தமிழ்நாடு மின்சார வாரியத்தை மக்களின் ஒத்துழைப்போடு நம்முடைய அரசாங்கம் எப்படி நவீன மயமாக்கலாம் என, 30 ஆண்டுகால மின்துறை சார்ந்து இயங்கும் #Geeyes_Control எனும் நிறுவனத்தை நடத்தி வரும் மின் பொறியாளன் என்கிற முறையில் சில யோசனைகள் இங்கே ஒரு #திரட்டாக பதிவு செய்து இருக்கேன்..👇👇👇
இந்தியாவில் உள்ள மின் வாரியங்களிலேயே நல்லமுறையில், உயரிய பாதுகாப்போடு இருப்பது நமது #தமிழ்நாடு_மின்சார_வாரியம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெருமையும் கொள்ள வேண்டும்👇
ஆனால் நம்முடைய #தமிழ்நாடு_மின்சார_வாரியம் பல வருடங்களாக நட்டத்தில் தான் இயங்குகிறது. அதற்கான காரணங்கள் என்ன என நாம் தேடும்போது..👇
தமிழ்நாடு அரசு உற்பத்தி செய்யும் மின்சாரம், ஒன்றியத் தொகுப்பிலிருந்து வரும் மின்சாரம், தனியாரிடமிருந்து (காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம்) வாங்கும் மின்சாரம்- இவற்றின் மொத்த மின் அளவீட்டுக்கும், அதை நாம் பயன்படுத்தும் அளவீட்டுக்கும் இடையே அதிகமான வேறுபாடு வருகிறது👇
அதை 'மின் இழப்பு'(Power Loss) எனச் சொல்வார்கள். அதற்கு காரணங்கள் பல இருக்கின்றன. ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க👇
முக்கியமான முதலாவது காரணம்- நம்மிடம் இருக்கும் பழைய மின்மாற்றிகள் ( Transformers)
ஏனெனில் பழைய மின்மாற்றிகளில் பவர்லாஸ் அதிகமாக இருக்கும்👇
ஒரு சின்ன உதாரணம்-
நம்ம வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற ஒரு ட்ரான்ஸ்பார்மரை எடுத்துக் கொள்வோம்.👇
அதோட கெபாசிட்டி 500 KVA இருக்குனு வைங்க. அதற்கு இன்புட் (primary) வோல்டேஜ் 11000KV அல்லது 22000KV கொடுப்பாங்க.👇
அதில் இருந்து அவுட்புட் (secondary) 440 Volt'களாக பிரித்து மக்கள் உபயோகத்துக்கு கொடுப்பாங்க.
அந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து மும்முனை இணைப்பும் (3 phase supply), ஒரு நியூட்ரல் வயரும் போகும்👇
அதில் இருந்து வீட்டு உபயோகத்திற்கு ஒருமுனை இணைப்பு (single phase) மற்றும் விவசாய/தொழில் நிறுவனங்களுக்கு மும்முனை(3 phase) இணைப்பும் கொடுப்பார்கள்.👇
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது- மும்முனை (3phase) இணைப்பு கொடுத்தால் அதில் கட்டயமாக ஒரு மின்தேக்கி(capacitor) மாட்ட வேண்டும்.
உதாரணமாக நீங்கள் மும்முனை இணைப்பில் 10HP சர்வீஸ் வாங்கினீர்கள் எனில் கட்டாயமாக 3KVAR capacitor மாட்ட வேண்டும்..👇
உங்களுடைய 10HP மோட்டார் ON'இல் இருக்கும் போது மட்டும் இந்த 3KVAR capacitor ON'இல் இருக்க வேண்டும்..👇
அப்போது தான் Power Factor PF .99 புள்ளிகளாக பேண முடியும்.
எதற்காக PF .99 புள்ளிகளாக பேண வேண்டுமெனில்.. நமக்கு அடுத்தடுத்து இருக்கும் சர்வீஸ்களுக்கு voltage drop இல்லாமலிருக்கும்👇
அப்படி இந்த #PF .99 புள்ளிகளாக பராமரிக்கும் பட்சத்தில் அரசாங்கம் நமக்கு ஊக்கத்தொகை கொடுக்கிறது. அரசாங்கமும் முடிந்தவரை செய்கிறது.👇
நாமும் அதனுடன் பயணிக்க தவறவிடுகிறோமா? இல்லை மின்துறை, மக்களிடம் மின்சாரம் சார்ந்த சரியான புரிதல்களை ஏற்படுத்தவில்லையா எனத் தோனுது👇
வீட்டு சர்வீஸ்லயும் நாம் சில தவறுகள் செய்கிறோம். அதையும் பார்போம் வாங்க.
