நல்லமுறைல #BE முடிச்சுட்டு வெளிய வந்து கோவைல லீடிங் டெக்ஸ்டைல் மெசின் கம்பெனில உள்ள கால் வச்சாச்சு வேகமா போயிட்டு இருந்த வாழ்க்கைல திடீர்னு ஒரு பிரச்சனை 3வருசம் பாண்டுல சைன் பண்ண சொன்னாங்க...👇
அப்ப இனி இங்க ஆகாதுனு #ஓசூர்ல இருக்க பிரிமீயர் மில்ஸ் எலக்ட்ரீகல் சூப்பரவைசராக ஜாயிண்ட் செஞ்சு..மெசின் உற்பத்தி செஞ்ச பக்கமும் ஒரு வருசம் இருந்து அதோட மெக்கானீக்கல் நாலேஜ்ம் ஒரு அளவுக்கு தெரிஞ்சுட்டு இங்க வந்தது எலக்ட்ரிக்கல்க்கு நல்ல சாப்போட்டா இருந்துச்சு.👇
அப்படியே 6மாசம் டைட் செட்யூல்ல போயிட்டு இருந்துச்சு..வீட்ல நாந்தான் பெரியவன்னு (எனக்கு பின்னாடி 3பேர்) கல்யாணம் செஞ்சு வைக்க ஆயுத்தமானங்க..👇
சரினு சொன்னவுடனே மாப்ள பெரிய கம்பெனில எலக்ட்ரிக்கல் சூப்பரவைசர்னு சொல்லி சொந்தத்துல ஆளேயில்லா சொத்துக்கு அடியேன சிக்கவச்சுட்டாங்க😊 சரி ஒகேனு கல்யாணம் முடிஞ்சுது .👇
ஒரு மாசம் லீவுலயிருந்துட்டு ஊர் சுத்திட்டு வேலைக்கு போக மனசில்ல..உடனே போய் வேலைய ரிசைன் பண்ணிட்டு ஊர் வந்தாச்சு.👇
வீட்ல கேட்டதுக்கு சொந்தமா எதாவது செய்யலாம்னு. இருக்கேன்னு சொல்லியாச்சு சரி உனக்கு எது ஓகேனு தோனுதோ அதப்பாருனு சொல்லிட்டாங்க.. ஆனா பழனிக்காரப்பயலுக பொய் சொல்லி கல்யாணம் பண்ணிட்டாங்கனு வீட்டம்மாவ ஊருக்கு கூட்டிட்டு போயிட்டாங்க..😂 👇
அதுக்கு பின்னாடி சொந்தமா ஒரு இடத்த ரெடி பண்ணுவோம் இடம் தேடும் போது டெக்ஸ்டைல் 1990காலகட்டத்துல படுத்துடுச்சு இருக்கு என்னடா இது டைம் ரெம்பமோசமாயிருக்குனு இருக்கும் போது #இந்துல ஒரு வேலைவாய்ப்புக்கான விளம்பரம்..👇
வருது சன்டிகர்ல இருக்கா ஒரு #LR டெக்ஸ்டைல் யூனிட்ல எலக்ட்ரிகல் சூப்பரவைசர் வேனும், இன்ட்ரியூவ் மறுபடியும் வேலைக்கே போவோம்னு கோவைல இருந்து #KK ல புறப்பட்டு நிஜாமுதீன் போய் அங்க இருந்து புதுடெல்லி வந்து அங்க இருந்து சன்டிகர் போய் வெறுத்துட்டேன் ஏன்னா மொழி பிரச்சனை தான்..👇
கம்பெனி MD அனுபால் சிங் ❤️ மனுசன் வந்தவுடனே என்னோட சர்ட்டிப்கேட் எல்லாம் பாக்கல கம்பெனிக்குள்ள கூட்டிட்டு போய் அப்ப லேட்டஸ்சா வந்த ஒரு மெசின காமிச்சு இந்த மெசின் ஒரு வாரமா எலக்டரிக்கல் பிரச்சனைல ஓடல..கோவை கம்பெனிக்கு சொல்லியாச்சு சர்வீஸ் பர்சன் லேட்டாகுது..👇
