ஜெயலலிதா வேட்பாளார் பட்டியல் வெளியிடும் ஸ்டைல்:
2006 சட்டமன்ற தேர்தல் நேரம், நான் சன்டிவி ரிப்போர்ட்டராக இருந்த போது, பொதுவாக காங்கிரஸ் தான் என் பீட் என்பதால் அவர்களின் முடிவை நோக்கி தினமும் காத்திருக்க வேண்டி இருக்கும். (1 of 16) #TnPolitics #ReportersDiary
திமுக+காங்கிரஸ்+கம்யூனிஸ்ட் கூட்டணி பல நாட்கள் நடைபெற்று முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிப்பு வரும்.
மற்றொருபுறம் அதிமுக+மதிமும+விசிக பேச்சுவார்த்தை அதிமுக அலுவலகத்தில் நடைபெறும் ஆனால் முடிவுகள் எப்போ வேணா வரும். (2of16)
அப்படி கூட்டணி சீட் பேச்சுவார்த்தை நடைப்பெற்று கொண்டிருக்கும் நேரம், ஒரு நாள் பணியை முடித்துவிட்டு மாலை 7 மணிக்கு வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுக அலுவகத்தில் காலை நடைப்பெற்றது, சீட் முடிவானாலும் எந்த தொகுதினு முடிவுகள் எட்டப்படவில்லை.(3)
ஆனால் சோர்ஸ் மூலம் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவதாக 7 மணிக்கு எனக்கு தகவல் கிடைத்தது. எடிட்டரிடம் சொன்னேன், அவர் அதலாம் இருக்காது, இருந்தாலும் கேமரா இல்லாமல் போயஸ் கார்டன் போய் சும்மா பார்த்துட்டு வரச்சொன்னார்.
நானும் என் டிவிஸ் எக்செலை எடுத்துக் கொண்டு போயஸ் கார்டன் போனேன். கும் இருட்டு, பொதுவாக அந்த ரோட் மயான அமைதியாக இருக்கும், ரோடு தொடக்கத்தில் பேரிகேட் மற்றும் காவலர் யார் என்று கேட்டுவிட்டே உள்ளே அனுமதிப்பார். (4of16)
நானும் ஐடியை காட்டிவிட்டு உள்ளே சென்று ஜெ வீட்டு அருகே பார்க் செய்துவிட்டு சுற்றி பார்த்தேன். ஒரு சில அதிமுக தொண்டர்கள் அங்கே உலாவிக் கொண்டிருந்தனர். வேட்பாளர் பட்டியல் வருவதற்கான எந்த சுவடும் இல்லை, ஆனா வந்த சோர்ஸ் சரி என்று நம்பி, மெல்ல ஜெயா வீட்டுக்கு சென்று கதவை தட்டினேன்.(5)
செக்யூரிட்டி வெளியே வந்து என்ன என்றார். நான் ரிப்போர்டர் என்றேன். செய்தி இருப்பதாக கேள்விப்பட்டேன், வேட்பாளர் பட்டியல்.... என்று இழுத்தேன். அவர் என்னை முறைத்துவிட்டு, அதலாம் இல்லையே என்றார்... எங்கிருந்து வறீங்க? என்றார். (6of16)
நான் சன் டிவி என்றால் தெரியும் என்ன நடக்கும் என்று, உடனே ஆங்கிலச் செய்தி சேனல் என்று ஒரு புருடா விட்டேன். நல்ல வேலை இருட்டு என்பதால் அவரால் என்னை அடையாளம் காணமுடியவில்லை, இல்லையென்றால் பொதுவாக அப்போது எல்லாருக்கும் என்னை நன்றாக தெரியும்.(7of16)
கையில் மைக், கேமரா எதுவும் இல்லாததால் நம்பிவிட்டார் . உடனே, அப்படியா உங்க விசிட்டிங் கார்ட் கொடுங்க உள்ள கேட்டு சொல்றேன் என்றார். அய்யோ மாட்டிக்கிட்டேனே! அப்போ நியூஸ் நிஜம் தான் ஆனா எப்படி பட்டியல வாங்குறது, ப்ரேகிங் நியூஸ் ஆச்சே...உடனே என் ஹேண்ட்பேக்கில் கை விட்டு துழாவினேன் (8)
அட என் அதிர்ஷ்டம் பிரபல ஆங்கில சேனல் பெண் நிருபரின் கார்ட் என்னிடம் இருந்தது. அப்படியே அதை கொடுத்துவிட்டு படபடனு காத்திருந்தேன். அடையாளம் வேற தெரிஞ்சுட்டா என்ன ஆகுமோ என்ற டென்சன், எப்படியாவது பட்டியல கையில் வாங்கிட்டு ஓடிடனும் ப்ளான் போட்டேன். (9of16)
செக்யூரிட்டு உள்ளே போய் 5 நிமிடத்தில் வந்தார், கையில் பட்டியல்; என் முகத்தில் மலர்ச்சி. வாவ் என்று நானே சொல்லிக்கொண்டு வாங்கிக் கொண்டு அங்கிருந்து சற்று தொலைவு வந்து நின்று எடிட்டருக்கு கால் செய்தேன். உடனே செய்தி ரூம் வேகம் பிடித்தது, ஹெட்லைன் மாறியது...(10of16)
என்னை அங்கிருந்தே முக்கிய வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் என்ன என்று படிக்க சொன்னார், அலுவலகம் போகும் வரை டைம் இல்லை, இப்போது போன்று வாட்ஸ் அப் இல்லை. அங்கு இருந்த ப்ளாட்பாரம் ஒன்றில் அமர்ந்து என் செல்போன் டார்ச் மூலம் பட்டியலை புரட்டி படிக்க ஆரம்பித்தேன்.. (11of16)
தீடிரென என்னைச் சுற்றி 10-15 அதிமுக தொண்டர்கள். நான் பட்டியல் வைத்திருப்பது தெரிந்து என்னை நோக்கி ஓடி வந்தார்கள். எனக்கு படபடப்பு அதிகரித்தது. ஒன்று வேகமாக நியூஸ் தரனும், மற்றது நான் பொய் சொல்லி பட்டியல் வாங்கினேனு தெரிஞ்சா அடி விழுமோனு பயம்😅(12of16)
ஆனால் அப்படியெல்லாம் நடக்கல, அவர்கள் எனக்கு உதவினார்கள், ஒருத்தர் ‘நீங்க படிங்க மேடம் நாங்க லைட் காட்டறோம் என்றார்...’ மற்றொருவர் ‘அம்மா எங்க நிக்கறாங்கனு சொல்லுங்க மேடம்...’ என்று உற்சாகமானார். (13of16)
இப்படியே ஒரு 10 நிமிடம் புரட்டி, புரட்டி வேட்பாளர் பட்டியலை படித்தேன். ஜெயலலிதா-ஆண்டிபட்டி என்று வாசித்தேன், பின்னால் இருந்தவர் லைட்டா முறைச்சுட்டு சரி அம்மா என்றார். சரி சரி சமாளிச்சுட்டு முடிக்கும் தருணம் ஒடி வந்து ஒருவர் சாக்லேட் கொடுத்தார். (14of16)
இருள் சூழ்திருந்த போயஸ் ரோடு திடீரென கோலாகலம் ஆனது. ஆபிசில் டெம்ப்லேட் ரெடி செய்து-பிரமாதமாக தலைப்புச் செய்திகளாக போட்டுவிட்டனர். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு நடத்துட்டு இருக்கும், அசால்டாக வேட்பாளர் பட்டியலை வீட்டிலிருந்து வெளியிடுவார். இதுதான் ஜெ-வின் ஸ்டைல்! (15of16)
(பின் குறிப்பு: நியூஸ் முடிச்சு வண்டியில் கிளம்பும் நேரம், எதிரில் வந்தார் அந்த ரிப்போர்ட்டர். நான் விசிட்டிங் கார்ட் காட்டிய ஆங்கில சேனலின் ரிப்போர்ட்டர். வெயிட் பண்ணு பட்டியல் வாங்கிட்டு வரேனார்.நானு 🥶அய்யோ அங்க போனா என் ரீல் அறுந்துடும் அவ்வளவுதானு, பைக்கில் வேகமாக ஜூட்😆)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Induja Ragunathan

Induja Ragunathan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!