ஓய்வு வயதை உயர்த்தியும், வெளி மாநிலத்தவருக்கு வாய்ப்பளித்தும்
தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பில் மண்ணை அள்ளிப் போடுவதா?
தமிழக இளைஞர்களே, நடக்கவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில்
உதயசூரியனை உதிக்கச் செய்வீர்!
உதவாக்கரைகளை வீட்டுக்கு அனுப்புவீர்!!
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் நடைபெறும் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.அரசின் நிதிநிலை மிகவும் மோசமாகியுள்ளதைப் பற்றிக் கவலைப்படாமல் ஏராளமான கடன்வாங்கி, இப்போது அளிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தின்படி இக்கடன் தொகை ரூ.5லட்சத்து 70ஆயிரம் கோடி ஆக உயர்ந்துள்ளது.
பிறக்கப் போகும் ஒவ்வொரு குழந்தைக்கும்கூட ரூ.63 ஆயிரம் கடனோடு பிறக்கும் ‘கீர்த்தியை’ அதன் தலையில் கிரீடமாகச் சூட்டியுள்ளது அதிமுக அரசு.
இந்த நிதி நிலை நெருக்கடியால் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்குரிய தொகையை உடனடியாக தர இயலாத நிலையில், நிதித்துறை அதிகாரிகளா கிய சில ‘துன்மந்திரிகள்’ தவறான யோசனைப்படியோ என்னவோ, குறுக்கு வழியாக ஓய்வு பெறுவோரை ஓய்வு பெற விடாமல் தடுத்துள்ளனர்.
முதலில் ஓய்வு பெறும் வயதை 59 ஆக ஆக்கி அறிவித்து, பிறகு இப்போது நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமர்ப்பித்த இடைக்கால துண்டு விழும் பட்ஜெட்டில் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
வேலை கிட்டாமல் தற்கொலை எண்ணத்திற்குக்கூட தள்ளப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள பல இலட்சக்கணக்கான இளைஞர்கள், பட்டதாரிகளின் எதிர்பார்ப்பை இந்த அறிவிப்பு - ஆணை நாசமாக்கியுள்ளது.
பல ஆண்டுகளாக அரசுப் பணிகளை ஆற்றிடும் பல அரசு ஊழியர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு வாய்ப்புகளும் கதவடைக்கப்பட்டவைகளாகி விட்டன.
ஆசிரியர்கள் தகுதித் தேர்வில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைக்காகக் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்குச் சென்ற ஆண்டும் வேலை வாய்ப்பு - இந்த ஓய்வு பெறும் வயது நீட்டிப்புக் காரணமாக கிட்டவில்லை.
இரண்டாண்டுகள்-அதுவும் கரோனா தொற்று, ஊரடங்கு, தொழில் முடக்கம், வறுமை, இதற்கிடையில் “வெந்த புண்ணில், அவர்தம் நொந்த உள்ளங்களில் வேல் பாய்ச்சலாமா?”
வேலைவாய்ப்புக்காக காத்திருப்போர் வயது ஏறுவதினால் வயதுவரம்பும் தாண்டி அவர்கள் வேலைவாய்ப்பை வருங்காலத்திலும் இழக்கும் நிலைதானே யதார்த்தம்?
ஓய்வூதியப் பலன்களுக்குரிய நிதியை ஒதுக்குவதில் இயலாமையை திசை திருப்பி, இப்படி ஒரு தந்திரம் எத்தனை லட்சம் குடும்பங்களின் அடுப்புகளில் “பூனை உறங்கும் நிலையை” ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர வேண்டாமா?
இதில் மற்றொரு வேடிக்கை “குடிப்பது கூழ்; கொப்பளிப்பது பன்னீர்” என்பது போன்று பக்கம் பக்கமாக நேற்று முன்னாள் வரை 1000 கோடி ரூபாய் செலவில் அரசு சாதனை என்று முழுப் பக்க விளம் பரங்களை பரிசாக தங்களுக்கு ஆதரவு தரும் ஏடு களுக்குத் தந்த டம்பாச்சாரித்தனத்தை என்னவென்று சொல்வது?
ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குச் சாவடிக்குள் சென்று வாக்களிக்கவிருக்கும் வேலை கிட்டாத வாலிபர்களே, உங்கள் வாழ்வில் மண் போட்ட ஆட்சியை - ‘ஜனநாயக ரீதியில் வீட்டுக்கனுப்பி’ சிறப்பான நல்லாட்சி தர - நாளும் மக்களின் நாயகனாக செயலாற்றும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர்!
புதியோர் ஆட்சியை தி.மு.க. நிறுவினால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு மலரும்.
இளைஞர்களே! உங்கள் வேலைவாய்ப்பை மற்ற மாநிலத்தவர்களுக்குத் தாரைவார்த்தும், வயதைஉயர்த்தியும், உங்கள் வயிற்றலடிக்கும் ஆட்சியைவீழ்த்த, துயரைப்போக்கும் புதியதோர் மாற்றத்தைத்தர தி.மு.க.கூட்டணிக்கு வாக்களித்தால் பழையஆட்சியின் தவறுகள் திருத்தப்படும். புதியதிட்டங்கள் உதயசூரியனால் உதிக்கும்
ஏமாந்து விடாதீர்கள்!!
ஆட்சி மாற்றம் நம் இனத்தின் மீட்சிக்கான மாற்றம் - விடியலுக்கான வித்தூன்றுவீர்! மறவாதீர்!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் செயலாளராக, மத்தியக் குழு உறுப்பினராக, ‘ஜனசக்தி'யின் ஆசிரியராக, நாடாளுமன்ற உறுப்பினராக, தலைசிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, நூலாசிரியராகப் பரிணமித்தவர் தோழர் தா.பா.
உடலால் தோழர் தா.பா. மறைந்தாலும், அவரின் உரைவீச்சு என்னும் சங்கநாதம் - முழக்கம் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது பிரிவு - இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிக்கு எவ்வளவு துயரமோ, அதே அளவு துயரத்தை திராவிடர் கழகம் வெளிப்படுத்துகிறது.
தோழர் தா.பாண்டியன் அவர்களின் அளப்பரிய பொதுத் தொண்டுக்குக் கழகத்தின் சார்பில் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் பல முக்கிய ஊர்களில் எல்லாம் பங்கேற்று அவர் ஆற்றிய உரைகள் ‘‘சமுதாய விஞ்ஞானி பெரியார்'' எனும் நூலாக நாம் வெளியிட்டோம் - பல பதிப்புகளாக வெளிவந்துள்ளன.
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அவரால் கொண்டுவரப்பட்ட வருமான வரம்பு ஆணையை எதிர்த்து திராவிடர் கழகம் மேற்கொண்ட அனைத்து மாநாடுகள் - நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்ற சமூகநீதியாளர் அவர்!
கடந்த ஆண்டு தந்தை பெரியார் நினைவுநாளில் (24.12.2020) அவருக்குப் ‘‘பெரியார் விருது'' அளித்து பெருமகிழ்ச்சி கொண்டது திராவிடர் கழகம். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், கடைசிவரையில் அமர்ந்து, ‘இந்த விருதுக்கு நிகர் வேறு ஒன்றும்இல்லை!' என்று மனந்திறந்து நெகிழ்ச்சியுரையாற்றினார்.
வேலியே பயிரை மேய்வதா? பாலின சீண்டல் குற்றச்சாட்டுக்கு ஆளான காவல்துறை தலைவரை பதவி நீக்கம் செய்க!
பாலின குற்றச்சாட்டுக்கு ஆளான சட்டம் - ஒழுங்கு சிறப்பு காவல்துறை தலைவரை (டி.ஜி.பி.) பதவி நீக்கம் செய்யவேண்டும்.
முதலமைச்சர் சுற்றுப்பயணத்துக்குச் சென்றபோது, பாதுகாப்புக்குச் சென்ற பெண் அய்.பி.எஸ். அதிகாரியான ஒரு மாவட்ட காவல்துறை அதிகாரிக்கு (டி.எஸ்.பி.), சிறப்பு டி.ஜி.பி. என்ற பதவியில் இடையில் சொருகப்பட்ட ராஜேஷ் தாசின் பாலின சீண்டல் குற்றச்சாட்டு மிகவும் அருவருக்கத்தக்க செய்தியாகும்.
சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு தமிழக அரசுக்கும், தமிழ்நாட்டிற்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது!
கரோனா புதிய அலை மீண்டும்
பெரு உருவெடுக்கும் அபாயம்!
கவனம்! கவனம்!! முழு கவனம்!!!
நம் நாட்டில் சுமார் 7, 8 மாநிலங்களில் கரோனா (கோவிட் 19) புதிய அலை மீண்டும் பெரு உருவெடுக்கும் அபாயம் உள்ளது.
தமிழ்நாட்டிலும் அது தொடங்கியுள்ளது என்பது அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரிய செய்தியாகும்!
இதற்கு முக்கிய காரணம், முகக்கவசம் அணிவது முதல் மற்ற தனிநபர் இடைவெளி, அடிக்கடி சோப்பு போட்டுக் கைகழுவுதல், கிருமிநாசினிகளைத் தவறாமல் பயன்படுத்துதல் முதலியவற்றைக் 30% பேரே கடைப்பிடிக்கிறார்கள். மீதியுள்ள 70% பேர் மேற்கண்டவற்றை கடைப்பிடிக்காமல் சகஜமாக நடமாடுவதும், பழகுவதுமாக உள்ளனர்
எனவே, ஒவ்வொருவரும் தவறாமல் கண்டிப்பாக மேற்கண்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்தாமல் கடைப்பிடியுங்கள்!
நம் தோழர்கள்கூட முகக்கவசம் அணியாமலும், அணிவோர்கூட, அதை எடுத்து கழுத்துக்குக் கீழே ‘ஸ்டைலாக’ தொங்க விட்டுக் கொண்டு பேசுவதும் விரும்பத்தகாதவையாகும்.
மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் மூலம் நடத்தப்படும் எட்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில், திருவள்ளுவரை ஒரு புரோகிதப் பார்ப்பனர்போல், காவியுடனும், பூணூல், குடுமியுடன் சித்தரிக்கப் பட்டுள்ள கொடுமை அரங்கேற்றப்பட்டுள்ளதைக் கண்டு நம் நெஞ்சம் கொதிக்கிறது!
திருவள்ளுவர்மீது ஆரியக் கோலம் திணிக்கப் பட்டுள்ள இந்த விஷமச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘ என்ற வள்ளுவரை இப்படிக் கொச்சைப்படுத்துவதா?
“வள்ளுவர் செய் திருக்குறளை
மறுவறநன் குணர்ந்தோர்
உள்ளுவரோ மனுவாதி
ஒருகுலத்துக் கொருநீதி”
என்றார் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை.
அந்த மனுவாகவே, இதன்மூலம் திருவள்ளுவர் ஆக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையல்லவா?
‘‘தமிழகத்திற்கு என்ன பிச்சை போடுகிறீர்களா? ஆயுதத் தொழிற்சாலை பணிக்கான எழுத்துத் தேர்வின் விடைத்தாள் 3 நாளில் அழிக்கப்பட்டது ஏன்?
பணி நியமனம் எந்த அடிப்படையில் மேற்கொள் ளப்பட்டது என்பது தொடர்பாக ஆயுதத் தொழிற்சாலை பொது மேலாளர் பதில் தர வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளனர்.
- ஒரு மாநில அரசு கடமை தவறியது (Dereliction of Duty) என்பதை எவ்வளவு நாசுக்காக உயர்நீதிமன்றமே சுட்டிக்காட்டும் அளவுக்குத் தமிழ்நாட்டு ஆட்சி தமிழ் மக்கள் உரிமைகளை பலி பீடத்தில் வைப்பதை இனியாவது- காலந்தாழ்ந்த நிலையிலாவது உடனடியாக ‘‘விழித்துக்கொண்டு'' ஆவண செய்ய முன்வரட்டும்.
கருநாடக (பி.ஜே.பி.) அரசில், ‘‘80 சதவிகித பணிகள் உள்ளூர்வாசிகளுக்கே!'' (கன்னடியர்களுக்கே) என்று சட்டமும் இயற்றி பிரகடனப்படுத்தியுள்ளது.
தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்
அதுபோல, மத்திய பிரதேச (பா.ஜ.க.) அரசும் தனிச் சட்டமே இயற்றப் போகிறோம் என்று கூறுகிறது.