நீங்க இதைய அட்டன் பண்ணமுடியுமானு கேட்டார்.. தெய்வமேனு..😍😍 3மணி நேரத்து சரி பண்ணி ஓட்டிவிட்டேன்... அவ்வளவு தான் என்னோட வாழ்க்கைய திருப்பிபோட்டது அந்த தருணம் தான்..💪💪💪
👇
நா கேட்ட சம்பளத்தை விட மிக மிக அதிகமான சம்பளம்..தனியாக கெஸ்ட் ஹவுஸ், தமிழ்நாட்டு சமையல் செய்ய ஒரு சமையல் ஆள்னு,என்னைய அவுங்க வீட்ல ஒரு ஆள் மாதிரி வச்சிருந்தாங்க..👇
ஒரு வருசம் ஆயிடுச்சு.. கம்பெனி இருந்த இடத்துல அதிகமான டெக்ஸ்டைல இருந்துச்சு..இங்க கம்பெனில வேலை நேரம் போக மத்தநேரத்து வெளிய கம்பெனிகளுக்கு பிரேக்டவுன்க்கு கூட்டிட்டு போவாங்க அதுல நல்ல வருமானம்..👇
ஒரு லெவல்க்கு மேல போகும் போது புது கன்ட்ரேல் பேனல் செய்யற அளவுக்கு கம்பெனிக ஆடர் கொடுக்க ரெடி ஆனாங்க.👇
சரி இனி நம்ம தனியாவே கம்பெனிய தொடங்களாம்னு அனுபால் சிங
கிட்ட சொன்னா நோ பிரபாலம் எப்பவும் போல எங்க கிட்டயே எங்க கெஸ்ட்ஹாவுஸ்லயே இருங்க நாங்களே உங்களுக்கு இடம் பாத்து கொடுக்கோம்னு ..👇
அம்பாலசிட்டி போற வழில டேராபாசி ங்கிற இடத்துல இடம் பாத்து கொடுத்தாங்க 1992ல தனியாக கம்பெனிய தொடங்கியாச்சு அங்க இருக்க ஆளுகள வச்சே நாலு வருசம் இரவு பகல் இல்லாத உழைப்பு..மிதமிஞ்சிய சம்பாதனைனு..😍😍😍
போயிட்டு இருந்துச்சு சரி இனி நம்ம சொந்த ஊர்க்கே போலாம் அங்க இருந்துட்டு இந்தியா புல்லா ரவுண்ட் அடிப்போம்னு 1997ல கோவைக்கு கம்பெனிய கொண்டு வந்து..👇
75% இந்தியாவுக்குள்ள இருக்க கம்பெனிகல்ல வேலைனு சில வெளிநாட்ல இருக்க கம்பெனிக்கும் போயிட்டு வந்தும் இன்னும் ஓடிட்டு இருக்கேன்...😂
இப்ப தமிழ்நாட்டுக்குள்ள மட்டும் ஓடீட்டு இருக்கேன் ஏன்னா பேரன் #பேரன்பு கூட இருக்கான் அவன விட்டுட்டு எங்கயும் போக முடியல..❤️
👇
தமிழ்நாடு மின்சார வாரியத்தை மக்களின் ஒத்துழைப்போடு நம்முடைய அரசாங்கம் எப்படி நவீன மயமாக்கலாம் என, 30 ஆண்டுகால மின்துறை சார்ந்து இயங்கும் #Geeyes_Control எனும் நிறுவனத்தை நடத்தி வரும் மின் பொறியாளன் என்கிற முறையில் சில யோசனைகள் இங்கே ஒரு #திரட்டாக பதிவு செய்து இருக்கேன்..👇👇👇
இந்தியாவில் உள்ள மின் வாரியங்களிலேயே நல்லமுறையில், உயரிய பாதுகாப்போடு இருப்பது நமது #தமிழ்நாடு_மின்சார_வாரியம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெருமையும் கொள்ள வேண்டும்👇
ஆனால் நம்முடைய #தமிழ்நாடு_மின்சார_வாரியம் பல வருடங்களாக நட்டத்தில் தான் இயங்குகிறது. அதற்கான காரணங்கள் என்ன என நாம் தேடும்போது..👇