கௌரவர் அணியில் பீஷ்மர், குரு துரோணாச்சாரியர், கர்ணன் என்னும் பல வல்லவர்களைச் சூழ்ச்சி செய்து தன் பக்கம் சேர்த்துக் கொண்டார் சகுனி
யாதவர்களின் படை அனைத்தையும் துரியோதனன் பெற்றான். கிருஷ்ணனின் வழிகாட்டுதல் மட்டுமே பாண்டவர்களுக்குக் கிடைத்த ஒரே ஆயுதம். `என்னை விடவும் சூழ்ச்சிக்காரன் நீ’ என்று சகுனி கூறியதும் ‘ஆம். சூழ்ச்சியின் நோக்கம் தர்மம் என்றால் சூழ்ச்சியும் தர்மமே’ என்றார் கிருஷ்ணர்
இருப்பினும் கிருஷ்ணர் இந்த போரின் முடிவில் தன் சாம்ராஜ்யமே அழியும் என்பதை நன்கு உணர்ந்தார். காந்தாரியின் சாபத்தால், துவாரகையில் அதர்மம் தலைதூக்கி, தன்னால் எதையும் தடுக்க இயலாமல் மனம் நொந்து முக்தி அடைந்தார். சூழ்ச்சியில் வரும் வெற்றி பாவம்.
அதன் கர்மத்தை அனுபவிக்கத் துணிந்த பின்பே கிருஷ்ணன் பாண்டவர் அணியில் சேர்ந்தார்.
இப்படி காலத்தின் கட்டளைகளுக்கு நானும் கீழ் பணிவேன் என்று உணர்த்தினார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"இதிகாசங்கள் எத்தனை?' என்று கேட்டால், உடனே எல்லோரிடமிருந்தும் வரும் பதில்கள் இராமாயணமும் மகாபாரதமும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் இதிகாசங்கள் இரண்டல்ல; மூன்று. சிவரகசியம், இராமாயணம், மகாபாரதம் ஆகிய மூன்று என்பதுதான் பண்டைய மரபு. இதை திருமுருக கிருபானந்தவாரியார் கூட
பல சொற்பொழிவுகளிலும் கட்டுரைகளிலும் குறிப்பிட்டுள்ளார்.
சிவரகசியம் என்பது லட்சம் கிரந்தமுடைய பரமேதிகாசம் எனப் பெயர் பெறும். இதிகாசங்களுள் பரமேதிகாசம் உயர்ந்தது என்பது சொல்லாமலேயே உணரப்படும். இச் சிவரகசியம் பரம்பொருளாகிய சிவபெருமான் உமையம்மைக்கு உபதேசித்தருளிய உயர்வுடையது.
சிவரகசியம் பன்னிரண்டு பிரிவுகளை உடையது. அவற்றுள் மூன்றாவது பிரிவைத் தமிழில் செய்யுள் வடிவில் செய்தருளியவர் திருவாரூரைச் சேர்ந்த ஒப்பிலாமணி தேசிகராவார். இந்நூலுள் சிவபெருமானுடைய சிறப்புகளும், ஆன்மாக்களிடத்து(உயிர்கள்) அவர் நடத்தும் ஐந்தொழிற் சிறப்பும் (படைத்தல், காத்தல், அழித்தல்,
உரு கொண்டு நரசிம்மரோடு போரிட்டு வதம் செய்தார்!
லட்சுமி இறைவனிடம் மாங்கலிய பிச்சை கேட்க சிவபெருமானும் அவ்வாறே அருள் செய்ய மஹாவிஷ்ணு உயிர் பெற்று எழுந்து வணங்கினார்.
தம் தோலையும்
எலும்பையும் அணிந்து கொள்ளுமாறு மஹாவிஷ்ணு வேண்ட, இறைவனும் எலும்பை கதையாகக்கொண்டு,தோலைச் சட்டையாகப்
போர்த்து அருள் செய்தார். இவ்வடிவமே சட்டைநாதர் வடிவம் ஆகும்!
சட்டைநாதர் திருக்கோவில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம் (திருஞானசம்பந்தர் உமையிடம் ஞானப்பால் உண்ட ஸ்தலம்!)