வடநாட்டிலிருந்து தென்னாட்டில் வந்த மதங்களைப் பண்டைப் பெரியோர் இரண்டு வகையாகப் பிரித்திருக்கின்றனர். அவை பிராமண மதம், சிரமண மதம் என்பன. பிராமணமதம் என்பது வைதீக மதம். சிரமண மதம் என்பது பௌத்த ஜைன மதங்களாகும். சிரமணம் என்னும் சொல் தமிழில் சமணம் என வழங்கும்.
சமணமதம் என்றால், ஜைனமதத்துக்கு மட்டும் பெயராக இக்காலத்தில் பெரும்பான்மையோரால் கருதப்படுகிறது. ஆனால், சமணம் என்னும் சொல், வைதீக மதத்தவரல்லாத பௌத்தர் ஜைனர் மதங்களுக்குப் பொதுப் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கிவந்தது. சமணம் என்ற சொல் ஜைனம், ஆசீவகம், பௌத்தம் என்ற மதங்களை குறிக்கும்
என்றாலும் பெரும்பாலும் சமணம் என்ற சொல்லை ஜைனம் அல்லது ஆசீவக மதத்தை அல்லது இரண்டையும் குறிக்கவே பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

சமணம் என்றால் உருவ வழிபாடற்ற சமயம் என்று பொருள்.
ஆன்மாவில் நம்பிக்கை இல்லாத ,இயங்கு பொருள்(matter) சார்ந்த செயற்பாட்டின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள்.
இரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களின் படி,

கண்ணகி சமண நெறியில் உள்ள சாவகத்தையும்

கோவலன் மற்றும் மாதவியின் மகளான மணிமேகலை, இறுதியாக பௌத்ததையும்

கோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும், செல்வத்தில் மேம்பட்ட வணிகன்,
கோவலனும், கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவகத்தையும் பின்பற்றி துறவுபூண்டதாகத் தெரியவருகிறது.

இதன்மூலம், சமணத்தின் உட்பிரிவுகளான ஆசீவகம் மற்றும் சாவகம் ஆகிய நெறிகள், பண்டைய தமிழகத்தில் இருந்ததாக
அறியப்படுகிறது. சமணத்தில் உள்ள ஜைன நெறி மட்டுமே காப்பியங்கள் மூலம் தன்னை மக்களிடம் ஓரளவிற்கு நிலைநிறுத்திக் கொண்டதனால், சமணத்தில் உள்ள ஜைன நெறியைத் தவிற மற்ற நெறிகள், தங்கள் செல்வாக்கை மக்களிடம் நாளடைவில் இழந்துவிட்டன. இதனாலும், பிற்காலத்தில் ஆசீவகம் ஜைனத்தின் உட்பிரிவு எனும்
தவறான ஒரு கண்ணோட்டம் உருவானதாலும் தற்காலத்தில் சமணம் எனும் சொல்லிற்கு ஜைனம் என்ற தவறான பொருள் உருவாகிவிட்டது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

21 May
'நீலிக் கண்ணீர்'  மற்றொரு விளக்கம் 

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி - நீலிக்கேசியில் வரும் சமண பெண் துறவியும், காப்பியத் தலைவியுமான நீலி தான் நீலிக் கண்ணீர் என்று சொல்லில்  வருபவர். நீலிக்கும் கண்ணீருக்கும் என்ன தொடர்பு ?
பெளத்த சமண சித்தாந்தங்களுக்கு மாற்றாக, அதாவது சூனிய வாதத்திற்கு மாற்றாக ஆதிசங்கரர் முன்மொழிந்த அத்வைத கோட்பாடுகள் மேலோங்கி இருந்த நேரத்தில் சமணத் துறவிகள் மிகவும் துன்புறுத்தப்பட்டனர்.

