தேர்தலில் தோல்வியடைந்த போதும் சொந்தப் பணத்தில் வாக்குறுதியை நிறைவேற்றிய பா.ஜ.க-வின் மெட்ரோமேன்!
அண்மையில் நடந்த கேரள சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை எதிர்கொண்ட போதிலும் 'மெட்ரோ மேன்' என்று அன்பாக அழைக்கப்படும் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளரான ஸ்ரீதரன் தனது தொகுதியில் உள்ள மக்களுக்கு மின் இணைப்புகளைப் வழங்குவதாகக் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ள சம்பவம்
அப்பகுதியில் உள்ள மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்ரீதரன் தனது தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, மே 18ஆம் தேதி பாலக்காட்டில் உள்ள பட்டியல் இனத்தவர் குடும்பங்களின் மின்கட்டண நிலுவைத் தொகையை அளிக்க உதவி பொறியாளரிடம் ரூபாய் ₹ 81,525க்கான காசோலையை அளித்துள்ளார்.
இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு மின் கட்டண நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க தலைவர் கிருஷ்ணதாஸ் என்பவர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மெட்ரோமேன் ஸ்ரீதரன் இதற்கான காசோலையை வழங்கினார்.
அந்த மாவட்டத்தில் உள்ள 11 பழங்குடியின மக்களின் மின்கட்டண நிலுவைத் தொகையை மெட்ரோ மென் தனது சொந்தப் பணத்தில் இருந்து செலுத்தியுள்ளார்.
கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது 88 வயதான தொழில்நுட்ப வல்லுநரான இவர் பாலக்காடு நகராட்சியின் மதுரைவீரன் காலனியில் வசிப்பவர்களுக்கு "தான் வென்றாலும் வெற்றி பெறாவிட்டாலும், அப்பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மின் இணைப்புகள் கிடைக்கும்" என்று
உறுதியளித்திருந்தார். இந்த நகராட்சியில் உள்ள 3 வது வார்டில் ஒரு சில பட்டியல் இனத்தவர்கள் (எஸ்சி) தங்கள் வீடுகளுக்கு நிலுவைத் தொகை செலுத்தாமல் இருப்பதால் மின்சார இணைப்பு இல்லை என்று குடியிருப்பு வாசிகள் அவரை அணுகியதை அடுத்து
ஸ்ரீதரன் தான் இந்த குறையை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்திருந்தார். பா.ஜ.க-வில் சேர்ந்த பிறகு டாக்டர்.ஸ்ரீதரன் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார்.
மார்ச் 4, 2021 அன்று கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான பா.ஜ.க முதலமைச்சர் வேட்பாளராக ஈ.ஸ்ரீதரன் இருப்பார் என்று கட்சி அறிவித்து.
துரதிர்ஷ்டவசமாக தேர்தலில் வெறும் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்ரீதரன் தோல்வியடைந்தார். இருந்தபோதிலும் அவர் அந்த தொகுதியில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார்.
1.6 கோடிக்கும் மேல் தடுப்பூசிகள் மாநிலங்களிடம் கையிருப்பு - மத்திய அரசு!
கொரோனா தொற்றுக்கு எதிராக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் இயக்கம் விரைவாக நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும் தற்போது 1.60 கோடி கொரோனா தடுப்பூசி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இன்னும் இருப்புகள் உள்ளன, மேலும் அடுத்த மூன்று நாட்களில் 2.67 லட்சம் டோஸ் அனுப்பப்படும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 21 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளதாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இதில், மே 21 2021 வரை மொத்தமாக வீணானது உட்பட 19,73,61,311 டோஸ் வழங்கப்பட்டுள்ளது," என்றும் அது தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிராக கைகொடுக்கும் இந்திய மருத்துவ முறைகள் : களமிறங்கும் ஆயுஷ் அமைச்சகம்.!
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் சவால்களுக்கு இந்திய மருத்துவ முறைகள் அடிப்படையிலான அணுகுமுறைகள் மற்றும் தீர்வுகளை வழங்க முடியும் என்று தற்பொழுது நம்பிக்கை தரப்பட்டுள்ளது.
