மேடையில் பேசட்டும். அதற்கு எதிர்த்திசையில் சீமான் ஒருவர் மட்டும் பேசட்டும். அவர்கள் அத்தனைப்பேரும் மூன்று நாட்களில் சேன்று சேரும் பார்வைகளைச் சீமான் பேச்சு வெறும் மூன்று மணி நேரத்தில் சென்றடைந்திருக்கும்.
சீமான் சராசரி அரசியல்வாதி அல்ல. அவரிடம் போராட்ட குணம் - 21/31
இருந்தது. தத்துவ தெளிவு இருந்தது. வரலாற்று புரிதல் இருந்தது. வாதத்திறமை இருந்தது. பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் அவனிடம் இருந்தது. மக்களை கவரும் வகையில் பாடி வைக்கவும் முடியும், கேள்வி கேட்போரைத் தெறித்து ஓட வைக்கவும் அவரால் முடிந்தது. இவையனைத்தையும் விட தத்துவ - 22/31
நிலைப்பாட்டில் உறுதிப்பாடு என்ற உயர்ந்த குணமும் இருந்தது. இவையாவும் ஒருங்கமைந்த படைப்பாளி என்பதாலேயே மக்களை ஈர்த்து தமிழ்த்தேசியத்தைத் தமிழ் மண்ணில் அமைப்பாக்க அவரால் முடிந்தது.
அனைத்தையும்விட அமைப்புதான் இங்கு முக்கியம். நாம் எதிர்த்துப் போரிடுவது வெறும் - 23/31
சீமானுக்கு முன்னால் தமிழ்த்தேசியம் பேசியவர்கள் எத்தனை பேர்? இயக்கம் கண்டவர்கள் எத்தனை பேர்? கட்சி நடத்தியவர்கள் எத்தனை பேர்?ஆதித்தனார், மபொசி, தமிழரசன், மணியரசன், பழ.நெடுமாறன், தியாகு என அறிவார்ந்த தமிழ்த்தேசிய முன்னவர்களால் ஏன் - 1/31
தமிழ்த்தேசியத்தை இந்த அளவுக்கு வளர்த்தெடுக்க முடியவில்லை? ஏன் அவர்களால் இந்த அரசியலை வெல்ல வைக்க முடியவில்லை? என்று என்றாவது ஒருநாள் நீங்கள் யோசித்துள்ளீர்களா?
தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டு நாம் தமிழரை எதிர்ப்போர் அனைவரும் உங்கள் காதுகளையும் விழிகளையும் நன்றாகத் திறந்து - 2/31
வைத்துக்கொள்ளுங்கள். நான் உங்கள் மனசாட்சியுடன் பேச விரும்புகிறேன்.
இந்தியம் ஒழித்து திராவிடம் நிலைநாட்ட வந்த அறிஞர் அண்ணாதுரை, பெரியார் நடத்திய தி.க.வை உடைத்து திமுகவை 1947 ல் தொடங்கினார். 1967 ல் அக்கட்சியை அரியணையில் ஏற்றினார். அன்றைக்கு எதிரில் ஒரே ஒரு காங்கிரசு - 3/31