ஏன் மற்ற மாநிலங்களை போல் தழிகத்தில் பட்டியலினத்தை சார்ந்த MLA வுக்கு முக்கிய பதவி வழங்கவில்லை
கேரளாவில் இப்போது கம்யூ.கட்சியின் பிரனாயி விஜயன் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். கே.ராதாகிருஷ்ணன் என்கிற அட்டவணைப் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை அறநிலையத் துறை அமைச்சராக்கி உள்ளார்கள். 1/n
கர்நாடகாவில் சனாதனத்தை தூக்கிப் பிடிக்கும் பாஜக ஆட்சியில் இப்போது கோவிந்த கார்ஜோல் என்ற பட்டியலினத்தவர் தான் துணை முதலமைச்சர்.- கூடவே பொதுப்பணி துறையும். தவிர பிரபு சவண், வால்மீகி (மலைவாழ் )சமூகத்தைச் சேர்ந்த நாகேஷ் ஸ்ரீராமுலு ஆகிய இரண்டு பட்டியலினத்தவர்களும் அமைச்சர்கள். 2/n
ஆந்திராவில் இப்போது ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் பாமுல புஷ்ப ஸ்ரீவாணி என்கிற பட்டியலினத்தவர் தான் துணை முதலமைச்சர்.மேகதோட்டி சுசரிதா பட்டியலினத்தவர் தான் உள்துறை அமைச்சர் .
இங்கு பெரியார் முழக்கம் இல்லை. சாதி ஒழிப்பு, சமூக நீதி என்ற போலி முழக்கமில்லை.
3/n
ஆனால், சமூக நீதி, சாதி ஒழிப்பு, வகுப்பு வாரி பிரதிநிந்த்துவம், பெரியார் கொள்கை என விதம் விதமாக உருட்டிக்கொண்டிருக்கிறார்கள் திமுகவினர்.
1967ல் திமுக ஆட்சியில் அமர்ந்தது. 6வது முறையாக திமுக ஆட்சியை பிடித்துள்ளது
அண்ணா அவர்கள் கட்சியில் பட்டியலின மக்களுக்கு பதவி என்பதை பெயருக்காகவோ கணக்கிற்காகவோ செய்யவில்லை.எல்லா விடுதலையும் அவர்களில் இருந்தே தொடங்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் செய்தார்.1/n
அதனால்தான் அந்த மக்கள் அண்ணாவோடு ஒன்றி இருந்தார்கள்.
கட்சிக்கான முதல் மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்தபோது குமரி மாவட்டத்திற்கு வி.எம். ஜான் என்ற துடிப்பான பட்டியலின இளைஞரை தான் நியமித்தார் அண்ணா. அன்று ஜானைவிட இன்னும் முக்கிய தம்பிகள் எல்லாம் அண்ணாவிடம் இருந்தார்கள். 2/n
ஆனாலும் வி.என்.ஜானுக்கு முக்கியம் கொடுக்கக் காரணம், இந்தக் கட்சி அந்த மக்களிடம் இருந்துதான் எழுந்தாக வேண்டும் என்ற அரசியலைச் சொன்னார்.
மகளிர் அணியில், பட்டியலின சத்தியவாணிமுத்துவின் கீழ்தான் அண்ணாவின் மனைவியும், மற்ற தம்பிமார்களின் மனைவிகளும் கட்சிப்பணி செய்தார்கள். 3/n