இதனால் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் ஒரு பிரத்யேக சமூக ஆதரவு ஹெல்ப்லைன் தற்போது உள்ள கடுமையான சூழ்நிலையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண் ஆகும். இந்த 14443 எண்ணிற்கு கால் செய்து ஆலோசனைகளைப் பெறலாம் என்று ஆயுஷ் அமைச்சகம் சார்பில் தெரிவித்துள்ளது.
ஹெல்ப்லைன் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 6 மணியளவில் தொடங்கி முதல் நள்ளிரவு வரை செயல்படும் என்பது மற்றொரு சிறப்பம்சம். இதில் குறிப்பாக, நோயாளிகளுக்கு கொரோனாவுக்கு பிந்தைய மறுவாழ்வு மற்றும் மேலாண்மை அணுகுமுறைகள் பற்றி நிபுணர்கள் பரிந்துரைப்பார்கள்.
இது உங்கள் இடம் : தடுப்பூசி வதந்தியை கிளப்பியவர்கள்!
ராஜசேகர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதீர்' என, திராவிட கூட்டங்களும், திருமாவளவனும் மட்டுமே வதந்தி பரப்பவில்லை. நம் நாட்டில், தடுப்பூசி தயாரிக்கப்பட்ட பின்,
பல இஸ்லாமிய மவுலானா, மவுலாவிகளும் சந்தேகத்தை கிளப்பி, 'ஹலால் சான்றிதழ் இருந்தால் மட்டுமே, நாங்களும் போட்டுக் கொள்வோம்' என்றனர். சில மாதங்கள் இப்படியே விவாதம் செய்த, அலிகார் பல்கலையின் பேராசிரியர்கள் கூட, தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை.
காங்கிரஸ் கட்சியின் மனீஷ்திவாரி, 'பிரதமர் மோடி, இந்திய மக்களை, 'கினி பிக்' ஆக்குகிறார்' என்றார். சத்தீஸ்கர் மாநில சுகாதார துறை அமைச்சரோ, தங்களின் மாநிலத்துக்குள் தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம்; நம்பிக்கையில்லை என்றார்.
ஓம் நமோ நாராயணா. கோவிந்தா கோவிந்தா கோவிந்தா, திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் 58வது திருத்தலம்.திருநின்றவூரில் அமைந்துள்ளது. சமுத்திர ராஜனுடன் கோபித்துக்கொண்ட திருமகள் வந்து நின்ற ஊர் என்பதால் ’திருநின்றவூர்’ எனப் பெயர் பெற்றது.
🙏🇮🇳1
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருத்தலம்.
கவிஞர் கண்ணதாசனிடம், வெளிநாட்டினர் ஒருவர் கேட்டாராம் :
ஏன் உங்களுக்கு மட்டும் இத்தனை கடவுள்கள் சிவன், ராமன், கண்ணன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, காளி, முருகன், பிரம்மா என பல பெயர்கள் வைத்திருக்கிறீர்கள்.?
எங்களை போல ஒரு கடவுள் என வைத்துக் கொள்ளாமல்,' என்று கேட்டாராம்.
இடம் தெரியாமல் வந்து விட்ட கேள்வி. மலையை சிறு ஊசியால் பெயர்க்கப் போகிறாராம்...!
அதற்கு மிக பொறுமையாக திருப்பி அந்த மனிதரிடமே, 'உன் பெற்றோர்க்கு நீ யார்.?' எனக் கேட்டார்.
அதற்கு அவர், 'மகன்' என பதிலளித்தார்.
'உன் மனைவிக்கு.?' கேள்வி தொடர்ந்தது.
'கணவன்'.!
'உன் குழந்தைகளுக்கு.?'
'அப்பா, தந்தை.!'
உன் அண்ணனுக்கு.?'
'தம்பி.!'
'தம்பிக்கு.?'
'அண்ணன்.!'
'கொழுந்தியாளுக்கு.?'
'மச்சான்.!'
'அண்ணன் குழந்தைகளுக்கு.?'
'சித்தப்பா.!'
*காயத்ரி மந்திரம் உடலை இயக்கும் ஒரு ஜிம்........!!*
காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது, ‘மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
🇮🇳🙏👍1
ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892-1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
🙏👍🇮🇳2
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் ‘நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் நான் விந்திய மலையாகவும், மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.