எனதருமை திமுக உடன்பிறப்புகளுக்காக..
(கட்டாயம் முழுமையா படிங்க, பிறகு யோசிங்க)

NIA சுருக்கமாக: UAPA போன்ற சிறப்பு சட்டங்களின் கீழ் வரும் பயங்கரவாத குற்றங்களை விசாரிக்கும் ஒன்றிய அரசின் அமைப்பு
கொண்டு வந்தது: 2008, காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு
பாஜக திருத்தம்: NIA அதிகாரிகளுக்கு மாநில காவல்துறையினருக்கு இணையான அதிகாரத்தைக் கொடுத்தல், இணைய தள தீவிரவாதம் உள்ளிட்டவை பட்டியலில் சேர்ப்பு, வெளிநாடுகளில் நடைபெறுவதை இந்தியாவில் நடைபெற்றதாகக் கருதி விசாரிக்கும் அதிகாரம், வெளிநாட்டினரை விசாரிக்கும் அதிகாரம்,
நாடு முழுவதும் இதற்கான சிறப்பு நீதிமன்றங்களை அமைத்துக் கொள்ள அதிகாரம்

UAPA சுருக்கமாக: இந்திய இறையாண்மைக்கு, ஒற்றுமைக்கு எதிராக செயல்படுபவர்களை ஒடுக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டம்
கொண்டு வந்தது: 1967, காங்கிரஸ் அரசு

பாஜக திருத்தம்: எந்த ஒரு தனி மனிதனையும் விசாரணைக்கு முன்பே
தீவிரவாதி என அறிவிக்கலாம், இச்சட்டத்தின் கீழ் NIA அமைப்பு மாநில அரசுகளின் அனுமதியின்றி எங்கும், எதை வேண்டுமானாலும் பறிமுதல் செய்யலாம், நாட்டில் உள்ள இத்தகைய குற்றங்களை விசாரிக்கும் காவல்துறையினருக்கு உண்டான அதிகாரத்தை NIA அதிகாரிகளுக்கு கொடுத்தல்
ஏன் எதிர்க்கிறோம்? : இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை, கருத்துரிமை, கூடும் உரிமை ஆகியவற்றை நசுக்குவது, மாநில அரசுகளின் உரிமையான சட்டம் ஒழுங்கில் தலையிடுவது, கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைப்பது, ஒன்றிய அரசின் விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் இத்தகைய
கொடுஞ்சட்டங்களை எப்படி வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் விருப்பம் போல் பயன்படுத்துவது!

எண்ணற்ற சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் இயக்கத்தினர், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஆதிவாசி பழங்குடியினர், தொழிற்சங்கத்தினர், மருத்துவர்கள், பேராசிரியர்கள்,
மாணவர்கள் ஏன் இப்போது போராடி வரும் விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரை பலரை இச்சட்டங்களை வைத்து கொடுமைப்படுத்தி வருகிறது இந்திய ஒன்றிய அரசு! (காங்கிரஸ்/பாஜக விதிவிலக்கல்ல)

தனது சித்தாந்தத்திற்கு எதிரானவர்களை, அரசை விமர்சிப்பவர்களை, அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து
போராடுபவர்களை மேலும் முடக்கும் வகையில் ஒன்றிய பாசிச பாஜக அரசு கொண்டு வந்த NIA, UAPA சட்டத் திருத்தங்களை எதிர்த்து ஏன் வாக்களிக்கவில்லையென பாஜகவிற்கு எதிரான கட்சியாக, மாநில சுயாட்சி, மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவத்துவம், மக்களின் அடிப்படை சனநாயக உரிமைகளுக்காக போராடி வரும்
கட்சியாக தன்னைக் காட்டிக் கொள்ளும் இந்தியாவின் 3வது பெரிய கட்சியான திமுகவினை நோக்கி கேள்விகளை எழுப்பினால் கிடைக்கும் பதில்கள்👉 "போடா ஈழ அகதியே, மாங்காவே, நாய் டம்ளரே, அகதி நாயே, ஜோம்பியே, சங்கியே, டயர் அடிமையே" மற்றும் அச்சிலேற்ற முடியாத 🔞🔞🔞வார்த்தைகள்!
அருமை உடன்பிறப்புகளே👌

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Saravanan Natarajan (சரவணன் நடராசன்)

Saravanan Natarajan (சரவணன் நடராசன்) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Saravanan_2021

1 May
தொழிலாளர் தினத்தில் கூட மோசடித்தனம் செய்யும் திமுக!

இந்தியாவில் முதன்முதலில் தொழிற்சங்கத் தலைவர் சிங்காரவேலர் தலைமையில் 1923 ல் சென்னை மெரீனா கடற்கரையில் மே 1 தொழிலாளர் தினம் அனுசரிக்கப்பட்டது.

