கொலம்பியாவின் போகோட்டாவில் உள்ள பெல்கோ கார்ப்பரேஷன் அலுவலகத்திற்கு வழக்கம்போல பணிக்கு வரும் ஊழியர்களை புதிதாக இருக்கும் காவலர்கள் சோதனை செய்கிறார்கள், சில பேர் திருப்பி அனுப்ப படுகிறகிறார்கள். அதை பற்றி ஹீரோவும், அவரின் மேல்
ஊழியரும்(Boss) என்ன சோதனை இது புதிதாக இருக்கிறது என கேக்க, சாதாரண சோதனை தான் என்று உள்ளே அனுப்ப படுகிறார்கள். மறுபுறம் புதிதாக வேலைக்கு சேரும் ஒரு பெண்ணிடம், நீங்க கம்பெனி டாக்டர்ஸ பாத்தீங்களா? அவங்க ஒரு சிப் ஒன்னு வைப்பாங்க எதுக்குனா இந்த ஊரில் பாதுகாப்பு அதிகம் இருக்காது, ஒரு
வேளை நீங்கள் தொலைந்து விட்டால் அதை வைத்து உங்களை கண்டுபிடிப்போம் என கூற, சரி என்று தலையாட்டிக்கொண்டே தன் தலையை தொடுப்பார்த்து கிளம்புகிறார். மறுபுறம் உள்ளே வந்த நாயகன் அலுவலகத்தின் நடவடிக்கைகள் வித்தியாசமாக தெரிய, உள்ளே உள்ள பழைய செக்யூரிட்டியிடம் கால்செய்து விசாரிக்க, எனக்கும்
எதும் தெரியாது இரு பாக்குறேனு சொல்லிட்டு இருக்கும்போது, இண்டர்காம் வழியா ஒரு குரல் கேட்குது. யாரும் பயப்பட வேணாம் இங்க மொத்தம் 80பேர் இருக்கீங்க, இன்னும் 8 மணி நேரத்துல எல்லாம் செத்துருவீங்க ஆனா நா சொல்ற மாதிரி கேட்டா நீங்க உயிர்ப்பிழைப்பீங்க. முதல் டாஸ்க்ல அடுத்த 30 நிமிடங்கள்ள
உங்கள்ல இரண்டு பேர் சாகனும் அது யாரா வேணா இருக்கலாம், அதை நீங்களே தேர்வு செய்ங்கனு சொல்லி அந்த அழைப்பு முடியுது. உடனே உள்ள இருந்து வந்த அந்த மேல் ஊழியர் யாரும் சீரிஸா எடுத்துக்காதீங்க இது ஒரு பிராங்க் வாய்ஸ் தான்னு சொல்றாரு. அடுத்த நொடி அந்த கட்டிடத்தோடா எல்லா பாதை, மற்றும்
ஜன்னல் எல்லாம் இரும்பு கதவால மூடப்பட, சிலர் பயந்து போய் மேல மாடிக்கு போறாங்க அங்க சில பேர் ஸ்மோக் பண்ணிட்டு இருக்காங்க. சுத்தி பாத்தா வெறும் காடு தான் இருக்கு. வெளிய இருந்த காவலர்கள் கிட்ட ஹெல்ப் கேட்டா அவங்க காதுல வாங்க மாற்றாங்க. கீழ வெல்டிங் வச்சு கதவ திறக்க பாக்குறாங்க ஆனா
எவ்ளோ வெல்டிங் வச்சும் ஒரு கீறல் கூட கதவுல விழல. மேல இருந்தவங்க கிட்ட இந்த மாதிரி ஒரு அறிவிப்பு கீழ வந்துச்சுனு சொல்லவும், அங்க இருந்த ஒருத்தன் அதெல்லாம் சும்மானு நக்கல் அடிச்சிட்டு இருக்கும்போதே பக்கத்துல இருந்த பொண்ணு தலை வெடிச்சி கீழ விழுது. யாரோ சுட்றாங்கனு மத்தவங்க எல்லாம்
கீழ குனியிறாங்க. அதே நேரம் கீழ உள்ள இருந்தவங்கள்ள மூணு பேர் தலை வெடிச்சு கீழ விழ, சுத்தி எல்லோரும் பயந்து தள்ளி போறாங்க. அந்த மேல் ஊழியர் மட்டும் கிட்ட வந்து பேனாவ வச்சி பாத்துட்டு இது சாதாரண சிப் இல்ல, உள்ள வெடி மருந்து இருக்குனு சொல்லும்போது நாயகன் தன்னோட தலையையும் தொட்டு
பாக்குறாரு. உடனே அடுத்த அறிவிப்பு வருது, இப்போ நா சொல்றத நம்புறீங்களா!? அடுத்து ரெண்டாவது டாஸ்க் இதுல இப்போ 76 பேர் இருக்கீங்க. அடுத்த ரெண்டு மணி நேரத்துல உங்கள்ல 30 பேர் சாகனும் இல்லனா எல்லோரும் இதே மாதிரி சாவீங்கனு சொல்லி முடிக்க, எல்லோரும் அரண்டு போறாங்க. அதுக்கு அப்புறம் என்ன
ஆகுது? எத்தனை பேர் உயிரோட இருந்தாங்க? கடைசில என்ன ஆச்சுன்றத படத்தை பாத்து தெரிஞ்சுக்கோங்க. 89 நிமிடம் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு த்ரில்லர் படம் 🔥 ஆபாச காட்சிகள்லாம் எதும் இல்ல.
இந்த த்ரெட்ல நாம தமிழ்ல வெளிவந்த சிறந்த இந்திய வெப் சீரிஸ் மற்றும் வெளிநாட்டு வெப் சீரிஸ் பத்தி தான் பாக்க போறோம். இதுல ஆல்ரெடி நீங்க பாத்ததும் இருக்கலாம், அது பாக்காதவங்களுக்கு உதவும் அதுனால அதையும் சேர்த்துருக்கேன். பொதுவாக இணைய தொடர்களுக்கு சென்சார் கிடையாது என்பதால்
தகாத வார்த்தைகள் பேசுவது, ஆபாச காட்சிகள் வைப்பது போன்றவைகள் இடம்பெறும், ஆதலால் இந்த மாதிரியான இணைய தொடர்களை தனியாக பார்ப்பது உங்களுக்கு நல்லது. கீழே வரும் தொடர்களை பழையது முதல் புதியது வரை வருட வாரியாக வரிசைப்படுத்தியிருக்கிறேன்.
Zee5 இல் இடம்பெறும் தொடர்களின் காட்சியமைப்பு Netflix, Prime Video, hotstar, Sonyliv களில் வருவது போல இருக்காது. சாதாரண டிவி தொடர் காண்பது போல தான் இருக்கும், ஆனால் கதைகள் நன்றாக இருக்கும்.