*வெற்றி தருவான் ஶ்ரீ வேணுகோபாலன்.*

செங்கம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை பேரரசர் முதல்பாமரன் வரை சகலரும் எளிமையாக விதம் விதமாக வழிபட்டிருக்கிறார்கள். கிருஷ்ணன் தவழ்ந்த தருணம் முதல் துவாராதீசனாக தேரில் வலம் வருதல் வரை எல்லாமுமே வழிபாட்டிற்குரியவைதான். 🇮🇳🙏1
என் கண்ணா இங்கே வா... என்று யசோதாம்மாவின் கண்டிப்புக்கு கண் கசக்கி அழுவான். நந்தகோபரின் அன்பிற்கு குழைந்தான். கோபியரின் காதலனானான். அரக்கியொருத்தி ஏமாற்ற எத்தனித்தபோது உயிரை உறிஞ்சினான். நட்பின் இலக்கணத்தை குசேலர் மூலம் காட்டினான். பாண்டவர்களுக்கு ராஜதந்திரியானான்.

🇮🇳🙏2
ரத்த ஆறு பெருகும் முன்னரே பாரதப் போரில் கீதையான ஞான வெள்ளத்தை பாய்ச்சினான். பீஷ்மரின் தியான மூர்த்தியாகி நின்றான்.

உத்தவரோடு ஞான நண்பனாய் வலம் வந்தான். பிரேமையான பக்திக்கு வசப்பட்டான். நாமத்தை சொன்னவருக்கு தன்னையே கொடுத்து தானாக்கிக் கொள்ளும் விந்தையை நிகழ்த்தினான். 🇮🇳🙏3
ஞான பரிபூரணனான ஸ்ரீ கிருஷ்ணன் வெவ்வேறு கோலங்களோடு பல்வேறு தலங்களில் அருட்கோலோச்சுகிறான். அப்படித்தான் செங்கம் என்கிற செங்கண்மா தலத்தில் ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதியாக கம்பீர அழகு காட்டியருள்கிறார்.

🇮🇳🙏4
அது பாரதப்போர் முடிந்த சமயம். ஸ்ரீ கிருஷ்ணர் தென் வங்கக் கடலோரத்தில் குடும்பத்தோடு ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தார். கலியுகம் முழுவதும் அல்லிக்கேணியில் அமர்ந்து அர்ச்சாவதார ரூபமாக அருள்பாலிக்கலாம் என்று உறுதியோடுதான் பயணத்தைத் தொடங்கினார். 🇮🇳🙏5
மெல்ல நகர்ந்து அக்காலத்திய ஏகசக்ரபுரி என்கிற தற்போதைய செங்கத்திற்குள் தம் திருப்பாதத்தை பதித்தார். ஊரே திரண்டது. பேரரசன் முதல் சிறு மன்னன் வரை எல்லோரும் கூடிக் குளிர்ந்து தரிசித்தனர்.

🇮🇳🙏6
காடுகளுக்குள் மறைந்து தவமிருந்த முனிவர்களும் ரிஷிகளும் சித்தர்களும் கிருஷ்ணச் சாரல் வீசுகிறதே என்று ஊருக்குள் குவிந்தனர். அந்த திவ்ய தரிசனம் எல்லோருக்குள்ளும் கல்வெட்டாகப் பதிந்தது. செவி வழிச் செய்தியாகவே பல நூறு தலைமுறைகள் தொடர்ந்தன.

🇮🇳🙏7
நாயக்கர்களின் காலமும் நெருங்கியது. ''ஆஹா... அப்படியா... என்று 'தளவாய் திம்மப்ப நாயக்கர்' வியந்தார். கிருஷ்ணரிடம் பெரும் பக்தி பூண்டிருந்வர் அவர். எப்படியாவது தன் பக்தியை கோபுரமாகக் கொட்டி நிறைத்துவிடத் துடித்தார். கிருஷ்ணன் உள்ளுக்குள் உந்தி அருள் செய்வித்தான். 🇮🇳🙏8
கோயில் பணியும் தொடங்கியது. வேகமாக வளர்ந்து நிறைவுற்றது. அப்படிப்பட்ட அரியதொரு ஆலயத்தை நாமும் தரிசிப்போமா!

