தடாகம் பள்ளத்தாக்கு... தனி சாம்ராஜ்யம்!
கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியை அறுத்துக் கூறு போட்டுக் கொண்டிருப்பவர்களின் தாரக மந்திரம் இதுதான். தடாகம் பள்ளத்தாக்கு தமிழ்நாட்டிற்குள், தாய்நாட்டிற்குள் தான் இருக்கிறதா அல்லது தனியான சட்டம் கொண்ட தனி நாடாகி விட்டதா
என்று சந்தேகப்படும் அளவுக்கு, அங்கே அத்தனை சட்டவிரோதமும், விதிமீறல்களும் அப்பட்டமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள் அல்லது கைநீட்டி காசு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மேற்குத் தொடர்ச்சி மலை... தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களின் ஜீவாதாரத்துக்கும், பொருளாதாரத்துக்கும் உயிர்த்தண்ணீர் ஊற்றும் பல்வேறு நதிகளின் தாய்மடி. இந்த மலையில் இருந்துதான் தமிழகத்தின் தாகம் தீர்க்கும் காவிரி, வைகை, தாமிரபரணி, பவானி, சிறுவாணி, நொய்யல் என எத்தனையோ
ஆறுகள் உற்பத்தியாகின்றன. இந்த மலை, உலகளவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சூழல்மண்டலங்களில் ஒன்று.ஆனால் உயிர் கொடுக்கும் அந்தத் தாயின் கருவறைக்கே செங்கல்களால் கல்லறை கட்டுகிறார்கள்.தடாகம் என்கிற பெயரே அந்தப் பகுதியின் சூழல் தன்மையைச்சொல்லிவிடும். ஆனால்
அங்குள்ள செங்கல் சூளைகள்,
அதற்கான தடயங்களையே அழித்துக் கொண்டிருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியிலுள்ள தடாகம் பள்ளத்தாக்குதான் செங்கல் சூளை
நடத்துவோருக்குவேட்டைக்காடாகஉள்ளது.கனிம வளக்கொள்ளை, காடழிப்பு, அரசு நிலம், புறம்போக்கு ஆக்கிரமிப்பு, நீர்ஆதாரங்கள் மறிப்பு,விவசாயத்துக்கு வேட்டு,குழந்தை
தொழிலாளர், கொத்தடிமை முறை என அத்தனைவிதிமீறல்களும் அங்கேஅரங்கேறுகின்றன.இந்த பள்ளத்தாக்கில்தான் தடாகம், நெ., 24 வீரபாண்டி, நெ., 22 நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம் மற்றும் பன்னிமடை ஆகிய ஐந்து கிராம ஊராட்சிகள் அமைந்துள்ளன. இந்த ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில்தான்,
பழங்குடியினர் பலரும் வசிக்கும் பல்வேறு மலைக்கிராமங்களும் இருக்கின்றன.இங்குள்ள மண்ணின் வளம் இயற்கையின் வரம். செம்மண், களிமண், நொய்யல் மண் என, மூன்று விதமான மண் இந்தப் பள்ளத்தாக்கில் இருக்கிறது. கையில் மண்ணை எடுத்துக் கொட்டினால் அருவி போல பொலபொலவென்று விழும்.
50 அடிக்குத் தோண்டினாலும் ஒரு சிறு கல்லைக் கூடப்பார்க்க முடியாது. இந்த மண் தான்செங்கல் சூளைக்காரர்களுக்கு செல்வத்தை
அள்ளித்தரும் அட்சய பாத்திரமாகவுள்ளது.எதை விதைத்தாலும் பொன் விளையும் இந்த பூமியின் மண்ணை செங்கல் ஆக மாற்றிக்
காசாக்குவதற்கு தான் வரைமுறையின்றி, 100 அடிக்கு மேலாக
பூமியைத் துளைத்துக் கொண்டேஇருக்கின்றனர்.இருபது ஆண்டுகளுக்கு முன்பே, இங்கு செங்கல் சூளைகள் ஆங்காங்கே முளைக்கத் துவங்கிவிட்டன. அப்போதெல்லாம் ஆட்களை வைத்து, பட்டா நிலங்களில் மண்ணை வெட்டி, காளவாசல்களில் செங்கல்களைத் தயாரித்துக் கொண்டிருந்தனர்.அப்போது பட்டா நிலங்களில் மட்டுமே, 1
அடியில் இருந்து, 5 அடி வரைக்கும் தான் மண் அள்ளப்பட்டது.ஆனால் கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கட்டுமானத் துறை வளரத் துவங்கியதும், செங்கல் தேவை அதிகமாகவே, சூளைகள் செங்கல் தொழிற்சாலைகளாக புதிய வடிவம் பெறத் துவங்கின.இப்போது இந்த ஐந்து ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும்,
197 செங்கல் சூளைகள் இயங்கி வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.இந்த சூளைகளுக்காகத் தான் இந்த ஐந்து ஊராட்சிகளுக்குட்பட்ட, 9,500 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலங்களில் மானாவாரியாக மண் அள்ளப்படுகிறது. இவற்றில் பட்டா நிலங்கள் மட்டுமின்றி, புறம்போக்கு நிலங்கள், வனத்துறை, பஞ்சமி, அறநிலையத்துறை,
பூமிதான நிலம் போன்ற அரசு நிலங்கள் எல்லாவற்றிலும், 100 அடி வரையிலும் தோண்டி நிஜமான பள்ளத்தாக்காக
மாற்றியுள்ளனர்.இவற்றை எதிர்த்து யாருமே போராடவில்லையா என்ற கேள்வி எழலாம்... போராடினார்கள்... அவர்களுக்கு நேர்ந்த கதி... அதற்கான பலன் என்ன தெரியுமா?
தஞ்சை நெல்லைப் போல, தடாகம் மஞ்சச்சோளத்துக்கென்று ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. ஒரு காலத்தில், ஒரு கருதில் ஒரு படி சோளம் இருக்கும் அளவுக்கு மஞ்சச்சோளம் வளமையோடு விளைந்த பூமி இது. நீர் நிலை, விளைநிலம் எல்லாவற்றிலும் மண்ணை அள்ளி அழித்து விட்டார்கள்.
இப்போது தப்பித்தவறி ஆங்காங்கே இருக்கும் விளைநிலங்களில்இருக்கும் சோளப்பயிர்களும், பகலிரவாக பறக்கும் மண் லாரிகளிலிருந்து வெளியாகும் துாசியால் புழுதி படிந்து, ஆடு, மாடுகளே உண்ண முடியாத அளவிற்கு விஷமாக மாறியுள்ளன. இந்த பயிர்களை உண்ணும் கால்நடைகள்,
வண்டிவண்டியை மறிக்கும் கர்ணன்!#karnanreview#Karnan#thehindutamil
நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் சில குறிப்பிட்ட இடங்களில் நின்று சாமி கும்பிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அவை, சாலையோர தெய்வங்கள். இவற்றுள் பிரபலமான தெய்வங்களும் உண்டு – ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன்,
ஆண்டிபட்டி கணவாய் தர்ம சாஸ்தா, இப்படிப் பல. இப்படித் தெருவோரம் நிற்கும் தெய்வங்கள் அனைத்தும் மரணத்தோடு தொடர்புடையவை. மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ திரைப்படம், அப்படியொரு சாலை மரணத்தோடே ஆரம்பிக்கிறது.வாகனப் போக்குவரத்துக்கு நடுவே, ஒரு சிறுமி வலிப்பு கண்டு இறந்துபோகிறாள்.
ஒரு உயிர் போராடிக்கொண்டிருக்கிற பதற்றம் எதுவுமில்லாமல் வாகனங்கள் தன் போக்கில் போய்க்கொண்டிருக்கின்றன.அவள் ஏறக்குறைய அனாதையாய் இறந்துபோனாள். இறந்த மறுகணமே அந்த ஆச்சரியம் நிகழ்கிறது. அவளிடம் கன்னிதெய்வ இயல்புகள் தென்படத் தொடங்குகின்றன. அந்தச் சிறுமி எப்படி கன்னிதெய்வமானாள் என்பதை