1957 ஏப்ரல் 15ல் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான கேரள கம்யூனிச அரசு மே 1 ஐ Image
முதன்முதலில் விடுமுறை தினமாக அறிவித்ததைத் தொடர்ந்து 1967 ல் ஜோதிபாசு அங்கம் வகித்த மேற்கு வங்க கம்யூனிச கூட்டணி அரசும் மே 1 ஐ விடுமுறை தினமாக அறிவித்தது.

1920 ல் தமிழ்நாட்டில் (அன்றைய சென்னை மாகாணத்தில்) தொழிலாளர் நலத்துறை உருவாக்கப்பட்டது. Image
1937 களில் ராஜாஜி, 1946 களில் டி.பிரகாசம் ஆகியோரது தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக தொழிற்சங்கவாதியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான வி.வி.கிரி இருந்துள்ளார். 1960 களில் பக்தவச்சலம் தலைமையிலான அரசில் கக்கனும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். Image
Read 4 tweets
1 May
தொழிலாளர்கள் நல தினமான இன்று அதற்கு வாழ்த்தும், வீர வசனங்களும் பேசும் முன் @mkstalin உள்ளிட்ட ஒவ்வொரு உடன்பிறப்புகளும் இதனைப் படித்து விட்டு (ஆதாரங்களுடன்) அதற்கான அருகதை தங்களுக்கு இருக்கிறதா என்பதை யோசித்தி விட்டு பிறகு வாய் திறக்கவும்!

திமுக தலைவர் ஸ்டாலினின் தொழிலாளர் ImageImage
நலச்சட்டங்கள் குறித்த வீர வசனங்களில் சில இங்கே:-

"தொழிலாளர்கள் நலனுக்கு விரோதமான சட்டங்களை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவரும் திமுக, தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் “கேடயமும், போர்வாளாகவும்” திமுக எப்போதும் திகழும் என்று ImageImage
இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்." (மே-2021)

"முதலாளிகளை மட்டுமே மனதில் கொண்டு, அவர்கள் மேலும் மேலும் கொழிக்கும்படி வளர்க்கவும், முழு நேரமும் பாடுபடும் தொழிலாளர்களைத் தொடர்ந்து வஞ்சிக்கவுமான செயலில் மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு ஈடுபட்டு, ஏற்கெனவே தொழிலாளர்களின் ImageImage
Read 10 tweets
28 Apr
பாஜக அரசு அனுமதி அளித்துள்ளபடி இனி,

கோவிஷீல்டு தடுப்பூசி:
ஒன்றிய அரசுக்கு - ரூ.150
மாநில அரசுக்கு -ரூ. 400
தனியார் மருத்துவமனைக்கு - ரூ.600

கோவாக்ஷின் தடுப்பூசி:
ஒன்றிய அரசுக்கு - ரூ.150
மாநில அரசுக்கு -ரூ. 600
தனியார் மருத்துவமனைக்கு - ரூ.1200
#BJPVaccineScam Image
இதுபோக அந்நிறுவனங்களுக்கு முதலீடாக ரூ. 4,500 கோடி மக்கள் பணத்தை பாஜக அரசு கொடுத்துள்ளது!

இந்தியாவில் 45 வயதிற்கு கீழே இருப்பவர்கள் 101 கோடி. அவர்களுக்கு 2 முறை போட வெடுமென்றால் 202 கோடி தடுப்பூசி தேவை. இதனை தனி நபர்களோ அல்லது மாநில அரசுகளோ
#BJPVaccineScam Image
அந்நிறுவனங்களிடம் நேரடியாக காசு கொடுத்து வாங்கிப் பயன்படுத்த வேண்டுமென பாஜக அரசு தெரிவித்துள்ளது.
இதில் 50% மாநில அரசுகளே பணம் கொடுத்து வாங்கி மக்களுக்கு இலவசமாகத் தருமென வைத்துக் கொண்டாலும் அந்த கணக்குப்படி கிட்டத்தட்ட
#BJPVaccineScam Image
Read 4 tweets
17 Apr
திமுக பாராளுமன்ற உறுப்பினர் @DrSenthil_MDRD தான் உள்ளிட்ட திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் NIAக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு காரணங்களாகச் சொன்ன பொய்கள் ஆதாரங்களுடன்..
1. திடீரென கொண்டு வரப்பட்ட மசோதா
2. போதிய நேரமின்மையால் உறுப்பினர்களுடன் பேச முடியவில்லை
3. தலைவருடன் பேச நேரமில்லை
4. அவசரத்தில் புரிதலில்லாமல் எடுத்த முடிவு
5. காங்கிரசோடு கூட்டணி என்பதாலும், முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சட்டமென்பதாலும் காங்கிரஸ் எடுத்த முடிவோடு போக வேண்டிய நிலை

@DrSenthil_MDRD கூறிய மேற்கண்ட ஐந்தும் பொய்யென நிரூபிக்கும் ஆதாரங்கள்:
(பாராளுமன்ற ஆவணங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்கள் இணைப்புகளுடன் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன)

பாராளுமன்ற மக்களவையில்,
NIA மசோதா அறிமுகம் செய்யப்பட்ட தேதி: 08-07-2019
NIA மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட தேதி: 15-07-2019
வாக்கெடுப்பிற்கு முன் திரு. ஆ.ராசா 5 பக்க அளவிற்கு மசோதா
Read 8 tweets
16 Apr
திமுக பாராளுமன்ற உறுப்பினர் @DrSenthil_MDRD அவர்களின் புரிதலுக்காக 09/12/2019 அன்றைய (பிற்பகல்-இரவு) பாராளுமன்ற நடைமுறைகள்: (பாராளுமன்ற ஆவணங்களின் அடிப்படையில்)

நேரம்12.12 :
126வது அரசியல் சாசன சட்டத் திருத்த மசோதா அறிமுகம்
நேரம்12.18 :
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா அறிமுகம்
நேரம்12.32 :
CAB மசோதா அறிமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து TR பாலு உள்ளிட்ட உறுப்பினர்கள் வெளிநடப்பு
நேரம் 12.32 ~1.34:
CAB மசோதா அறிமுகத்திற்கு எதிராக உறுப்பினர்களின் காரசார விவாதம்
நேரம் 1.34 :
CAB மசோதா அறிமுகத்திற்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர் அதிர் ரஞ்சன் சவுத்ரியின் கோரிக்கையை ஏற்று நடந்த டிவிஷன் (சீட்டு/இயந்திர பயன்படுத்தி) வாக்கெடுப்பு தோல்வி (293-82)
நேரம் 1.40 :
கடற்கொள்ளை தடுப்பு மசோதா அறிமுகம்
நேரம்1.49 :
விதி 377 ன் கீழ் உறுப்பினர்களின்
Read 7 tweets
15 Apr
திமுக பாராளுமன்ற உறுப்பினர் @DrSenthil_MDRD 09/12/2019 நள்ளிரவு நடந்த CAA மசோதா மீதான வாக்குப்பதிவில் கலந்து கொண்டு அதனை எதிர்த்து வாக்களிக்கவில்லை என்பதற்கான பாராளுமன்ற காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட ஆதாரம்:- Image
09/12/2019 மாலை 5 மணியளவில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மனீஷ் திவாரி CAA மசோதா மீது உரையாற்றும் போது மரு.செந்தில்குமார் அவையில் இருந்தது மனீஷ் திவாரி உரை முடியும் வரை பதிவாகி இருக்கிறது அதன் பிறகு அவரை பாராளுமன்ற காணொளியில் காண இயலவில்லை.
இரவு 10.30 மணியளவில் CAA மசோதா மீதான வாக்குப்பதிவுக்கு முன்னதான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உரை தொடங்கிய பிறகு அவரது இருக்கை காலியாக இருப்பது 10.43 மணியளவிலான பாராளுமன்ற காணொளியில் பதிவாகி இருக்கிறது.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!