கத்தாரில் இருக்கும் அண்ணன், மணி நாலு ஆகுது, இன்னும் தூக்கம் வரமாட்டேங்குதுடா தம்பி என்றார்.
இதே கதை தான் எனக்கும் அண்ணே என்றேன்.
நாங்கள் ஏன் இப்படிப்பதட்டப்படுகிறோம்!?
திமுக ஆட்சிக்கு வந்தால் எங்களுக்கு ஏதாவது கிடைக்குமா? இல்லை.
ஒரு பாதுகாப்பில்லா உணர்வு சூழ்ந்துள்ளது. நம் பிள்ளைகளும், பெற்றோர்களும், அக்கா, தங்கைகளும் பத்திரமாக இருக்க வேண்டும் என்ற ஒரு பதட்டம் தொற்றிக்கொண்டுள்ளது.
எட்டாண்டு அதிமுக அராஜகத்தை பேசாமல், ஐந்தாண்டு மோடியின் கொடுங்கோல் ஆட்சியை பற்றி கவலைப்படாமல்,
திமுகவை குறை சொல்லுவதற்கு மட்டுமே ஒரு தலைமுறையை சங்கிகள் உருவாக்கி வைத்திருக்கிறார்களே என்று மனம் பதறுகிறது.
திமுக வந்தால் இதெல்லாம் மாறி விடுமா என்று அப்பாவியாக கேட்பவர்கள் இருக்கலாம். உங்களுக்கு இந்த பதட்டத்தை, பயத்தை திமுக கொடுக்காது.
இப்போது இருப்பது போலவே அவர்களை விமர்சிக்க கட்டற்ற சுதந்திரத்தை கொடுக்கும். சங்கிகளின் ஆட்சியில் விமர்சனம் செய்யும் கௌரி லங்கேஸ்கள் கொல்லப்படுவார்கள். முகிலன்கள் காணாமல் போவார்கள். ஆசிபாக்கள், அனிதாக்கள், ஸ்னோலின்கள் வாழ முடியாத ஊராக இது மாறும்!
இன்று அடித்தட்டு மக்கள், அன்றாடம் காச்சிகளுக்கு மோடி மீது இருக்கும் கோபம் பெரும்பாலும் பொருளாதாரம் சார்ந்தது. ஆனால், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பொருளாதாரத்தை தாண்டி இந்த மக்கள் பாதிப்படைவார்கள். நிம்மதியான ஒரு வாழ்க்கையை தாண்டி நாம் என்ன எதிர்பார்த்திட போகிறோம்?
சாதி மத கலவரங்கள் தமிழ்நாட்டில் நடக்காமல் இருக்கவும், பாசிச-அடிமை ஆட்சி ஒழியவும் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற வேண்டும்! மக்கள் தீர்ப்பை திமுக எதிர்நோக்குகிறது.
ஏன் திமுகவிற்கு கிடைக்கும் மக்கள் ஆதரவு போன்று பிற கட்சிகளுக்கு கிடைக்கவில்லை?
இதற்கு விடை மிக எளிது. பேரறிஞர் அண்ணா வகுத்து தந்த அரசியல் பாதையும், அதில் பயணிக்கும் திமுகவும் தான் இதற்கு காரணம்.
மக்களிடம் செல்,
அவர்களுடன் வாழ்,
அவர்களிடம் கற்றுக்கொள்,
அவர்களுக்கு பணியாற்று,
அவர்களோடு திட்டமிட்டு,
அவர்களுக்கு தெரிந்தவற்றை வைத்து தொடங்கு,
அவர்களிடம் இருப்பதை வைத்து கட்டமை.
இதை தான் 72 ஆண்டுகளாக திமுக எனும் கட்சி செய்து வருகிறது. எளிய மனிதர்களுக்கான கட்சியாக தொடங்கப்பட்டு இன்று வரை அப்படியே இருக்கிறது.
திமுகவின் வேட்பாளர்கள் குறித்து மக்களிடம் கேட்கும் போது, அவர்களை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம், எந்த உதவி வேண்டுமானாலும் கேட்கலாம், என் மருத்துவதிற்கு உதவி செய்தார், என் பிள்ளை படிப்புக்கு உதவி செய்தார் என்று சொல்வதை கேட்கலாம். இத்தனைக்கும் திமுக பத்தாண்டுகளாக
வணக்கம், இந்த கட்டுரை எழுதும் நான் எழுத்து உலகில் பிரதிலிபி இனையதளம் மூலமாக குடும்ப நாவல்களை எழுதி வருபவன், மற்றபடி என் இயல்பு திராவிடம் சார்ந்து இருந்தாலும் சில விடயங்களில் முரண்பட்டவனாகவும் இருந்துள்ளேன். ஆம், நான் கடவுள் மறுப்பு கொள்கை
கொண்டவன் அல்ல. இராமானுசர் வகுத்த இறை நெறியான வைணவத்தை தீவிரமாக பின்பற்றுபவன். ஆனாலும், என்னுடைய முப்பத்தி இரண்டாம் அகவையில் நடக்க உள்ள இந்த தேர்தலிலும் சரி மற்றும் இதற்கு முன்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் சரி, நான் உதயசூரியன் அல்லது திமு கழகத்தின் தோழமை கட்சிகளின்
சின்னங்களில் மாத்திரமே என் வாக்கினை செலுத்தி உள்ளேன். அதற்கான காரணத்தை விளக்குவதே இந்த கட்டுரையின் சாராம்சம்.
