#என்றும்_கமல்ஹாசனுடன்
மநீம சகோதர்களே,
"இதுவும் கடந்து போகும்"
நமக்கு வேண்டுமானால் சில இடங்களில் வெற்றி பெறலாம் என நினைத்த வேளையில் கூட்டு களவாணித்தனத்தால்
நம்மவரின் வெற்றி வாய்ப்பு பறிபோனது நம்மவரை சுற்றி இருந்த சில சுயநலவாதிகள் கட்சியை வெற்றி விலகி உள்ளனர்.
/1
மூன்று ஆண்டுகளுக்கு முன் மதுரையில் கட்சி ஆரம்பித்த வேளையில் இப்பொது விலகிய எவருமில்லை
இந்த கருங்காலிகளை நம்பியும் கட்சி ஆரம்பிக்கவில்லை
சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி கோலோச்சிய ப்ரைம்டைமில் ஒரு இளைஞனாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் கமல்.
சிவாஜி எம்ஜிஆர் ஜெமினி போன்றவர்களின் /2
மடியில் தவழ்ந்த சிறுவன் பின்னொரு நாளில் அவர்களுக்கு இணையாக தமிழ்சினிமாவின் முக்கிய இடம்பெற்று வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் போல அவர்களின் கலையுலக வாரிசாக களம்கண்டவர்
உலகில் உள்ள அத்தனை தொழில்நுட்பத்தையும் கரைத்துகுடித்து தன்னை வாழவைத்த சினிமாவுக்கு தன்னையே அர்ப்பணித்தார் /3
தமிழ்சினிமாவின் அதி முக்கிய டைரக்டர்களின் லைப்டைம் பெஸ்ட்கள் பதினாறு வயதினிலே, மூன்றாம்பிறை,
நாயகன், தேவர்மகன், இந்தியன், தசாவதாரம் இதற்கு எல்லாம் மகுடம் சூட்டியது போல முதன்முறையாக இயக்கிய ஹேராம் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப செய்தவர்
மொத்த திரையுலகமும் ஊடகமும் ஒரு இரண்டாம்தர /4
நாயகர்களை கொண்டாடி வெறும் மசாலாக்களை தந்த வேளையில் வாசன் ஜெமினி ஏவிஎம் போன்ற தயாரிப்பு நிறுவனங்களே சினிமாவை விட்டு ஒதுங்கிய போதும் இன்றும் ராஜ்கமல் பட நிறுவனம் இயங்கி வருகிறது ராஜபார்வை விக்ரம் மை.ம.கா.ராஜன் தேவர்மகன் குணா மகாநதி ஹேராம் அன்பேசிவம் விருமாண்டி விஸ்வரூபம் /5
பாபநாசம் உத்தமவில்லன் என இன்றளவும் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நாயகனாக உள்ளார்
அரசியலிலும் நேர்மையின் சிகரமாக உண்மையின் சின்னமாக எதிரிகளுக்கு இன்றளவும் சிம்ம சொப்பனமாக இருக்கிறார்
மே 2ந்தேதி திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராவார் என எதிர்பார்த்த மக்களை விட கோவைதெற்கு /6
தொகுதியில் கமல் வென்றிடுவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்கள் கூட்டம்தான் அதிகம்
சில புல்லுருவிகள் நம்மவருக்கு துரோகம் இழைத்த கதைத்தான் இன்றும் பேசு பொருளாக உள்ளது
ஸ்டாலின் மந்திரிசபை அமைச்சர்களின் பேட்டியை விட நம்மவருக்கு துரோகம் இழைத்தவர்களின் நேர்காணல்தான் கூலிக்கு /7
மாரடிக்கும் எச்சை ஊடகங்களுக்கு தீனி போட்டு வருகின்றன
புதிய ஆட்சி அமைந்தும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் அப்படியேத்தான் இருக்கிறது இதற்கு முழுமுதற் காரணமான மோடியின் மத்திய அரசை கேள்வி கேட்கும் நேர்மையும்
நெஞ்சுரமும் உள்ளவர் கமல் மட்டுமே
காசை கொடுத்து ஓட்டு வாங்கி ஆட்சி /8
அமைத்ததும் நீட் தேர்வு பெட்ரோல் விலை உயர்வு ஜிஎஸ்டி என அத்தனை விஷயத்தையும் மத்திய அரசை தாண்டி யோசிக்க இயலாத மாநில அரசின் கையாலாகாத தனத்தையும் கேள்வி கேட்கும் வல்லமை பெற்ற கட்சி மநீம மட்டுமே
தேர்தல் முடிவு வந்து இரண்டு வாரங்கள் ஆன நிலையிலும் ஊடக விவாதங்கள் மநீம மற்றும் கமலின்/9
அறிக்கைகளை சார்ந்தே அமைந்துள்ளது
இனி மாநில அளவிலும் மத்திய அளவிலும் ஊடக விவாதங்களில் முக்கிய இடம்பெறும் சக்தியாக மநீம செய்தி தொடர்பாளர்கள் இருக்க வேண்டும்
கமல் என்ற ஒற்றை நபரை சுற்றி இயங்கும் கட்சியாக இருந்தாலும் இரண்டாம் நிலை தலைவர்கள் பொது கூட்டங்களிலும் விவாதங்களிலும் /10
மநீம கோட்பாடுகளை பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இயங்குவதே முக்கியம்
சமூக ஊடகங்களில் மநீம ஆதரவு அபரிமிதமாக இருந்தாலும் தேர்தல் எனும் களத்தில் நமக்கான இடத்தை பெற அதிகம் உழைக்க வேண்டும்
நாளை நமதே நாளும் நமதே @ikamalhaasan @maiamofficial
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh