11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது. -Sg
உங்களுக்குத் தெரியுமா? ஜனநாயக, மதசார்பற்ற இந்தியாவில், ஒரு சமூகம் அதன் வழிபாட்டுத்தலங்களை தானே நிர்வகிக்கும் சுதந்திரமின்றி இருக்கிறது - கடந்தகாலத்தின் கிழக்கிந்திய கம்பெனியை பின்பற்றி அடுத்தடுத்த அரசுகளுக்கு அடிமையாக இருக்கிறது. -Sg #கோவில்அடிமைநிறுத்து
அறநிலையத்துறை கணக்காய்வு அறிக்கை ஒன்றின்படி, "கடந்த 25 ஆண்டுகளில் 1200 தொன்மையான சிலைகள் திருடப்பட்டுள்ளன". கோவில்களை பேராசையின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். இதயம் முழுக்க பக்தி நிறைந்தவர்களே கோவில்களை நிர்வகிக்க வேண்டும். -Sg. @CMOTamilNadu@mkstalin@rajinikanth
#தமிழ் கலாச்சாரம், பக்தியில் தோய்ந்த ஒரு கலாச்சாரம். இலக்கியம், கலை, இசை & நடனம் முதற்கொண்டு, கோவில்கள் பக்தியின் வெளிப்பாடாக விளங்கின. கோவில்களை சிதைந்துப் போகவிட்டால், தமிழ் கலாச்சாரத்தின் அடிப்படையே சிதைந்துபோக விட்டுவிடுவோம். -Sg @CMOTamilNadu@mkstalin@rajinikanth
வலியும் அவமானமும் தருகிறது. சுயமாக தங்களை பாதுகாவலர்களாக நியமித்து கொண்டுள்ளவர்களை விட, திருடர்களுக்கு இச்சிலைகளின் மதிப்பு தெரிகிறது போலும். தனக்கு அர்ப்பமாய் தெரியும் ஒன்றினை, அரசு தன்வசம் வைத்திருக்கக் கூடாது. -Sg #கோவில்அடிமைநிறுத்து@CMOTamilNadu@mkstalin@rajinikanth
கோவில் கட்டுவதும் புணரமைப்பதும் ஒரு கலை மட்டுமல்ல, நுட்பமான ஒரு அறிவியலும்கூட. மிகக்குறைந்த செலவில் செய்வதாகக் கூறும் காண்டிராக்டர்கள் கைகளில், தொன்மையான கோவில் கட்டிடவியல், சுவர்சித்திரங்கள் மற்றும் கல்வெட்டுகள் மீட்கமுடியாதபடி சிதைக்கப்படுகின்றன. -Sg #கோவில்அடிமைநிறுத்து
முதல்வரிடமும் எதிர்கட்சி தலைவரிடமும் கோவில்களை அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பது பற்றிய அவர்களது நோக்கத்தை அறிவிக்குமாறு கோரியுள்ளேன்.பல்லாண்டு கவனிப்பின்றி பராமரிப்பின்றி இருப்பதை நாம் பார்த்துகொண்டு இருக்கலாகாது. சமூகத்திற்கு இது ஆன்மீக தற்கொலை.-Sg @EPSTamilNadu@mkstalin
ஞானிகளையும் நாயான்மார்களைப் போன்ற பக்த கவிகளையும் வளர்த்து வணங்கிய இந்த நாகரிகம், இன்று அந்த நாகரித்தின் செழுமையை போற்றிப் பாராட்டாத நிர்வாகிகளின் பிடியில் சிக்கியிருப்பதை நம்பமுடியவில்லை. -Sg #கோவில்அடிமைநிறுத்து@CMOTamilNadu@mkstalin@rajinikanth
பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையான பழம்பெரும் #கோவில்கள், மற்ற கட்டிடங்களுக்கு பயன்படுத்தவோ கலைப்பொருட்களாக விற்கவோ கற்கள் உடைக்கப்படுவதால், சிதைக்கப்பட்டு சீரழிக்கப்படுகின்றன. கோவில்கள் இதயமில்லாமல் நிர்வகிக்கப்படும் விதம் நெஞ்சை நெருடுகிறது. தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது. -Sg
கோவில்கள் நலனை பாதுகாக்க எந்த படியும் எடுக்கவில்லை"" என அறநிலையத் துறையின் "அக்கறையின்மையை" சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. #கோவில்அடிமைநிறுத்து. பக்தர்களால் மட்டுமே கோவில்களை பேணிவளர்த்து மீண்டும் உயிரோட்டமானதாக மாற்றமுடியும். -Sg @EPSTamilNadu@mkstalin@rajinikanth
