இந்து சமய அறக்கட்டளைகள் நிர்வாக நிதி என்ற பெயரில் ஒரு fund உருவாக்கப்பட்டு அதில் கோவில்களின் வருமானத்துக்கு ஏற்ப, அதன் வருமானத்தில் இருந்து கீழே குறிப்பிட்ட படி ஒரு பகுதி அந்த நிதியில் வரவு வைக்கப்படும்.
அந்த நிதியில் இருந்துதான் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களுக்கு தமிழக அரசு அளித்த சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை அறநிலையத்துறை அரசுக்கு திருப்பி அளிக்கிறது.
அதை தவிர கோவில் வருமானத்தில் இருந்து ஒரு பைசா கூட அரசிடம் செல்லாது!
இதுதான் கோவில் நிர்வாகத்துக்கு இராம ரவிக்குமார் அனுப்பிய கோரிக்கை மனு. இதுல "தீபத்தூண்"ங்கிற வார்த்தையே இல்ல
வழக்கமான பாரம்பரியத்தின் படி தனக்கு திருப்பரங்குன்றம் மலையில் விளக்கேற்ற அனுமதி வேண்டும்னு கேட்டுருக்காரு. மலை உச்சியில இருக்கிற தூண்ல ஏத்தணும்னு கோரிக்கையே வைக்கல
இது கோவில் நிர்வாகம் அளித்த பதில்
வழக்கமான பாரம்பரியத்தின் படி உச்சிப்பிள்ளையார் கோவில் தீபமண்டபத்துலதான் ஏத்துறோம்... பக்தர்கள் பங்கேற்கலாம்னு பதில் அனுப்பிட்டாங்க.
ஆனா இராம ரவிக்குமார் கோர்ட்டுக்கு போயி, நான் சொன்ன தூண்ல விளக்கேத்த மாட்டேங்குறாங்கன்னு வழக்கு போட்டுட்டாரு
வழக்கு விசாரணைல கோவில் தரப்பு இராம ரவிக்குமார் அனுப்பிய மனுவை எடுத்து காட்டி, இதுல அவர் மலை உச்சியில இருக்கிற தூண்ல விளக்கேத்தணும்னு கோரிக்கையே வைக்கலையேன்னு வாதாடினாங்க.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தூண்கள் பிரிட்டிஷ் காலத்தில் நடப்பட்ட சர்வே கற்கள் என்பதற்கான அதிகாரபூர்வ ஆவணம் சிக்கியது!
தர்காவுக்கு வட மேற்கில் 50 யார்டு தொலைவில் ஒரு சர்வே கல், அந்த சர்வே கல்லுக்கு தென் கிழக்கில் 53 யார்டு தொலைவில், அதாவது தர்காவுக்கு மிக அருகில்..
...மற்றொரு சர்வே கல் என இரண்டு சர்வே ஸ்டேஷன் கற்கள் இருப்பதாக இந்த ஆவணம் கூறுகிறது.
இதில் இருக்கும் lat long புள்ளிகளை அப்படியே பயன் படுத்த முடியாது. அதில் மைனஸ் 2'30" திருத்தம் செய்ய வேண்டும். மேலும் இவை Everest datum புள்ளிகள். அவற்றை WGS-84 க்கு மாற்ற வேண்டும்.
அப்படி மாற்றம் செய்த பிறகு கிடைக்கும் lat long புள்ளிகள் 9°52'38.3"N 78°04'07.7"E
இதை அப்படி கூகிள் மேப்பில் போட்டால், தற்போது சங்கிகள் குறிப்பிடும் அந்த தூண் இருக்கும் இடத்தை காட்டும்
சட்டத்துக்கு புறம்பான நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டிய தேவை இல்ல
2014-லயே திருப்பரங்குன்றம் மலை உச்சியில தீபம் ஏற்றணும்னு ஒருத்தர் வழக்கு போட்டாரு. அந்த கோரிக்கையை வைக்க மனுதாரருக்கு எந்த சட்டபூர்வ உரிமையும் இல்லைன்னு சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி பண்ணிடுச்சு
பிரச்சனை என்னன்னா, எந்த ஆவணங்கள் குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும்னு தேர்தல் ஆணையம் இதுவரை தெளிவுபடுத்தல.
SIR அறிவிப்புல, ஆதார் அட்டையை குடியுரிமை சான்றாக ஏற்றுக்கொள்ள மாட்டோம்னு தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கு. அப்ப, வேற ஏதோ ஒரு குடியுரிமை சான்றை நாம காட்டணும்கிறதை தேர்தல் ஆணையம் சொல்லாம சொல்லியிருக்கு.
தவெக நிர்வாகிகள் ஏன் இந்த சம்பவம் பத்தி எந்த செய்தியாளர் சந்திப்பும் நடத்தலைன்னு நிறைய பேர் கேக்குறாங்க
காரணம் ரொம்ப சிம்பிள். செய்தியாளர் சந்திப்புல எல்லா உண்மைகளையும் சொல்லிட்டா, அதுக்கு அப்புறம் ஊடக புரோக்கர்களையும், இன்புளூயன்சர்களையும் வெச்சி conspiracy தியரி பரப்ப முடியாது
எடுத்துக்காட்டாக, அந்த ஆம்புலன்ஸ் பத்தி கேள்வி கேப்பாங்க. அது தவெக ஏற்பாடு செஞ்ச ஆம்புலன்ஸ்தாங்கிற உண்மையை ஒத்துக்கிட்டாகணும். அப்படி செஞ்சிட்டா அதுக்கு அப்புறம், அந்த ஆம்புலன்சை திமுக அரசுதான் வேணும்னே அனுப்பினாங்கன்னு பொய்யை பரப்ப முடியாது
மத்த நேரங்கள்ல வேணா செய்தியாளர் சந்திப்புல பொய்யான தகவலை கொடுக்கலாம். ஆனா இப்ப இந்த சம்பவம் விசாரணைல இருக்கு. இந்த நேரத்துல அவனுங்க செய்தியாளர்கள் முன்னாடி பொய் பேசினா, நாளைக்கு நீதிமன்றத்துல மாட்டிக்குவானுங்க.
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை சட்டமன்றம் மீண்டும் இயற்றி ஆளுநருக்கு அனுப்பினால், ஆளுநர் ஒப்புதல் கொடுத்தே ஆக வேண்டும் என்று அரசமைப்பு சட்டம் கூறுகிறது.
2020ல அதிமுக ஆட்சி காலத்துலயும், 2022ல திமுக ஆட்சி காலத்துலயும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட பல மசோதாக்களுக்கு ஆளுநர் இந்த 3 முடிவுகளில் எந்த முடிவையும் எடுக்காம காலம் தாழ்த்தி வந்தார். அதனால 30.10.2023 அன்னிக்கு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்துல வழக்கு தொடுக்குது.