சமணர்களின் வாதம் 'உலகில் எதுவுமே தான் தோன்றி கிடையாது, பெருட்களின் உருமாற்றம் தான் நிகழ்கிறது
' என்பதே. மலை தேயும் போது மண் ஆகும், மண் இறுகும் போது மலையாகும். அதில் இருக்கும் துகள்களின் தன்மை மாறும் ஆனால் அவை முற்றிலும் ஒருக்காலமும் அழிந்துவிடாது என்பதே, அனைத்தையும் கடவுள் படைத்தார் என்கிற கோட்பாடுகளை ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.
Read 8 tweets
21 May
நீலிக்கண்ணீர்

காஞ்சிபுரத்து வணிகன் தனது முதல் மனைவியை வஞ்சகமாகக் கொலை செய்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்கிறான். அவன் வணிக நோக்கமாக பழையனூர் வழியாகப் பயணமாகிறான். அப்போது அவனது முதல் மனைவி பேயாக மாறி அவனைப் பழிவாங்கத் துடித்து மனைவி போல உருமாற்றம் கொள்கிறாள்.
ஒரு தீய்ந்த கட்டையைப் பிள்ளையாக்கி இடுப்பில் வைத்தும் கொள்கிறாள். அப்போது அவன் அவளை மனைவியென ஏற்க மறுக்கிறான்.

திருவாலங்காட்டுக்கு வேளாளர்களுக்கு இந்த வழக்கு வந்து சேர்கிறது. வணிகன் தனது மனைவி இல்லை என்றும் இவளோடு சென்றால் தன்னை இந்தப் பேய் கொன்றுவிடுமு என்றும் கூறுகிறான்.
வேளாளர்களிடம் வணிகன் அவ்வாறு கூறும்போது அவளது இடுப்பிலிருந்த பிள்ளை அப்பா என அவனை அழைக்கிறது. அப்போது திகைத்துப் போன வேளாளர்கள் நீ இவளோடு ஒரு வீட்டில் தங்கு. அப்படி உன்னை இவள் கொன்று விட்டால் நாங்கள் எழுபது பேரும் தீக்குளிக்கிறோம் என்று வேளாளர்கள் கூறுகின்றனர்.
Read 4 tweets
21 May
வெள்ளம் வந்து உலகத்தையே அடிச்சுட்டு போறது தான் உலகத்துலயே பழமையான கதை. ஒவ்வொரு ஊரிலும், இனத்திலும், கலாச்சாரத்திலும் இந்த வெள்ள கதையை ஒவ்வொரு மாதிரி சொல்லுவாங்க. சுமேரியாவின் கில்கமெஷ் (Sumerian Epic of Gilgamesh) கதை தான் இருப்பதிலேயே பழமையானது. 5000 வருடங்களுக்கு முந்தையது.
இந்த கதையில், உட்னபிஷ்டிம் என்னும் யோகி அல்லது முனிவர் கோபமான தெய்வங்களால் கட்டவிழ்த்து விடப்படவிருக்கும் ஒரு உடனடி வெள்ளத்தைப் பற்றி தெரிந்து கொள்கிறார். அவர் தார் மூலம் வலுவூட்டப்பட்ட ஒரு பரந்த வட்ட வடிவ படகை உருவாக்குகிறார், அதில் அவரது உறவினர்கள், தானியங்கள் மற்றும்
விலங்குகளை எல்லோரும் ஏறி வெள்ளத்தில் இருந்து தப்பிக்கின்றனர். பல நாட்கள் புயல்களுக்குப் பிறகு, ஆதியாகமத்தில் வரும் நோவாவைப் போல உட்னாபிஷ்டிம் வறண்ட நிலத்தைத் கண்டுபிடிக்க ஒரு பறவையை பறக்க விடுகிறார்.
5,000 முதல் 7,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வரலாற்று பிரளயம் ஏற்பட்டதாக பல்வேறு
Read 5 tweets
20 May
#NovemberStory - #DisneyHotStar
நல்ல திரைக்கதையுடன் விறுவிறுப்பாக செல்கிறது. என்னதான் கொலையாளியை கண்டுபிடிக்க முடிந்தாலும் கொலைக்கான காரணம் கடைசியில் தான் தெரியவருகிறது. அதுவரை என்னவாக இருக்கும் என்று நம்மை யோசிக்க வைத்ததில் இயக்குனருக்கு வெற்றி தான். இது விமர்சனம் அல்ல.
இந்த series இல் பேசப்படும் ஒரு அம்சத்தை பற்றிய ஒரு குறிப்பு.

