முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' அப்டீன்னு சொல்லிட்டு நிமிர்ந்து பாத்ததற்கு இங்க பல காரணங்கள் சொன்னாங்க..எனக்கு கேட்டதெல்லம் "த்தா நாந்தாண்டா அது" என்பதே. தெய்வத்தால் ஆகாதெனும் ஜாதகக் கைவிரிப்புகளுக்கு, அவரின் உழைப்பு எனும் மெய்வருத்தத்தின் கூலிதான் இந்த வெற்றி
பக்குவம் எனும் சொல், முதல்நாளில் இருந்தே வேறு தளத்தில், எதிர்கட்சியுனருடன் அமர்ந்து உணவருந்தும் காட்சியில் இருந்து துவங்கி இருக்கிறது,மகிழ்ச்சி.
பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றவுடன் சீமாட்டிகள் நினைவிற்கு வந்தால், நல்லது நீங்கள் வளர்ந்த வளமான சூழல் அப்படி.
ஆனால், இந்த அறிவிப்பு வந்ததும் "மொதோ வண்டி போயிருச்சாப்பே" எனும் கீரைவிற்கும் கிழவியும், வியாபரத்திற்காக அதிகாலையில் டவுன் மார்க்கெட்டுக்குச் செல்லும் பெண்களும், ஒரு ஸ்டாப் தள்ளிப்போய் ஏறினால் 50 காசு மிச்சம் என வெக்கு வெக்கு என நடக்கும் ராமுத்தாயம்மாக்களுக்கும் ஆன அறிவிப்பு இது
பால் விலை குறைப்பும் அப்படியே..மேல்தளத்திலேயே பார்வையைச் செலுத்துவோர்க்கு இவை ப்ளடி புல்ஷிட்களாகத்தெரியலாம். எத்தனை வயிற்றில் பால்வார்த்திருக்கும் என்பது அவ்வந்த வாழ்த்திய வயிறுகளறியும். வயிறு ஒட்டிப்போய் படுத்துறங்கும் குழந்தைகளறியும்..அது போதும்.
மிக முக்கியமான ஒன்றாகக் கருதுவது, தனக்கருகில் இருங்கள் என முதல்வர் அழைத்து வைத்துக்கொண்டிருக்கும் அலுவல் ஆட்சியர்கள். ஆம், இதனை இவர்களால் என்றாய்ந்த அற்புதம் அது. ஒரு மின்னல் வெட்டு, ஒரு நம்பிக்கையின் கீற்று இந்த முதல்நாள்.
இன்னும் விரவும்.
பிறகும், உண்மையிலே நல்லன என்ற ஒன்றை காலம் தன்னுள் அழுத்தம் திருத்தமாய் வைத்துக்கொள்ளும்.மற்றவற்றை கழிக்கத்தெரிந்த காலத்திற்கு, எதை கடத்திக்கொண்டே போய்ச்சேர்க்க வேண்டும் என்பதுவும் தெரியும்.
தக்கார் காக்கும் காலம், இதை நற்காலம் என்றே எழுதட்டும்.
வாழ்த்தும் அன்பும்,முதல்வருக்கு😍
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh