தேன்.
பெட்ரோல் விலை இப்படி ஏத்திட்டே போனா நாம என்ன பண்றது? இன்னும் புலம்ப முன்னாள் இருந்த பெரியவர் சிரித்தார். ஒரு நாளைக்கு 6 ரூபா தான சந்தோசமா குடுங்க.
அவரைக் கோபமாக பார்த்தேன்.
சிரித்த முகம் மாறாமல் சொன்னார்.
நம்ம தமிழ் நாட்டு இந்திய மக்களை கொரோனா நோயிலிருந்து தடுக்க மாநில மத்திய அரசுகள் நிதி கேட்டப்ப, பத்து சதவிதம் பேருதான் குடுத்தோம், கேலி செஞ்சோம். #TNWelcomesModi
முதல் நாள் நிறுவனங்கள் அளித்த நிதிய தவிர்த்து பொதுமக்கள் நிதி 1 கோடிய தாண்டல. ஆனா டாஸ்மாக் திறந்த அன்னைக்கு முதல் நாள் சேல் 150 கோடி ரூபா.
எப்படியோ அந்த கஷ்டமான காலத்த ரெண்டு அரசாங்கங்களும் சமாளிச்சிட்டாங்க.