Spoiler ahead:

பசுபதி தனக்கு கிடைத்த குழந்தை தன்னை விட்டு எங்கு சென்று விட கூடாது என அந்த குழந்தைக்கு சில மருந்துகளை குடுத்து மூளை வளர்ச்சி குன்ற செய்து தன்னுடனே வைத்து நன்றாக பார்த்து கொள்கிறார்.
இப்படி யாரேனும் செய்வார்களா என்று நினைக்கலாம். செய்வார்கள் அதுவே ஒரு வித மனநிலை குறைபாடு தான். அதன் பெயர் Munchausen syndrome by proxy (MSBP) அல்லது Factitious disorder imposed on another (FDIA).

இதை பற்றிய சுவாரசியமான ஆங்கில படங்கள் உண்டு சமீபத்தில் வெளியான Run (Netflix)
Read 6 tweets
20 May
மியுகோர்மைகோசிஸ் - கருப்பு பூஞ்சை தொற்று

கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஸ்டீராய்டுகளால் இந்த தொற்று தூண்டப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நோய் ம்யூகர் என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இந்த பூஞ்சை மண், தாவரம், உரம் மற்றும் அழுகும்
பழங்கள் மற்றும் காய்கறிகளில் தென்படும். இது சைனஸ்களையும், மூளை மற்றும் நுரையீரல்களையும் பாதிக்கும்.

கருப்பு பூஞ்சை நோய் தாக்கினால் கண், மூக்கு, காது, தாடை பகுதிகளில் வலி, வீக்கம் காணப்படும். பல் வலி போல் தாடையில் வலி இருக்கும். ஒத்தை தலைவலி, மூக்கில் ரத்தம் வருவது கருப்பு
பூஞ்சை நோய் தாக்கத்தின் அறிகுறிகளாகும்.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு மூச்சு திணறல் அதிகரிக்கும். மூச்சு திணறலை குறைக்க ஸ்டீராய்டு பயன்படுத்தப்படுகிறது. இதன்காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.
Read 4 tweets
20 May
கொரோனா சார்ந்த முட்டாள்தனங்கள். இதை எல்லாம் கண்டிப்பாக செய்யாதீர்கள்

1. நமக்கெல்லாம் கொரோனா வராது. நாம எல்லாம் கடும் உழைப்பாளிகள் நல்லா சாப்பிடுறோம் அதனால வராது.

2. ஒரு வருடமாக கபசுர குடிநீர் குடித்து வருகிறேன் அதனால் எனக்கு கொரோனா வராது
3. நான் எத்தனை இடங்களுக்கு சுற்றி திரிந்து இருக்கிறேன் கொரோனா வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் எனக்கு வந்து போயிருக்கும். எனக்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி இருக்கிறது.

4. தெரிந்த ஆட்களிடம் இருந்து கொரோனா வராது. மாமா, அப்பா, பக்கத்து வீடு நபர்களிடம் இருந்து கொரோனா வராது.
5. மாஸ்க் போடவில்லை என்றால் கூட வெளியில் போய்ட்டு வந்ததும் நன்றாக குளித்துவிடுவேன் அதனால் கொரோனா வராது.

6. எனக்கு வந்து இருப்பது வெறும் காய்ச்சல் தான் பாராசிட்டமால் போட்டு இருக்கிறேன் அதனால் எதுவும் செய்யாது நான் வேலைக்கு கட்டாயம் போக வேண்டும்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(