சென்னை: ஓசி பிரியாணி கொடுக்காத கடைக்காரரை போட்டு உதைப்பது, மாமூல் தராத பியூட்டி பார்லர் பெண்களை அடிப்பது போன்ற அடாவடிகள் எல்லாம் ‛உடன் பிறப்புகளுக்கு' கைவந்த கலை என்று ஏற்கனவே மற்ற கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
கீழ் மட்டத்தில் இருக்கும் சில திமுக.,வினர் தான் இப்படி செய்கிறார்கள் என்றால், மேல்மட்டத்தில் உள்ள திமுக தலைவர்களின் பேச்சுகளும் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தலாகவே இருக்கிறது. ஸ்டாலின் மகன் உதயநிதி ஆரம்பித்து, நேற்று கட்சியில் சேர்ந்த செந்தில் பாலாஜி வரை இப்படி தான் பேசுகின்றனர்.
அதிமுக.,வில் இருக்கும் வரை நாகரிகமாக பேசி வந்த செந்தில் பாலாஜி, திமுக.,வில் சேர்ந்த பிறகு அநாகரிக பேச்சுகளை அள்ளி தெளிக்கிறார். அந்த கட்சியில் சேர்ந்தால் மட்டும் ஏன் இப்படி பேச்சு வருகிறது என கேட்கின்றனர் மற்ற கட்சியினர்.
சமூக வலைதளங்களில் இந்த பேச்சுகள் வைரலாகி மக்களை மிரட்டுகின்றன.
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டசபை தேர்தல் வரவுள்ளது. அதற்காக திமுக, அதிமுக கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திமுக ஆட்சியில் அராஜகங்கள் நிறைந்து இருந்ததாகவும்,
10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாகவும் முதல்வர் பழனிசாமி அவ்வப்போது கூறி வருகிறார்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக சில இடங்களில் திமுக.,வினர் அடாவடி செய்ததும் நிகழ்ந்தது.
தேர்தல் நெருங்கும் சமயத்திலேயே திமுக.,வின் தலைவர்களும் அந்த அராஜக போக்கை கையில் எடுத்தனர்.
உதாரணமாக கடந்த நவம்பர் 20ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அனுமதி பெறாமல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர்.
உதயநிதியின் கைதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்திற்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.
பின்னர் பேசிய உதயநிதி, ‛‛முதல்வர் பழனிசாமி தூண்டிவிடுகிறார். அதை செய்பவர் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ். அவரது பெயரை எல்லாம் நாங்கள் (திமுக) ஞாபகம் வைத்திருப்போம்.
இன்னும் அஞ்சு மாசம் தான் இருக்கு. எங்களுக்கு தெரியாத காவல்துறையா, நாங்கள் பார்க்காத காவல்துறையா?'' என மிரட்டும் தோனியில் பேசியிருந்தார்.
இது பெரும் அதிர்ச்சியையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது. அதேபோன்று ஒரு சம்பவம் கரூரில் நடைபெற்றுள்ளது.
கரூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, நேற்று (மார்ச் 17) பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‛‛11 மணிக்கு ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றப் பிறகு 11:05க்கு மாட்டுவண்டியை நீங்களாகவே ஆத்துக்கு ஓட்டுங்க. எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான்.
அப்படி தடுத்தா எனக்கு போன் பண்ணுங்க, அந்த அதிகாரி அங்க இருக்க மாட்டான்,'' என பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது சமூகவலைதளங்களில் திமுகவின் அராஜக போக்கு என விமர்சிக்கப்பட்டது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*கிருஷ்ண பகவான் உயிர் பிரிந்த அதிசய இடத்தில் அமைந்திருக்கும் ஆச்சரிய ஆலயம்.*
குஜராத்தில் உள்ள சோமநாதர் ஆலயம். சிவாலயங்களுள் மிகுந்த பிரசத்தி பெற்றது. குஜராத் மாநிலத்தில், கிர்சோமநாத் மாவட்டத்தில், பிரபாச பட்டிண கடற்கரையில் அமைந்துள்ளது இக்கோவில் . 🙏🇮🇳1
12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையான தலமாக இது திகழ்கிறது
மேலும் இக்கோவிலில் தான் ஆதி சங்கரர் அவர்கள் ஸ்தாபித்த சாராதா பீடம் உள்ளது. ஜோதி லிங்கத்தின் பின் அமைந்துள்ள அம்மன், 51 சக்தி பீடங்களில் தேவியின் வயிற்று பகுதி விழுந்த சக்தி பீடத்திற்குரியது.