ஊரின் நடுவே நூறடி உயரமுள்ள ராஜ கோபுரம் கம்பீரமாக நிமிர்ந்திருக்கிறது. உள்ளே நுழைந்தவுடனே மாபெரும் மைதானத்தின் மையத்திலுள்ள கற்கோயில் நம்மை ஈர்க்கிறது. 🇮🇳🙏9
கோயில் வளாகத்தின் விஸ்தீரணமும் நேர்த்தியான சந்நதிகளின் அழகும் வியப்படையச் செய்கிறது. தாயைத் தேடி ஓடும் சேயைப் போல கோயிலின் மகாமண்டத்திற்குள் நுழைகிறோம்.

🇮🇳🙏10
மண்டபப் படியேறும் முன்பே 'சற்று நில்லுங்கள்' என்பதுபோல அசரடிக்கும் அழகோடு யாளியின் சிற்பம். 🇮🇳🙏11
மண்டபப் படிகளின் பக்கவாட்டில் நாலு கால்பாய்ச்சலோடு ஓடும் யாளியும், தன் முகத்தை பின் பக்கம் திருப்பி கோபாவேசத்தோடு வாய் பிளந்து நாக்கை நீட்டி அலறும் சீற்றத்தையும் கல்லில் ஓட விட்டிருக்கிறார்கள். சற்று உள்ளே நகர்ந்து பார்க்க சிற்பக் காடுகளாக அந்த மண்பமே விரிந்திருக்கிறது.

🇮🇳🙏12
விரற்கடையளவு சிற்பம் முதல் ஆளுயர சிலை வரை குழைத்து குழைத்து இழைத்திருக்கிறார்கள். ஏதோ களிமண்ணை பிசைவதுபோல கல்லை வைத்துக் கொண்டு அநாயாசமாக விளையாடியிருக்கிறார்கள்.🇮🇳🙏13
தசாவதாரத்தை ஒரு தூண் முழுவதும் வரிசையாக வடித்திருக்கிறார்கள். இரண்ய கசிபுவின் வயிற்றை கிழிக்கும் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தையும், வாமனரின் தேஜஸையும், கிருஷ்ணரின் சிருங்காரத்தையும் கற்களில் உலவவிட்டிருக்கிறார்கள்.

🇮🇳🙏14
உதட்டில் பொருத்திய புல்லாங்குழலோடு சங்கு சக்ரத்தோடு காட்சிதர கண்ணன் ஒரு காலை மடித்து திரிபங்க நிலையில் நிற்கிறான். மடித்த காலின் பாதத்தை பசு தன் நாவால் வருடுகிறது. இந்த சிற்பத்தை வேறெங்கும் காண முடியாது. 🇮🇳🙏15
இது அத்ரி மகரிஷிக்காகவே கிருஷ்ணன் காட்டிய அபூர்வ கோலம். இந்த மண்டபத்தை மட்டும் கல் கல்லாய் தடவிப் பார்த்து முழுவதும் அறிந்து ரசிக்க சில மாதங்களாகும் எனில் மிகையில்லை. இந்த மண்டபத்திலேயே தளவாய் திம்மப்ப நாயக்கரின் சிலையையும் காணலாம்.

