கலைஞர் மேல் பலரும் பலவித குற்றச்சாட்டுகளை வைக்கும் போது அதன் உண்மையை அறிந்து கொள்ள நானும் முயற்சிப்பேன். அப்படி சொல்லப்பட்ட அனேக குற்றச்சாட்டுகள் வெறும் அவதூறுகள் தான் என்பதை புரிந்து கொண்டேன்.
அவற்றில் சில👇
1. ஒருமுறை கனிமொழி அவர்கள் இந்திமொழி திணிப்புக்கு எதிராக மேலவையில் பேசும்போது கலைஞர் அவர்கள் தனது 14 வது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு வரலாறு அறியாத பலரும்
"இந்தி எதிர்ப்பு என்பதே 1967 ல் தான் நடந்தது அப்போது கலைஞருக்கு வயது 43" என்று கிண்டலடித்தார்கள். ஆனால் அந்த முட்டாள்களுக்கு முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் 1937ல் நடந்தது அதில் மாணவராக இருந்த கலைஞர் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தினார் என்று தெரிய வாய்ப்பில்லை.
2.அண்ணா மறைவுக்குப் பின் கலைஞர் அவர்கள் தனக்கு மூத்த பலதலைவர்கள் இருந்த நிலையில் அவர்களை ஏமாற்றி கட்சியை கைப்பற்றி விட்டார் என்று ஒரு குற்றச்சாட்டு. உண்மையில் திமுக தனது கட்சி தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற்றுத்தான் தலைவர் ஆனார் கலைஞர்.
மேலும் இந்த குற்றச்சாட்டு சொல்லும் நபர்களின் ஆதர்ச தலைவன் எம்.ஜி.ஆர் ஆதரித்ததும் கலைஞரைத்தான். அப்படி வெற்றி பெற்ற போதும் மூத்த தலைவர்களை அவர்களின் வீடுதேடிப்போய் அழைத்து தன் அமைச்சரவையில் இணைத்துக்கொண்ட பண்பாளர் கலைஞர்.
3. கட்சியின் கணக்கை கேட்டதால் எம்ஜிஆரை கட்சியை விட்டே நீக்கினார். இது அடுத்த குற்றச்சாட்டு
ஆனால் உண்மை என்னவென்றால், MGR தான் பொருளாளர் அவரின் ஒப்புதல் இல்லாமல் தலைவர் கூட செலவழிக்க இயலாது. கலைஞரே எம்ஜிஆரிடம் ஒப்புதல் கேட்டு எழுதிய கடிதம் எல்லாம் ஆவணமாக இன்னும் உள்ளது
4. கட்சியின் ஐம்பெரும் தலைவர்களில் கலைஞர் இல்லவே இல்லை எனும்போது எப்படி தலைவரானார்?
1953 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திமுக மும்முனைப் போராட்டம் நடத்தியது அதில் ஒரு போராட்டத்திற்கு தலைமை வகித்தவர் அண்ணா, அதே நாளில் நடந்த கல்லக்குடி போராட்டத்திற்கு தலைமை வகித்தவர் கலைஞர்.
அண்ணா தலைமை வகித்த போராட்டத்தில் கைதானவர்களை பற்றி ஒரு ஏடு எழுதும் போது ஐம்பெரும் தலைவர்கள் கைது என்று குறிப்பிட்டிருந்தது. இதை வைத்துக்கொண்டு தான் இந்த அறிவிலிகள் ஐம்பெரும் தலைவர்கள் வரிசையில் கலைஞர் இல்லை என்கிறார்கள். ஆனால் அண்ணாவுக்கு இணையாக இன்னொரு போராட்டத்திற்கு
தலைமை வகித்தவர் எப்படி இரண்டாம் கட்ட தலைவராவார்?
5. விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர் கலைஞர்
இப்படி சொன்னது ஒரு கமிஷன். எப்படி ரகுபதி கமிஷன் என்ற ஒன்று புதிய தலைமைசெயலக முறைகேடுகளை விசாரித்து(😂?😂) உண்மைகளை வெளியில் கொண்டுவந்ததோ அது போல் தான் சர்க்காரியா கமிசன் என்பதும் அந்த
கமிசன் முன்பு ஆஜரான "முதல்வராக" இருந்த எம்.ஜி.ஆர் சொன்னது கலைஞர் ஊழல் செய்துவிட்டார் என்று பத்திரிகை செய்திகளை பார்த்து தெரிந்து கொண்டேன் ஆனால் என்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை என்று சாட்சியம் அளித்தார்.
அதே சர்க்காரியா கமிசன் ஊழல் செய்த அமைச்சர் என்று குற்றம் சாட்டிய
சண்முகம் என்ற அமைச்சரை தனது அமைச்சரவையிலும் இணைத்து கொண்டவர் எம்ஜிஆர். இதை மறைத்து தான் இன்று வரை கலைஞரை அவதூறு பரப்பி வருகிறார்கள்.
6. தெலுங்கர் கலைஞரை எப்படி தமிழர் தலைவராக ஏற்க முடியும் என்று கேட்கிறார்கள்.
EDGAR THURSTON (Superintendent 1855 - 1935 at Madras Government Museum) என்பவர் 1909ல் திரு கே. ரங்காச்சாரி அவர்களின் ஒத்துழைப்புடன் எழுதிய
"CASTES AND TRIBES OF SOUTHERN INDIA " என்ற நூலில் அவர் தெளிவாக இசை வேளாளர்(சின்ன மேளம்) தமிழ் சாதி என்று
குறிப்பிடுகிறார். இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் நண்பர்களே?
இன்னும் பலப்பல சம்பவங்கள், உதாரணத்திற்கு கச்சதீவு, ராஜீவ் கொலைப்பழி, மேம்பால ஊழல், ஈழம் என எந்த பிரச்சினையிலும் எதிரிகள் சொல்லும் அனைத்திலும் உண்மை இல்லை.
கலைஞர் மீதான காழ்ப்புணர்சியே இந்த குற்றசாட்டுகள் என்று இந்த மாதிரியான பல ஆவணங்கள் உறுதிப்படுத்துகிறது!
விமானங்களையும், ஏர்போர்ட்களையும் விற்று வரும் சங்கிகள் கவணத்திற்கு,
இவை தமிழக அரசிற்கு சொந்தமான கப்பல்கள்.
1974-ல் இந்த கப்பல்களை வாங்கி, பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேசன் எனும் நிறுவணத்தை நிறுவியர்
தமிழின தலைவர் Dr. கலைஞர் அவர்கள்.
1974-ல் அரசுக்கு சொந்தாக கப்பல்களை கப்பல்ளை வாங்கி, சுயசார்பு பொருளாதாரம் என்றால் என்பதை நாட்டிற்கே காட்டினார், சுயமரியாதை சூரியன்.
இன்று வரை எந்த மாநிலத்திற்கும் சொந்தமாக கப்பல்கள் இல்லை.
ஆளுங்கட்சியின் அதிகார மிரட்டலுக்கு அடிபணியமல் அங்கன்வாடி ஊழியர் நியமனங்களில் தகுதி அடிப்படையில் ஊழியர் நியமனம் செய்தவர். அதனாலயே பழி வாங்கப்பட்டவர்
✅ சண்முகம் IAS
எடப்பாடியும் உதயகுமாரும் கொள்ளையடிக்க முயன்ற பாரத் நெட் டெண்டரில் முறைகேடு என கையெழுத்து மறுத்து கோப்பை திருப்பி அனுப்பியவர்
✅ உதயசந்திரன் IAS
தமிழகத்திற்கே அவமானச்சின்னமாக இருந்த பாப்பாபட்டி கீரிப்பட்டி தேர்தல்களை முன்னின்று நடத்தியவர். பல நூறு கோடிகள் கல்விக் கடனாக வழங்க ஏற்பாடுசெய்தவர் இடஒதுக்கீடு குறித்து சரியான புரிதலை தரும் வகையில் பாடத்திட்டத்தை உருவாக்கியர்.
ஸ்டாலின்தான் வந்தாரு
விடியல் தந்தாரு
அது தான் அது தான்
மக்களோட முடிவு
ஸ்டாலின்தான் வந்தாரு
நல்லாட்சி தர போறாரு
அது தான் அது தான்
எங்களோட விடிவு
இருட்டா கெடக்கும் வானத்துல
ஒளிகீத்து கீத்து பொறக்குதம்மா
வறண்டு கெடக்கும் பூமிக்குள்ள
புது ஊத்து ஒன்னு பொறக்குதம்மா
மனசு நெரம்பி சிரிக்குதம்மா
கருப்பு செவப்பு கம்பளம் விரிக்குதம்மா
வந்தாரும்மா அவரு வந்தாரும்மா
கொடிய நாட்ட போறாரும்மா
வாராரும்மா அவரு வாராரும்மா
கொடிய நாட்டிட்டாரும்மா
முதுகெலும்பில்லாத ஆட்சியத்தான்
தூக்கி எறிந்தாரம்மா
முன்பின் காணாத வெற்றியைத்தான்
நமக்கு கொடுத்தாரம்மா
ஸ்டாலின்தான் வந்தாரு
நல்லாட்சி தர போறாரு
அது தான் அது தான்
எங்களோட விடிவு
ஸ்டாலின்தான் வந்தாரு
நல்லாட்சி தர போறாரு
அது தான் அது தான்
எங்களோட விடிவு
தமிழ் பண்பாட்டை
பெருமையை பாதுகாக்க
ஸ்டாலின்தான் வந்தாரு
விடியல் தந்தாரு
தமிழ் மானத்தை ஏலம்
போட்டதாரய்யா
நம்மை உரிமையெல்லாம்
திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல், வரலாற்றுப் பங்களிப்புகளை பட்டியலிட்டால், மிகச்சிறந்த, தனித்துவமிக்க அதிகாரக் கட்டுமானத்தை உருவாக்கியதில் அதற்கு முக்கிய இடம் உண்டு.
அவர் உருவாக்கிய, முன்னிறுத்திய, பயன்படுத்திக் கொண்ட IAS பட்டாளம், அரசை மக்களை நோக்கி மிகச்சரியாக செலுத்தக்கூடியது.
People - Government connection-ல் அரசைத் தக்கவைப்பதில் அவர்களுக்கு இணையான அதிகாரிகள் சமகால வரலாற்றில் யாராலும் கண்டெடுக்கப்படவில்லை. ஸ்டாலினே அதைச்செய்தார். மேயராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக அவர் இருந்தபோது கண்டெடுக்கப்பட்ட முன்னிறுத்தப்பட்ட அதிகாரிகள் மிகச்சிறந்தவர்கள்.
தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை, மாநிலங்களவையில் 1962-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி தமது முதலாவது உரையை ஆற்றினார். அப்போது நடந்த குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது
பெருமதிப்பிற்குரிய மன்றத் தலைவர் அவர்களே, இந்த அவையிலே பதிவு
செய்யப்பட்ட கருத்துகளுடன் எனது கருத்துகளை எடுத்துரைக்க கிடைத்த வாய்ப்புக்காக உங்களுக்கு பெரிதும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த கூட்டத்தொடர் விவாதத்தில் பங்கேற்க முதலில் நான் சிறிது தயங்கினேன். ஏனெனில் இந்த அவையை கவனித்துக் கற்றுக்கொள்வதுதான் எனது ஆசையாக
இருந்ததே தவிர, பேசிப் பிரச்சினைகளைக் கிளறுவது அல்ல.
ஆனால், இந்த அவையில் நிலவும் இணக்கமான சூழ்நிலை மற்றும் இந்திய குடியரசு தலைவரைப் போற்றிக் குவியும் வாழ்த்துரை என்னையும் பங்கேற்க தூண்டியது. இப்போது அவரது உடல்