இந்திய தலைமை நீதிபதி ஒருவர், "கோவில்களை ஏன் அரசு அதிகாரிகள் நிர்வகிக்க வேண்டும்" என கேள்வி எழுப்புவதும், தமிழகத்தில் நிகழும் "சிலை திருட்டு" பற்றி பேசுவதும், புறந்தள்ள முடியாத கண்டனங்கள். #கோவில்அடிமைநிறுத்து. இது மாநில அரசின் வேலையில்லை. -Sg
கிழக்கிந்திய கம்பெனி கோவில்களை கையகப்படுத்திய போது, வருவாய்க் குழு மூலமாக அவற்றை நிர்வகித்தார்கள். "வருவாய்" என்ற சொல்லே எல்லாம் சொல்கிறது! ஆங்கிலேய அடக்குமுறையின் சுவடுகளை முடிவுக்கு கொண்டுவந்து தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது. -Sg #கோவில்அடிமைநிறுத்து#FreeTNTemples
மெல்ல சாகவிடுவது, கோவில்களுக்கு மரணச் சங்கினை நிச்சயம் ஊதும். கடந்தகாலத்தில் கோவில்கள் அழிக்கப்பட்ட போது, அவற்றை மீண்டும் எழுப்ப மக்கள் உயிரையும் பணயம் வைக்க உறுதியாய் இருந்தனர். #கோவில்அடிமைநிறுத்து. ஆன்மாவிலிருந்து உயிர்பிரிவதை சமூகம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. -Sg
அரசியலமைப்பில் ஒவ்வொரு பிரஜைக்கும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை வாசித்துவிட்டு அதனை அறநிலைத்துறையின் சட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இது இனவெறிக்கு இணையானது. #கோவில்அடிமைநிறுத்து. கோவில்கள் அரசிற்கு சொந்தமல்ல, சமூகத்திற்கு சொந்தமானவை. -Sg
பெரும்பான்மை சமூகத்தில், மக்கள்தொகையில் 87% இருப்பவர்களில், நம் வழிபாட்டு தலங்களை நிர்வகிக்க தேவையான நேர்மையும் திறமையும் கொண்ட கையளவு மக்களை நம்மால் கண்டறிய முடியாது என்று கருதுவது மோசமான அவமதிப்பு. -Sg #FreeTNTemples@CMOTamilNadu@mkstalin@rajinikanth #கோவில்அடிமைநிறுத்து
#கோவில் மூர்த்திகளின் சிலைதிருட்டு உங்களுக்கு அதிர்ச்சி தராவிட்டால், சில கோவில்களில் திருடிய சிலைக்கு பதிலாக போலி சிலையை வைத்துள்ளார்களே! அரசின் பார்வையிலேயே இது நடக்கிறது. #கோவில்அடிமைநிறுத்து. கோவில்களை நிர்வகிக்க அரசுக்கு எந்த காரணமும் உரிமையும் வசதியும் இல்லை. -Sg
பல இடங்களில் செய்யப்படுவது போல, #கோவில்கள், தொல்பொருள் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்பட வேண்டிய நினைவுச்சின்னங்கள் அல்ல. சமூகம் அவற்றை உயிரோட்டமாகவும் துடிப்புடனும் வைத்து, நாகரிகத்தில் பெருமைக்குரிய அவற்றின் இடத்தையும் மீட்டுக்கொடுக்கும். -Sg #கோவில்அடிமைநிறுத்து#FreeTNTemples
குருத்வாராக்கள், தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவுவழங்கும் லங்கார் முதல், பேரிடர் சமயங்களில் செய்யும் உதவிகள் வரை, சமூகங்கள் எவ்வளவு சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டுகள். #கோவில்கள் இன்னும் எவ்வளவோ செய்யமுடியும். -Sg #கோவில்அடிமைநிறுத்து
75வது சுதந்திர தினத்திற்கு முன், ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் கட்சிகள் கோவில்களை சமூகத்திடம் ஒப்படைக்க உறுதியேற்க வேண்டும். இது ஒரே நகர்வில் நிகழத் தேவையில்லை. அந்த நோக்கத்தையாவது வெளிப்படுத்தி, இந்த மாற்றத்திற்கான வழிமுறையை உருவாக்கத் துவங்குங்கள். -Sg #கோவில்அடிமைநிறுத்து
இந்து சமூகத்திற்கு யாத்திரை செல்ல சொற்பமான நிதியுதவி தேவையில்லை. நம் மகத்தான கோவில்களுக்கு நித்தமும் செல்வதுதான் நமக்கு யாத்திரை. நமக்குத் தேவை, நம் கோவில்களின் பிரம்மாண்டத்தை மீட்டெடுப்பது தான், பணம் இல்லை. -Sg #கோவில்அடிமைநிறுத்து@CMOTamilNadu@mkstalin
கோவில்களை சமூகத்திடம் ஒப்படைக்கும் சட்டங்களை நாம் இயற்றுவது அவசியம். இது நீதிமன்றத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை அல்ல. சட்டப்படி, ஒரு சமூகத்திற்கு நியாயமாக சொந்தமானது அவர்கள் வசம்தான் இருக்கவேண்டும். #கோவில்அடிமைநிறுத்து - Sg @CMOTamilNadu@mkstalin@rajinikanth
பக்தர்கள் கோவில்களை சரியாக நிர்வகிக்க மாட்டார்கள் என பயப்படுவது அடிப்படையற்றது உண்மைக்கு புறம்பானது. எல்லா சமூகங்களிலும், பக்தர்கள் நிர்வாகம் செய்யும் எல்லா வழிபாட்டு தலங்களிலும், வளர்ச்சியும் வளமும் தழைக்கிறது. கோவில்கள் மட்டும் விதிவிலக்கு ஆகிவிடுமா? #கோவில்அடிமைநிறுத்து -Sg
கிட்டத்தட்ட 12,000 கோவில்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இதே நிலைமை நீடித்தால், கோவில்கள் அருங்காட்சியகங்களாக & நினைவுச் சின்னங்களாக மாறிவிடும். #கோவில்அடிமைநிறுத்து. கோவில்களின் தனிச்சிறப்பே வளர்ச்சிதான், பதப்படுத்தி வைக்கப்படுவது அல்ல. -Sg
வாழ்த்துகள் திரு. ஜி.கே. வாசன் அவர்களே. பக்திசார்ந்த கலாச்சார வாழ்வு வாழும் தமிழ் மக்களிடம் கோவில்களை ஒப்படைப்பேன் என்று தங்களது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளீர்கள். கோவில் மாநிலமான தமிழ்நாட்டின் பெருமையை நாம் மீட்டெடுப்போம். ஆசிகள். -Sg @TMCforTN#FreeTNTemples
ஸ்ரீரங்கம் - 14ம் நூற்றாண்டு கோவில்; ஒரு தீவிர பக்தை அன்னிய படையெடுப்பின் போது தன் உயிரைத் தியாகம் செய்து தெய்வச்சிலையை காத்தாள். அதே கோவிலில் சிலை திருட்டுக்காக அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவாகியுள்ளது மிகுந்த அவமானத்திற்குரியது. #கோவில்அடிமைநிறுத்து -Sg
ஸ்ரீ அர்தநாரீசுவரர் கோவில், கள்ளக்குறிச்சி - கோவில் நிலத்தில் கட்டிடம் கட்டக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிற்கு தடைவிதிக்கும் நிலை ஏற்பட்டிருப்பது, நம்மை அவமானத்தில் தலைகுனியச் செய்கிறது. #கோவில்அடிமைநிறுத்து. கோவில்களில் பக்திதான் ஒரே அதிகாரமாய் இருக்கவேண்டும். -Sg
#தமிழ்கலாச்சாரம், பக்தியில் தோய்ந்த ஒரு கலாச்சாரம். இலக்கியம், கலை, இசை & நடனம் முதற்கொண்டு, கோவில்கள் பக்தியின் வெளிப்பாடாக விளங்கின. கோவில்களை சிதைந்துப் போகவிட்டால், தமிழ் கலாச்சாரத்தின் அடிப்படையே சிதைந்துபோக விட்டுவிடுவோம். -Sg #கோவில்அடிமைநிறுத்து#FreeTNTemples
பாரதத்திலுள்ள 1 லட்சம் கல்வெட்டுகளில் 60,000 தமிழ்நாட்டில் உள்ளன; கவனமும் திறமையும் இல்லாமல் செய்யப்படும் புணரமைப்பால் இவை படிப்படியாக சிதைந்து வருகின்றன. பூமியில் மிக தொன்மையான நாகரிகத்தின் பல்லாயிரமாண்டு பழமையான பதிவுகளை இழக்கும் நிலையில் உள்ளோம். #கோவில்அடிமைநிறுத்து -Sg
"கோவில் செழித்தால் நாடு செழிக்கும்" - தொன்மையான தமிழ் பொன்மொழி இது. #கோவில்அடிமைநிறுத்து. இது செல்வச் செழிப்பு பற்றியல்ல, செழுமையான கலாச்சாரத்தை பேணி வளர்க்கையில், செல்வச்செழிப்பு அதன் இயல்பான விளைவாய் நிகழும். -Sg @CMOTamilNadu@mkstalin@rajinikanth