🙏🇮🇳2
இந்த கோவில் ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் பெருவதை போலவே, இந்திய வரலாற்றில் பெரும் முக்கியத்துவத்தை பெரும் கோவிலாகவும் திகழ்கிறது. 🙏🇮🇳3
ஒரு விவசாயியின் ஜாதகத்தை சோதித்து பார்த்த ஜோதிடருக்கு , உள்ளூர தயக்கம் ! காரணம் , அன்றிரவு எட்டு மணிக்கு அந்த விவசாயிக்கு மரணம் நேரக்கூடிய கண்டம் இருந்தது ;
அதை ..அவனிடம் நேரிடையாக சொல்ல விரும்பாமல் , ”ஐயா …எனக்கு நிறைய வேலைகள் உள்ளன …
உங்கள் ஜாதகம் என்னிடமே இருக்கட்டும் ! ..நாளை காலையில் என்னை வந்து பாருங்கள் !” என்றார்.
ஜோதிடரின் வீட்டிலிருந்து புறப்பட்ட விவசாயி , தன் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தபோது , மாலை சாய்ந்து இருள் சூழ ஆரம்பித்தது ! அப்போது , லேசாக மழைத்தூறல் ஆரம்பிக்க…
சற்றைக்கெல்லாம் பெருமழை கொட்ட துவங்கியது! மழையில் நனைந்த வாறே ,சுற்றுமுற்றும் பார்வையை சுழலவிட்டவனின் கண்களில் அந்த பாழடைந்த சிவன் கோயில் தென்பட…ஓடோடிச்சென்ற அவன் , கோயிலின் முன்னே இருந்த மண்டபத்தில் ஒதுங்கினான்:..
தமிழகத்தை குடும்ப சொத்தாக நினைக்கும் திமுக: பாஜக தமிழக மேலிட பார்வையாளர் சி.டி.ரவி பேச்சு
தமிழகத்தை குடும்ப சொத்தாக திமுக, காங்கிரஸ் கட்சிகள் நினைக்கின்றனர் என்று பாஜக தமிழக மேலிட பார்வையாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.
ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் டி.குப்புராமை ஆதரித்து தொகுதி பாஜக செயல்வீரர்கள் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவர் கே.முரளிதரன் தலைமை வகித்தார்.
கட்சியின் தேசிய பொதுச்செய லாளரும், தமிழக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி பேசியதாவது:
பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் என்றும் நல்ல நண்பர்களாகவே உள்ளனர். திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்ததும் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
*கோடையிலும் குறையாத நீர். மார்பளவு நீரில் இருக்கும் அதிசய நரசிம்மர் ஆலயம்.*
இந்தியாவில் மலைகள், குன்றுகள், காடுகள் என்று ஏராளமான இடத்தில் கோயில்கள் உள்ளன . குகை போன்ற அமைப்பிலும் நிறைய கோயில்கள் உள்ளன. 🙏🇮🇳1
ஆனால் 300 அடி நீளமுள்ள மலைகுகையில் மார்பளவு தண்ணீரில் காட்சி தரும் நரசிம்மர் கர்நாடக மாநிலத்தில் மணிச்சூழ மலை குகையில் இருக்கிறார் . இது போன்ற நரசிம்மர் இந்தியாவிலேயே இங்கு தான் இருக்கிறார் .
🙏🇮🇳2
இந்த குகையில் இருக்கும் நீர் ஒரு போதும் கூடவோ குறையவோ செய்வதில்லை . வெயில் காலத்திலும் நீர் குறையாமல் நரசிம்மர் மார்பளவு நீருடன் காட்சி தருகிறார் . இவருக்கு ஜர்னி நரசிம்மர் என்று பெயர். கர்நாடக மாநிலத்தின் பிதார் நகரத்தில் இருந்து 5 கி.மி. தூரத்தில் உள்ளது. 🙏🇮🇳3
*வானவில்லின் அறிவியல் தெரிந்த நமக்கு அதன் ஆன்மீகம் தெரியுமா?*
வானவில் என்பது மழைகளின் உள், சூரியவொளி ஊடுருவி அது பிளவுப்படுகிற போது நீர்த்துளிகளின் பின்பாக தெரியும் பிம்பம். பொதுவாக சூரியனுக்கு எதிர் திசையில் வானவில் தோன்றும்.
இதில் ஏழு வண்ணங்கள் இருப்பதும், அவை முறையே சிவப்பு, ஆரஞ்சு, இந்த நிறங்கள் ஒளிபிரதிபலிப்பால் உருவானது என்பதை கடந்து. இந்த வண்ணங்களுக்கு பின் சொல்லப்படும் ஆன்மீக கூறுகளை இங்கே தொகுத்திருக்கிறோம்.
வானவில்லில் தெரிகிற ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொறு மொழியை பேசுகிறது.
நீர்த்துளியிலிருந்து பிரதிபலிக்கும் ஒளியானது தெய்வீக அம்சத்தை நமக்கு உணர்த்த நினைக்கிறது.
சிவப்பு நிறம் நம் மூலாதார சக்கரத்திற்கு உரிய நிறமாகும். இந்த நிறம் அன்பு ரெளத்திரம் இரண்டையும் குறிப்பதாக இருக்கிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு: தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் பழநியில் நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் ஹரிஹர முத்தூர் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், பிராமண சமூகத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின்தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதரவு இல்லை என்றும்,