🇮🇳🙏16
அடுத்து அர்த்த மண்டபத்தை அடைகிறோம். அழகான அலங்காரங்களோடு உற்சவத் தாயாரான கனகவவல்லித் தாயாரை தரிசிக்கிறோம். அருகேயே ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் உற்சவப் பெருமாளாக சேவை சாதிக்கிறார். 🇮🇳🙏17
அதற்கு அடுத்ததாக கருவறையில் ஸ்ரீ ருக்மிணி பாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி சுவாமி ஆச்சரியமாக காட்சி தருகிறார். வேணுகோபாலன் பார்த்தசாரதியாக சாரத்யம் செய்பவனாக கையில் சாட்டையோடு நிற்கிறார். 🇮🇳🙏18
இடது கரம் வரத ஹஸ்தம் காட்ட, தலையை சற்றே திருப்பி குதிரைகளை செலுத்துபவர்போல சேவை சாதிக்கும் அழகு உள்ளம் நெகிழ்த்தும். ஏன் இப்படியொரு மூர்த்தத்தை இங்கு பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

🇮🇳🙏19
பார்த்தசாரதியாக காட்சி தந்தான் என்று புராணம் கூறினாலும், நாயக்க மன்னரின் பக்தியே அதற்கு அடிப்படையான காரணமாகும். வேணுகான கண்ணனை ருக்மிணி, பாமாவோடு சாரத்யம் செய்யும் கோலத்தோடேயே அவர்கள் உபாசித்த வண்ணம் இருந்திருக்க வேண்டும். 🇮🇳🙏20
மூவரும் இப்படி நின்ற கோலத்தில் அருள்பாலித்துக் கொண்டிருப்பதை எப்போதும் தரிசித்தபடி இருக்கலாம். இந்த சந்நதியில் கமழும் பச்சைக்கற்பூரமும் துளசியின் வாசமும் உள்ளத்தை குளிர்விக்கிறது. 🇮🇳🙏21
பிரச்னை... பிரச்னை... என்று குமுறும் மனமானது எண்ண ஓய்ச்சல்களெல்லாம் இல்லாது கிருஷ்ண சாந்நித்தியத்தில் அடங்குகிறது. பேரமைதி நம்மைச் சூழ அங்கிருக்கும் பிரவாகமான சக்தியொன்று நமக்குள் புகுகிறது.

🇮🇳🙏22
இப்படியாக மூன்று மண்டபங்களையும் விட்டுப் பிரிய மனமில்லாது பிராகாரத்தை வலம் வருகிறோம். முதலில் தனிச் சந்நதியில் பேரருளோடு கனகவல்லித் தாயார் அருளைப் பொழிகிறாள். அடுத்ததாக ஆண்டாள், ஆழ்வார்கள், ராமானுஜர் சந்நதி என்று ஒவ்வொன்றாக தரிசிக்கிறோம். 🇮🇳🙏23
ஏறக்குறைய 1600ம் வருடம் இக்கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. மெல்ல நகர்ந்து கோயிலின் கொடிமரத்திற்கு கீழ் விழுந்து பரவுகையில் வேணுகானம் செவிக்குள் புகுந்துநெஞ்சத்தை நிறைக்கிறது. 🇮🇳🙏24
இத்தலம் திருவண்ணாமலை பெங்களூரு பாதையில் திருவண்ணாமலையிலிருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

28 Feb
குருவே துணை...! பெரியவா சரணம்...!

ஸ்ரீசக்கரத்தின்_மகிமைகள் :

எந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீசக்கரம் என்பது ஆன்றோர் வாக்கு. ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம், மனித குலத்துக்கு சங்கரரின் அருள்கொடை.

1
காஞ்சி காமாட்சியம்மன் கோயில், திருவானைக்காவல், திருவொற்றியூர் போன்ற எண்ணற்ற தலங்களில் இந்த ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

2
மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமே ஸ்ரீசக்கரம். உலகை ரட்சிக்கும் நாயகியான ராஜராஜேஸ்வரி மகாமேருவில் உறைபவள். மகாமேருவின் உருவையே ஸ்ரீசக்கரத்தில் பொறிக்கிறார்கள்.

3
Read 15 tweets
28 Feb
இந்தியாவில் காங்கிரஸ் காணாமல் போகும்: அமித்ஷா

புதுச்சேரி: புதுச்சேரி மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் காங்கிரஸ் காணாமல் போகும் என, காரைக்காலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் நடந்த பா.ஜ., பொதுக்குழுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:

வரும் தேர்தலில் வெற்றி பெற்று, புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
காங்கிரசில் தகுதிக்கு இடமில்லை என்பதால், புதுச்சேரி மட்டும் அல்லாமல், இந்தியா முழுவதும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். புதுச்சேரியில் 75 சதவீத இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர்.
Read 9 tweets
28 Feb
மோடியிடம் பாடம் கற்க வேண்டும்: குலாம் நபி ஆசாத் பாராட்டு

ஜம்மு: பிரதமராக பதவியேற்ற பின்னரும், ஆரம்ப காலத்தில் தேநீர் விற்றதை மறக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
ஜம்முவில் குஜ்ஜார் சமுதாய மக்களிடையே அவர் பேசியதாவது: பிரதமராக பதவியேற்ற பின்னரும், மோடி ஆரம்ப காலத்தில் தேநீர் விற்றதை மறக்கவில்லை. தேநீர் விற்றேன் என்பதை பெருமையாக சொல்வார். மக்கள் அனைவரும் மோடியிடம் இருந்து பாடம் கற்க வேண்டும்.
அரசியல் ரீதியாக மோடியுடன் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், அவர் அடிப்படை தெரிந்த மனிதர். கொரோனா பரவல் அரசியல் சாசன சட்டம் ரத்து காரணமாக காஷ்மீர் பொருளாதாரத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய வேண்டும். வளர்ச்சி பணிகளை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும்.
Read 5 tweets
28 Feb
அரசின் அடிமைத்தனத்தில் இருந்து கோயில்கள் விடுதலை பெற வேண்டும்: சத்குரு

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது:
கோயில் என்பது தமிழ் மக்களுக்கு ஆன்மாவைப் போன்றது. இந்த ஆன்மா அரசாங்கத்தின் கையில் அடிமையாக இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்கள் சரியான பராமரிப்பின்றி பாழடைந்து போயுள்ளன.
2020-ம் ஆண்டு இந்து அறநிலையத் துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், 34,000 கோயில்களில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவே வருவானம் வருகிறது.
Read 4 tweets
28 Feb
50 லட்சம் பேருக்கு மேல் பயன்படுத்தும் சமூக வலைதளங்களுக்கு அரசின் கட்டுப்பாடுகள் கட்டாயம்
புதுடில்லி: சமூக வலை தளங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சமீபத்தில் உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, '50 லட்சம் பேர் பயன்படுத்தும் சமூக வலை தளங்களுக்கு அவை பொருந்தும்' என, குறிப்பிட்டுள்ளது.
'வாட்ஸ்ஆப், டுவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலை தளங்கள், இந்தியாவில் செயல்படுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், இந்த சமூக வலை தளங்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.
Read 5 tweets
28 Feb
டோல் கட்டணக் கொள்ளை பற்றி ஒரு சிறு விளக்கம்

வாஜ்பாய் காலத்தில் முதலில் 10 வருடங்களுக்கு மட்டுமே ஒப்பந்தக்காரர்களுக்கு டோல் கட்டணம் வசூலிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது.
10 ஆண்டுகள் கழித்து UPA ஆட்சியில் அதை புதுப்பிக்கும்போது சராசரிக்கும் குறைவான உரிமைத் தொகையை அரசு சார்பில் பெற்றுக்கொண்டு அதை 5 ஆண்டுகளுக்கு பதிலாக ஒரே அடியாக மேலும் 20 வருடங்களுக்கு தொடர் நீட்டிப்பு செய்து கொடுத்து விட்ட்டார்கள்.
திரும்பவும் பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் 20 வருடங்கள் உரிமம் என்பதை ரத்து செய்ய முயற்சித்தார்கள்.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!