கேளராவில் பெரிய கூட்டணி இல்லாமல், 1% வாக்கு வங்கி உள்ள BDJS-ஐ மட்டும் உடன் வைத்துக்கொண்டு 13% வாக்குகளை பாஜகவால் முடியும் எனில், அதே போன்றதொரு effort தமிழகத்திலும் தேவை. 2006ல் 4.75%-ல் இருந்து 2021ல் 13%-ஆக வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. மெதுவாக தான் வளர முடியும். #BJP#TamilNadu
திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று தேர்தல் அறிவிக்கப்படும் வரை கூறிவிட்டு, தேர்தலின் போது அவர்களுடனேயே கூட்டணி வைத்தால், மக்களுக்கு நம்பிக்கை எல்லாம் வராது. #BJP#TamilNadu
மத்திய அரசின் திட்டங்களை, தனது திட்டமாக மாநில அரசு claim செய்யும் போது, அதிமுகவாக இருந்தால் ஒருவிதமான அணுகுமுறை, திமுகவாக இருந்தால் ஒருவிதமான அணுகுமுறை கடைபிடிக்கப்படுகிறது. அது பாஜகவை ஓரு காலத்திலும் தமிழகத்தில் வளர விடாது. #BJP#TamilNadu
எடப்பாடி பழனிச்சாமி தே.ஜ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மட்டும் தான். ஆனால் அவருக்காக பாஜகவினர் தான் சமூக வலைதளங்களில் திமுகவுடன் மல்லுக்கட்டி நின்றார்கள். பல வழக்குகளும் பதிவானது. இந்த அக்கறை மோடியை பற்றி திமுகவினர் விமர்சிக்கும் போது ஏற்பட்டிருக்க வேண்டும். #BJP#TamilNadu
2001ல் 4 உறுப்பினர்களை பெற்ற போதே, பாஜகவின் வளர்ச்சி மீது அக்கறை காட்டி இருந்தால், இன்றைக்கு பாஜக குறைந்தது 12% வாக்குகளாவது வாங்கியிருக்கும். வெற்றி முக்கயமல்ல, கட்சியின் வளர்ச்சி தான் முக்கியம். அதை நோக்கி தமிழக பாஜக இதுவரை ஒரு அடி கூட வைக்கவில்லை. #BJP#TamilNadu
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று சொல்லிவிட்டால், இந்துக்கள் ஒன்றிணைவார்கள் என்று நினைத்தது எல்லாம் உண்மையிலேயே எதன் அடிப்படையில் என்று எனக்கும் தான் புரியவில்லை. இந்துக்கள் பல கடவுளை வணங்குகிறார்கள். இந்துக்களில் பல பிரிவுகள் உண்டு. #BJP#TamilNadu
வெற்றிவேல் யாத்திரையை தடுத்து, அதிமுக ஸ்கோர் செய்தது என்பதை பாஜகவினர் மறுக்கவே முடியாது. பாஜகவினர் மீது பல்வேறு வழக்குகள் பதிவானது. அந்த இடத்தில் ஸ்கோர் செய்ய தவறியது பாஜக தான். #BJP#TamilNadu
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh