நம்ம கொரியன்ல எல்லார்க்கும் புடிச்ச டான் லீயோட ஆக்ஷன் திரில்லர் படம். ஹீரோ பெரிய எக்ஸ்.டான். கல்யாணத்துக்கு அப்புறம் திருந்தி சம்பளத்துக்கு வேலைப் பார்த்து எதிர்பார்த்த வருமானம் இல்லனாலும், மனைவியோட சந்தோசமா இருக்கார்.
வில்லன், பெண்கள கடத்தி, அவங்களுக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செஞ்சு விக்கிறவன். உடல் உறுப்புகளையும் திருடுற பிசினஸ் செய்றவன். ஒரு சமயம் டிராபிக் சிக்னல்ல வில்லன் வண்டி ஹீரோ வண்டி பின்னாடி இடிக்க, ஹீரோ இறங்கிவந்து பொறுமையா பேசறார். அதுக்கு அவனுங்க காச தூக்கிவீச, அப்பவும் டான் லீ
பொறுமையாவே இருக்கார். உடனே கார்ல இருந்து இறங்கி வர்ற ஹீரோயின் டிரைவர கிழி கிழினு கிழிக்க, உடனே பின்னாடி சீட்ல இருந்த வில்லன் இறங்கி வந்து டிரைவர அடி வெளுத்து, நல்லவன் மாதிரி பேசி அனுப்பி, அடுத்த 2 சீன் கழிச்சு ஹீரோயின கடத்திடுறான். அதுவரை அண்டர்பிளே பண்ணிருந்த டான், அப்புறம் 🔥
🔥மாதிரி இருக்கார். டான்லீ நண்பரா வர்ற ஒரு பெருசும், ஒரு டிடெக்டிவும் சிரிப்புக்கு பயன்படுத்திருக்காங்க. கடைசி வரை படம் விறுவிறு. சலிப்புதட்ல. டான்லீ ஸ்டண்ட்லாம், நம்ம ராஜ்கிரன் மாதிரிதான். அல்லாக்கா தூக்கி மல்லாக்க போட்றுவார். என்ன உடம்பு! தப்பான ஆள தொட்டுட்டான்னு சொல்ற சீன் 🔥
சந்துவாழ் மக்கள் இன்னும் இந்த படத்த இன்னும் பார்க்கலனா பார்த்துடுங்க. டான் லீயோட மத்த நல்ல படங்களையும் அப்டியே கொஞ்சம் கமண்ட் பண்ணிட்டுப் போங்கப்பா..