" நாம் தினமும் சாப்பிடும் கறிகாய்களில் உதவாதது என்று சீவித் தள்ளுகிற மேல் தோலியெல்லாம் கோமாதாவுக்கு ஆஹாரமாகப் போடும்படித் தக்க ஏற்பாடு செய்து விட்டாலே எத்தனையோ பசுக்களின் வயிறு ரொம்பும்.
தினந்தோறும் வீட்டுக்கு வீடு கறிகாய்கள் நறுக்குகிறோம். ஹாஸ்டல்களிலும் ஹோட்டல்களிலும் நூற்றுக் கணக்கானவர்கள் சாப்பிடுவதால் ஏராளமாகக் கறிகாய்கள் நறுக்கப்படுகின்றன. நறுக்கும்போது ‘வேஸ்ட்’ என்று மேல் தோலிகளை குப்பைத் தொட்டியில் கொட்டி, தோட்டிகளுக்கு அவற்றை சுத்தப்படுத்தும் வேலையை
வைக்கிறோம். இதற்குப் பதில் ஒவ்வொரு வீட்டிலும், ஹாஸ்டல், ஹோட்டல் போன்ற இடங்களிலும் கறிகாய்த் தோலியைப் போட்டு, ஈ, எறும்பு வராமல் மூடி வைக்கும் படியாகத் தனியாகத் தொட்டி வைத்திருக்க வேண்டும். இவற்றை வீட்டுக்கு வீடு சேகரித்துப் பசுவின் வயிற்றுக்குக் கொண்டு சேர்ப்பதற்கென்றே தொண்டர்கள்
திரள வேண்டும்.
இதிலே அப்படியென்ன கிடைத்து விடப் போகிறது என்று அலக்ஷ்யமாக நினைக்க வேண்டாம். நாம் கோடானுகோடிப் பேரில் ஒவ்வொருவரும் கறிகாய் சேர்த்துக் கொள்கிறோமாதலால், வீட்டுக்கு வீடு தோலி சேகரிப்பு என்றால் மொத்தத்தில் போர் போராகக் குவியும்.ஹாஸ்டல், ஹோட்டல்களில் சேர்வதைக் கேட்கவே
வேண்டாம். ஜனத்தொகையின் விகிதத்தோடு பார்த்தால் பசுவின் ‘பாபுலேஷன்’ ரொம்பக் குறைச்சலாகவே இருக்கும். அப்படிப்பட்ட பசுக்களிலும் நல்ல முறையில் பண்ணைகளிலும், ஸௌகரிய தசையிலுள்ள சொந்தக்காரர்களின் வீடுகளிலும் பராமரிப்பு பெறுகிறவற்றிற்கு நாம் எதுவும் செய்ய வேண்டுமென்பதில்லை.
கசாப்புக் கடைக்கும் இறைச்சிக் கூடத்துக்கும் போகக் கூடிய ஸ்திதியில் இருக்கும் பசுக்களைக் காப்பாற்றுவது தான் இங்கே நமக்கு முதன்மையான குறிக்கோள். அதில் கணிசமான அளவுக்கு இந்தத் தோலி சேகரிப்பு நமக்கு ஸஹாயம் பண்ணும் என்பதில் ஸந்தேஹமில்லை. சிறு துளி பெருவெள்ளம்.
கவனக் குறைவு சிறிதும் இல்லாமல் இந்த ஸுலபமான காரியத்தைச் செய்தால் அந்த வெள்ளத்தைப் பிரத்யக்ஷமாகப் பார்க்கலாம். கோபால க்ருஷ்ணனின் அருள் வெள்ளத்தையும் பெறலாம்.
அரிசியை ஜலம் விட்டு அலம்புகிற கழுநீர் என்கிற கழிவு நீருங் கூடப் பசுவுக்கான ஆஹாரம் தான். அதுவும் பசு வயிற்றுக்குப் போகும்படிச் செய்யலாம். செய்ய வேண்டும்.
வீட்டுத் தோட்டங்களில் ஒரு சின்ன திட்டில் பசுவுக்கென்றே அகத்திக் கீரைப் பயிரிடுவது என்று ஏற்பட்டு விட்டால் அதுவும் கோ வதை நின்று கோமாதா ஸம்ரக்ஷணம் நடப்பதற்குக் கணிசமான உபகாரம் செய்ததாகும். அகத்திக் கீரையைப் பசு பரம ப்ரீதியோடு சாப்பிடும்.
பகவான் வாஸுதேவனின் வயிற்றுக்கே
போடுவதாக நினைத்து இப்படியெல்லாம் எந்த முறையிலேனும் நாம் ஒவ்வொருவரும் பசுக்களை அவசியம் ரக்ஷிக்க வேண்டும். அந்த உணர்ச்சி வந்து விட்டால், சிரமமே ஏற்பட்டாலும் அது சிரமமாகத் தெரியாது. மனமிருந்தால் வழியுண்டு. இந்த விஷயத்தில் நிச்சயமாக மனம் இருந்தேயாக வேண்டும். அப்போது வழியும் தானே
பிறக்கும்.
4இது எத்தனை அவச்யம் என்று, Awareness Create செய்வது என்கிறார்களே, அப்படி வலுவான ப்ரசாரத்தால் ஜன ஸமூஹத்தில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி விட்டால் போதும், இத்தகைய பெரிய ஜனத் தொகையுள்ள நம் தேசத்தில் தேவையான பணமும் திரளும், தொண்டர்களும் திரளுவார்கள் என்றே நம்புகிறேன்.
அங்கங்கே நாலு பேர் விடா முயற்சியுடன் புறப்பட்டு விட்டால் போதும். பொருள் பலம், ஆள் பலம் இரண்டும் கிடைத்து விடும். இதில் ஒரு விஷயம் என்னவென்றால், பணம் கொடுக்கிறவர் வேறே, சரீரத் தொண்டு செய்கிறவர் வேறே என்று அடியோடு இரண்டாகப் பிரிந்து நிற்கக் கூடாது.
பணம் கொடுக்கிறவரும் கொஞ்சமாவது உடம்பால் உழைக்க வேண்டும், உடம்பால் உழைக்கிறவரும் கொஞ்சமாவது பொருளுதவி பண்ணவேண்டும். அப்போது தான் எல்லோருக்கும் Total Involvement – பூர்ணமான ஈடுபாடு – இருக்கும். அதோடு ஸமூஹத்திலும் மக்கள் பணம் படைத்தவர், உழைப்பாளி என்று இரண்டு ஜாதிகளாகப்
பிரிந்து நிற்காமல், எல்லோரும் ஒரே போல் கோமாதாவின் குழந்தைகளாக, ஒரே குடும்பமாக, ஐக்யப்படுவார்கள்.
என் ஆசை என்னவென்றால், ஹிந்துக்களான நாமெல்லோரும் இப்படி ஒரு குடும்பமாக கோமாதா சேவையில் சேர்வதோடு, மற்றவர்களுக்கும் நல்லபடியாக ப்ரேமையுடன் எடுத்துச் சொல்லிப் பிற மதஸ்தர்களையும் இதில்
ஈடுபடுத்தி நம்முடைய ஒட்டு மொத்த ஜன ஸமூஹம் முழுதுமே ஏக குடும்பமாக ஒற்றுமையோடு இப்பணியில் ஈடுபடவேண்டும் என்பதே. மதாபிமானம் என்பது ஒவ்வொரு மதஸ்தருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாமானாலும், ஜீவகாருண்யம் என்பது ஸகலருக்கும்பொதுவானதாகையால் அந்த அம்சத்தைக் கொண்டு இந்தப் பணியில் இந்த
நாட்டிலுள்ள அத்தனை மதஸ்தர்களும் ஒன்று சேர்ந்து தோள் கொடுக்கவேண்டும் என்பதே என் அவா "
ஒரு பணிவான வேண்டுகோள் – நாம் தினமும் பல பசுக்கள் தெருவில் பசியோடு (கடுமையான வெயில்/மழையில்) அலைந்து திரிவதைப் பார்க்கிறோம். பசி, தாகத்தால் அவை குப்பை மேட்டையும், சாக்கடையையும் கிளறி ஏதாவது
ஆகாரம் கிடைக்குமா என்று ஏக்கத்தோடு பார்க்கிறது. குப்பைகளை பிளாஸ்டிக் பையில் கட்டி வீசுவதால் அவை பிளாஸ்டிக் கவர்களை கிழித்துப் பார்க்க நேரிடுகிறது. வீபரீதமாக பிளாஸ்டிக் கவரை உண்ணவும் நேரிடுகிறது. இது பசுவின் உயிருக்கு மிகவும் ஆபத்தானதாகும்.
நாம் பெரியவாளின் பேரில் இன்றே சபதம் ஏற்போம்.
குப்பைகளை பிளாஸ்டிக் பையில் கட்டி தெருவில் வீச மாட்டோம்.
தினமும் ஒரு கோமாதாவுக்கு நம்மால் முடிந்த ஆகாரம் அளித்தே தீருவோம் என்று. கோமாதா ஸம்ரக்ஷணம்செய்ய நமக்கு செலவே இல்லாமல் பெரியவா பல வழிகளை மேலே கூறி உள்ளார். மனமிருந்தால்
மார்க்கமுண்டு. அதில் சிலதை நடைமுறைப்படுத்துவோம்.
இந்த அதிமுக்கியமான ஸத் கைங்கர்யத்தை நாலு பேருக்கு தெரியப்படுத்துவோம். கோமாதாவைக் காப்போம்!
கௌரவர் அணியில் பீஷ்மர், குரு துரோணாச்சாரியர், கர்ணன் என்னும் பல வல்லவர்களைச் சூழ்ச்சி செய்து தன் பக்கம் சேர்த்துக் கொண்டார் சகுனி
யாதவர்களின் படை அனைத்தையும் துரியோதனன் பெற்றான். கிருஷ்ணனின் வழிகாட்டுதல் மட்டுமே பாண்டவர்களுக்குக் கிடைத்த ஒரே ஆயுதம். `என்னை விடவும் சூழ்ச்சிக்காரன் நீ’ என்று சகுனி கூறியதும் ‘ஆம். சூழ்ச்சியின் நோக்கம் தர்மம் என்றால் சூழ்ச்சியும் தர்மமே’ என்றார் கிருஷ்ணர்
உன் சொந்த உபயோகத்துக்காக வாய்க்காலை வெட்டுகிராயா என்று சிலர் கேட்டதிற்கு,"நானோ எனது சந்ததியினரோ வாய்க்காலில் இருந்து சொட்டுத் தண்ணீர்கூட பயன் படுத்தமாட்டோம் "என்று வாக்கை தந்து, வாய்க்காலை நாட்டுடமை ஆக்கி, தன்னை தானே (ஊற்றுக்குளிக்கு)நாடு கடத்திகிட்ட உத்தமன் !
காளிங்கராயனின் சொந்த ஊர் வெள்ளோடு. அவர் வாழ்ந்த பகுதிகள் மேடானவை. அதனால், அங்கு ஆற்றுப் பாசனம் கிடையாது. கிணற்றுப் பாசனம் மட்டுமே.
தண்ணீர் பற்றாக்குறையால் சரியான விவசாயம் இல்லை. புன்செய் பயிர்களை மட்டுமே விளைவிக்க முடிந்தது.
கனவுகள் பற்றி திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு
இரவு உறங்கும் முன் கை, கால் கழுவி விட்டு, திருநீறு பூசி, இறைவா என் கனவில் காட்சி தா 🙏என்று வேண்டினால் இறைவன் ஒரு நாள் நிச்சியமாக திருக்காட்சி தருவார் !!!🙏🙏🙏