#யுனெஸ்கோ வெறும் 10 கோவில்களைத்தான் பார்வையிட தேவையிருந்தது, அறநிலையத்துறை மீது தன் பகிரங்கமான குற்றச்சாட்டை சமர்ப்பிக்க: அப்பட்டமான விதிமீறல்கள், தவறான புணரமைப்பு பணி & தொன்மையான கோவில்களை "படுகொலை" செய்தல். #கோவில்அடிமைநிறுத்து - இது சமுதாயத்திற்கு சுமையல்ல, வரம். -Sg
அரசின் இந்தச் செயலை புரிந்துகொள்ள இயலவில்லை: அதாவது, 2019 ஆண்டில், கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமே அந்நிலத்தை வழங்க அரசாணை பிறப்பித்த அரசு, தற்சமயம் கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க மறுக்கிறது. #கோவில்அடிமைநிறுத்து. - Sg @CMOTamilNadu@mkstalin
சென்னை உயர்நீதிமன்றம், அறநிலையத்துறை அதன் பணியை செய்யத் தவறியதால் சிறப்பு நீதிமன்றம் அமைத்து வெளியிலிருந்து தணிக்கையாளர்களை பணியமர்த்தச் சொன்னது. #கோவில்அடிமைநிறுத்து. இந்த விஷயங்களில் நீதிமன்றம் தலையிட வேண்டியிருப்பது சமுதாயத்திற்கு அவமானம். -Sg @CMOTamilNadu@mkstalin
ஒரு கோவில் அழிந்துபோனாலும் அதன் சொத்துக்கள் அறநிலையத் துறைக்கே சொந்தம். அறநிலையத் துறையின் ஆர்வம் கோவில் மீது இல்லை என்பதை இதுவே தெளிவாக்குகிறது. #கோவில்அடிமைநிறுத்து. - Sg @CMOTamilNadu@mkstalin
யுனெஸ்கோவின் உண்மையறியும் குழு, தமிழக #கோவில்களின் அவலநிலை குறித்து வருந்தி, கோவில்கள் சிதைவதும் அழிவதும் "படுகொலை" என சுட்டிக்காட்டியது. 4 ஆண்டுகளாகியும் அரசின் நடவடிக்கைக்காக இந்த சமுதாயம் காத்துக்கொண்டிருக்கிறது. சமுதாயத்திற்கு பொறுப்பு, வலிமை & வல்லமையை வழங்குங்கள். -Sg
#தமிழ் சார்ந்த அனைத்துமே பக்தியில் வேரூன்றியிருக்கிறது. இந்த மண், கலாச்சாரம், மொழி, கலை - அனைத்துமே பக்தியில் தோய்ந்திருக்கிறது. அந்த பக்தியின் ஆதாரமே கோவில்தான். #கோவில் இல்லாவிட்டால் இது திசைகாட்டி அற்ற நாகரீகம் ஆகிவிடும். #கோவில்அடிமைநிறுத்து. -Sg @CMOTamilNadu@mkstalin
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
May the World unite with Immediacy & Urgency to mitigate the catastrophic impact of #ClimateChange. We have the necessary technology, resources, knowledge & competence. If we squander this opportunity, we may not have another. –Sg @IPCC_CH@UN_SDGnytimes.com/2021/08/09/cli…
As a Generation, this may be our last chance to get it right. May the Policymakers of the World unite with Focus, Determination & Speed to limit irreversible damage. –Sg @IPCC_CH@UN_SDG@UNFCCC #ConsciousPlanet
Humanity is running out of time. Decisive & Cohesive Action is the need of the hour. We must do everything we can as a Generation to mitigate the impact of what is now clearly an imminent disaster. –Sg @IPCC_CH@UN_SDG #ConsciousPlanet
11,999 temples dying without a single pooja taking place. 34,000 temples struggling with less than Rs 10,000 a year. 37,000 temples have just one person for pooja, maintenance,security etc! Leave temples to devotees. Time to #FreeTNTemples -Sg @mkstalin@CMOTamilnadu@rajinikanth