மேடையில் பேசட்டும். அதற்கு எதிர்த்திசையில் சீமான் ஒருவர் மட்டும் பேசட்டும். அவர்கள் அத்தனைப்பேரும் மூன்று நாட்களில் சேன்று சேரும் பார்வைகளைச் சீமான் பேச்சு வெறும் மூன்று மணி நேரத்தில் சென்றடைந்திருக்கும்.
சீமான் சராசரி அரசியல்வாதி அல்ல. அவரிடம் போராட்ட குணம் - 21/31
இருந்தது. தத்துவ தெளிவு இருந்தது. வரலாற்று புரிதல் இருந்தது. வாதத்திறமை இருந்தது. பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் அவனிடம் இருந்தது. மக்களை கவரும் வகையில் பாடி வைக்கவும் முடியும், கேள்வி கேட்போரைத் தெறித்து ஓட வைக்கவும் அவரால் முடிந்தது. இவையனைத்தையும் விட தத்துவ - 22/31
நிலைப்பாட்டில் உறுதிப்பாடு என்ற உயர்ந்த குணமும் இருந்தது. இவையாவும் ஒருங்கமைந்த படைப்பாளி என்பதாலேயே மக்களை ஈர்த்து தமிழ்த்தேசியத்தைத் தமிழ் மண்ணில் அமைப்பாக்க அவரால் முடிந்தது.
அனைத்தையும்விட அமைப்புதான் இங்கு முக்கியம். நாம் எதிர்த்துப் போரிடுவது வெறும் - 23/31
தத்துவமா, தலைவர்களையோ மட்டுமல்ல. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரசு என்ற வலிமை வாய்ந்த அமைப்புகளை எதிர்த்துப் போரிடுகிறோம். தமிழ்த்தேசியம் அறம் சார்ந்த தத்துவத்துவமாகவும், அறிவார்ந்த தலைவர்களையும் கொண்டிருந்த போதிலும் அமைப்பாகவில்லை என்பதால் எதிர்த்துப் போரிடும் - 24/31
வலிமையற்று இருந்தது.
தத்துவம், தலைவன், அமைப்பும் ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் போன்றது.
வலிமையான அமைப்புதான் தத்துவத்தைச் செழுமையாக்கும். தலைவனை வலிமையாக்கும்.
அறிவார்ந்த தத்துவம்தான்
அமைப்பின் உயிராகும்
தலைவனின் உள்ளமாகும்.
திறன்மிகு தலைவனோ
தத்துவத்தின் - 25/31
முகம்.
அமைப்பின் குரல்.
கீ.வீரமணிக்கும் சுபவீக்கும் தாங்கள் தாங்கி பிடிப்பது ஒரு தத்தி என தெரியாதா? நம்மைவிட நன்றாகத் தெரியும். ஆனாலும் ஏன் கண்ணுக்குள் வைத்து அடைகாக்கின்றனர். ஏனென்றால் தலைவன் இல்லையென்றால் அமைப்பு சிதையும். அமைப்பு சிதைந்தால் தத்துவம் - 26/31
அழியும். ஆக தத்துவத்தைக் காப்பாற்ற அமைப்பு அதிகாரத்தில் இருக்க வேண்டும் அமைப்பு அதிகாரத்தில் ஏற தலைவனைத் தாங்கி பிடிக்கின்றனர்.
அதற்கு நேரெதிராக தமிழ்த்தேசியம் பேசும் தலைவர்களைக் கடுமையான விமர்சிக்கின்றனர். ஏனென்றால் தமிழ்த்தேசியம் அமைப்பாவதை அவர்கள் விரும்பவில்லை - 27/31
ஏனென்றால் அமைப்பாகிவிட்டால் தமிழ்த்தேசிய தத்துவம் இந்த மண்ணில் நிலைநிறுத்தப்படும்.
முன்னவர்களால் அதுவரை முடியாமலிருந்த, தமிழ்த்தேசியத்தை வலிமையான அமைப்பாக்கினார் சீமான். ஊடகவலிமையற்ற தமிழ்த்தேசியத்திற்கு தன் குரலையே ஊடகமாக்கினார். அவர் குரல் வழிவந்த வலி மிகுந்த - 28/31
வார்த்தைகளே தமிழினத்திற்கு வழியாய் மாறின. காலப்பேராழியில் முதன்முறையாக, இனத்தைச் சூழ்ந்திருந்த பேரிருளை ஒரு ஒலி ஒழிக்கத் தொடங்கியது.
தனது படைப்புத்திறன் முழுவதையும் பயன்படுத்தி தமிழ்த்தேசியத்தை வெகுசன அரசியலாக்கினார். வலிமை வாய்ந்த அமைப்பாக்கினார். நான் சத்தியமிட்டு - 29/31
சொல்கிறேன் தமிழ்த்தேசியத்திற்கு இனி இதுபோல் ஒரு தலைவர் கிடைக்க வாய்ப்பே கிடையாது. தத்துவமும், வரலாறும், பேச்சும், எழுத்தும், உடல் வலிமையும், உள்ள உறுதியும், வாதத்திறமையும், குரல் வலிமையும், அரசியல் தெளிவும், படைப்புத் திறனும் ஒருங்கே கொண்ட ஒரு தலைவன் கிடைப்பது இனி அரிதே - 30/31
அமைப்பான பிறகு திறம்பட நிர்வகிக்க ஆயிரம் பேரால் முடியும்.
ஆனால் அமைப்பை உருவாக்க இங்கு யாரால் முடியும்?
சீமானுக்கு முன்னால் தமிழ்த்தேசியம் பேசியவர்கள் எத்தனை பேர்? இயக்கம் கண்டவர்கள் எத்தனை பேர்? கட்சி நடத்தியவர்கள் எத்தனை பேர்?ஆதித்தனார், மபொசி, தமிழரசன், மணியரசன், பழ.நெடுமாறன், தியாகு என அறிவார்ந்த தமிழ்த்தேசிய முன்னவர்களால் ஏன் - 1/31
தமிழ்த்தேசியத்தை இந்த அளவுக்கு வளர்த்தெடுக்க முடியவில்லை? ஏன் அவர்களால் இந்த அரசியலை வெல்ல வைக்க முடியவில்லை? என்று என்றாவது ஒருநாள் நீங்கள் யோசித்துள்ளீர்களா?
தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டு நாம் தமிழரை எதிர்ப்போர் அனைவரும் உங்கள் காதுகளையும் விழிகளையும் நன்றாகத் திறந்து - 2/31
வைத்துக்கொள்ளுங்கள். நான் உங்கள் மனசாட்சியுடன் பேச விரும்புகிறேன்.
இந்தியம் ஒழித்து திராவிடம் நிலைநாட்ட வந்த அறிஞர் அண்ணாதுரை, பெரியார் நடத்திய தி.க.வை உடைத்து திமுகவை 1947 ல் தொடங்கினார். 1967 ல் அக்கட்சியை அரியணையில் ஏற்றினார். அன்றைக்கு எதிரில் ஒரே ஒரு காங்கிரசு - 3/31