நீண்டநாட்களுக்குப் பிறகு திரையரங்கில் குடும்பத்துடன் படம்பார்க்க சென்றது கர்ணனுக்காக. மாரிசெல்வராஜின் படைப்பு மிக நேர்த்தியாக அரச பயங்கரவாதத்தையும், அதன் முதுகெலும்பாக அமையும் இந்துத்துவ ஜாதிய வன்மத்தையும், சமூகமயமான சாதிய மனநிலையும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது தீரா வன்மத்தோடு
வேட்டையாடித் தீர்க்கும் இந்த சமூக-அரசியல்-அதிகாரவர்க்க ஜாதியப் போக்கை அப்பட்டமாக, ஒளிவுமறைவில்லாமல், அச்சப்படாமல் காட்சிப்படுத்தியதை எப்படி போற்றாமல் இருக்கமுடியும். பெருங்காமநல்லூரிலிருந்து வாச்சாத்தி, பரமகுடி, கூடன்குளம் வரை நீண்ட வரலாறு கொண்டது அரசின் பயங்கரவாதம். இந்த
வன்முறைகளில்
சாதிய ஒடுக்குமுறையை உள்ளடக்கி பட்டியலின மக்கள் மீது வெளிப்படுத்தப்பட்ட வன்முறைகளே இன்றளவும் மிக மோசமான வலிநீங்கா வடுக்களாகியிருக்கிறது. நம் சமூகம் சனநாயகமற்று, சாதிய வன்மத்தோடு இயங்கி வருவதை நெற்றியில் அடித்துச் சொல்வதைப் போல வெளிப்படுத்தும் 'கர்ணன்'
போன்ற படைப்புகள் மேலதிகமாக வரவேண்டும். மாரி செல்வராஜ்கள் கொண்டாடப்படட்டும். இப்படைப்புகள் நம்மை, நம் சமூகத்தை செம்மைப்படுத்த பேருதவியாய் அமையும். வணிக நெருக்கடிகளுக்கிடையில் சமூகப்பிரச்சனைகளை அம்பலப்படுத்தும் மாரியின் துணிச்சலை எப்படி பாராட்டாமல் இருக்கமுடியும்.
கர்ணன் நமக்கான படைப்பு. நம் சமூகத்தை சனநாயகப்படுத்தும் பெரும்பணியில் உடன் பயணிக்கும் சகபயணி மாரிசெல்வராஜ் நம் தோழன்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இலங்கை பற்றிய ஐ.நாவில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளால் கொண்டுவரப்பட்ட திர்மானம் தமிழர்களின் கோரிக்கையை உள்ளடக்கியதல்ல. அது ஐ.நா மனித உரிமை அவை முன்மொழிந்தவற்றை உள்ளடக்கியவையும் அல்ல, இலங்கையை கடுமையான நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானமுமல்ல. இப்படியாக நீர்த்துபோக செய்யப்பட்ட ஒரு
தீர்மானத்தை கூட மோடி அரசால் ஆதரிக்க இயலாது என்பதே பாஜகவின் தமிழின விரோதத்திற்கு சாட்சி. ஆயிரம் தமிழர் கோவில்கள் உடைக்கப்பட்டதை கண்டுகொள்ளாத போலி கூட்டம், இனப்படுகொலைக்கு நீதிகிடைக்க எப்படி உடன்படும். காங்கிரஸ் கட்சிக்கு எவ்வகையிலும் வேறுபட்டதல்ல பாஜக. தனது பிராந்திய நலனை
அடிப்படையாகக் கொண்டு மேற்குலகம் கொண்டுவரும் இத்தீர்மானம் அமெரிக்கா-பிரிட்டன் தலைமையிலான இராணுவ கூட்டுறவிற்காக தமிழர் கோரிக்கைகளை பேரம்பேச பயன்படுத்துகிறது. தெற்காசிய கடலில் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை நிலைநாட்ட பயன்படுத்தப்படும் தீர்மானத்தை பற்றிய விவாதத்தில் சாதுர்யமாக