நான் பிராமணர் அல்லாத முன்னேறிய வகுப்பினை சார்ந்தேன். எனக்கும் ஒரு காலத்தில் 90% மதிப்பென் இருந்தும் ஒரு மூன்றாம் தர பொறியியல் கல்லூரியில் எனக்கு கிடைத்த கல்வி,
நீங்கள் நடுநிலையாக காட்டிக்கொண்டால் நிறைய லைக் வரும். நாளை திமுக ஏதாவது தவறு செய்தால் முட்டுக்கொடுக்க தேவையில்லை. ஏன் இந்த இணைய உபி பதவி?
- ராதாகிருஷ்ணன் அண்ணாமலை, தாராபுரம்
அன்பின் ரா.அ,
நான் நடுநிலையாக என்றும் இருந்ததில்லை. இருக்கவும் மாட்டேன்.
திமுக சார்பு நிலை என்பது பெரியாரை உள்வாங்கி, அண்ணாவை படித்து, கலைஞரின் ஆட்சியை பார்த்து, தளபதியின் உழைப்பை உணர்ந்து எடுக்கப்பட்ட நிலைப்பாடு.
திமுக தவறிழைத்தால் தலைவரையே கேட்பவன் தான் திமுக காரன். முட்டுக்கொடுக்க நாங்கள் மற்ற கட்சிகள்போல இல்லை!
திமுக காரன் என்பது பதவி அல்ல. அது ஒரு அடையாளம். அது ஒரு உணர்வு. அதை உணர்ந்தவர்களால் நடுநிலையாக நடிக்க முடியாது. நடுநிலையாக நடிப்பவர்கள் என்றும் உடன்பிறப்பு ஆகமுடியாது.
நான் லைக்கிற்காகவோ, நல்ல பெயர் எடுப்பதற்காகவோ, அங்கிகாரத்திற்காகவோ இங்கே இயங்கவில்லை.
2021 தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி, திராவிட வாசிப்பு மின்னிதழை, சிறப்பிதழ்களாக கொண்டுவருகிறோம். டிசம்பர் 2020 இதழ், பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தை முன்வைத்து "சி.என்.அண்ணாதுரை எனும் நான்" என்கிற தலைப்பில் வெளியானது. ஜனவரி 2021 இதழ், கலைஞர் கருணாநிதியின்
ஆட்சிக்காலத்தை முன்வைத்து "மு. கருணாநிதி எனும் நான்" என்கிற தலைப்பில், பல்வேறு கட்டுரைகளை கொண்டு வெளியானது. பிப்ரவரி 2021 இதழ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பிதழாக “இனி தான் ஆரம்பம்” வெளியானது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில்,
"ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி" எனும் தலைப்பில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி இருக்கும் கட்டுரைகளை தொகுத்து தந்து இருக்கிறோம். இன்றைய சூழலில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைவது காலத்தின் கட்டாயம் என்பதையே இந்த கட்டுரைகள் பறைசாற்றுகிறது.இந்த கட்டுரைகள் ஏன் ஒருவர் திமுக கூட்டணிக்கு
காங்கிரசையும், திமுகவையும் ஆதரித்தவர்களை உளவியல் ரீதியாக பாதிக்க வைத்தது தான் சங்கிகளின் மிகப்பெரிய வெற்றி. இப்போது யோசித்து பார்த்தால், இந்த எதிர்பால் தமிழகம் இழந்தது மிக அதிகம். யார் நமக்கு நண்பன், யார் நமக்கு எதிரி என்பதை நாம் முடிவு செய்யாமல், இன்னொருவன்
நம் மூளைக்குள் திணிப்பதை நம்பி நாம் முடிவெடுத்துவிடுகிறோம். காங்கிரசும் திமுகவும் ஊழல் கட்சிகள் என்றால் பாஜகவும், அதிமுகவும் என்ன கட்சிகள்? காங்கிரசும், திமுகவும் தமிழர் விரோத கட்சிகள் என்றால் பாஜவும் அதிமுகவும் என்ன கட்சிகள்? (ஊழலும், தமிழர் விரோதமும் சங்கிகள் பரப்புரை
என்பது வேறு கதை)
ஏழு வருடமாக எதிர் கட்சிகளை மட்டுமே எதிர்க்கும் ஒரு பெரும்கூட்டம் இணையத்தில் உருவாக்கி வைத்து இருக்கிறார்கள் சங்கிகள். எக்காரணம் கொண்டும் திமுக மீண்டும் வந்துவிடக்கூடாது என்று தெளிவாக இருக்கிறார்கள் அவர்கள். இனியும், நாம் நடுநிலையாக இருந்துக்கொண்டு..