இதுல அரசாங்கத்துக்கும் இழப்பு இருக்கு. நமக்கும் இழப்பு இருக்கு. முதல்ல நமக்கு என்ன மாதிரியான கண்ணுக்கு தெரியாத இழப்பு இருக்குனு பாப்போம்..👇
வீட்டு சர்வீஸ்ல 95% ஒருமுனை இணைப்பு(single phase) #AC220v தான் இருக்கும். அதாவது ஒரு வயர் சப்ளை, இன்னொரு வயர் நியுட்ரல்.
உங்கள் வீட்டு சர்வீஸ்க்கு வழங்கப்பட்ட மின்அளவு(sanction load) 2000Watts என வையுங்கள்👇
அந்த அளவிற்கான fuse carrier(பீஸ் கட்டை) மற்றும் அந்த அளவிற்கான வயர் (கம்பத்தில் இருந்து நம் வீட்டுக்கு வருவது) மட்டுமே நம் வீட்டில் மாட்டி இருக்கும்..👇
நம் வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, ட்யூப்லைட், டீவி (ஏசிய சொன்னா திட்டுவீங்க.. வேண்டாம் விடுங்க) போன்ற சாதனங்களுக்கான connecting load 1500Watts 'க்குள்ள வரும்👇
மேற்சொன்ன சாதனங்கள் எல்லாமே ON'ல இருக்கும் போது, வீட்ல உள்ளவங்க ஒரு வேலையை செய்வாங்க. அது என்னன்னா- தண்ணீர் மோட்டாரையும் போடுவாங்க. அந்த நேரத்துல என்னாகும்னா.. வீட்ல அப்படியே voltage down ஆகும்👇
தண்ணீர் மோட்டாரும் அதற்காக வேகத்தில் (RPM) ஓடாது. Voltage குறைவாக இருக்கும்போது மோட்டார் ஓடினால் யூனிட் பயன்பாடு அதிகமாகும்..👇
ஏன்னா தண்ணீர் எடுக்கும் மோட்டார்கள் பெரும்பாலும் 1HP 220V தான் இருக்கும். (1HP என்பது 746 Watts) ஆகவே வீட்ல நாம முடிஞ்சவரைக்கும் அதிகபட்ச லோடு கொடுக்கக் கூடாது👇
தண்ணி மோட்டார் ஓட்டும்போது, ஏதாவது ஒரு லோடை OFF செய்து வைக்கனும். இல்லை நான் அப்படியெல்லாம் செய்யமாட்டேன்னு இருந்தா, மாதாமாதம் கண்ணுக்குத் தெரியாமல் நமக்கு பணம் இழப்பு தான்👇
இப்ப நம்ம வீடுகள்ல மின்சாரத்தை சேமிக்கிறதுக்கான சில வழிமுறைகளை பார்ப்போம்.
கிராமப்புறங்கள் அதிகம் பயன்படுத்தப்படும் குண்டு பல்புகள் மிக அதிகளவு மின்சாரத்தை உறிஞ்சும்.👇
அதனால குண்டு பல்புகள், டியூப் லைட்டுகளுக்கு பதிலா #LED பல்புகள் பயன்படுத்தலாம். இப்ப மார்கெட்ல கிடைக்கற #LED பல்புகள் குறைந்த மின்சாரத்தை எடுத்துட்டு அதிக வெளிச்சம் கொடுக்கும் திறனுடையதா இருக்கும். அது மாதிரி பல்புகள் பயன்படுத்துனா 40% வரை மின்சாரத்தை சேமிக்கலாம்.👇
விலையும் பாத்தீங்கன்னா ஒரு டியூப்லைட் செட்டுக்கு ஆகுற செலவும் ,ஒரு #LED டியூபுக்கு ஆகுற செலவும் கிட்டத்தட்ட ஒன்னுதான். லைஃப் அதைவிட இதுல நல்லாருக்கும்..👇
அதே மாதிரிதான் சீலிங் ஃபேன்கள்.
Energy Efdiciency மோட்டார் வெச்ச ஃபேன்கள் பயன்படுத்தும் போது 35% வரை மின்சாரத்தை மிச்சப்படுதலாம்..👇
அதோட விலையும் சாதாரண ஃபேன்களை விட 1500-2000 கூட வரும். ஆனால் இது சேமிக்கும் மின்சாரத்துக்கான பணத்தை கணக்கிடும்போது, இந்தத் தொகை ஒன்றுமே இல்லை.👇
ஆகவே மக்களே.. இப்ப வீட்டுல பயன்பாட்டுல இருக்க குண்டுபல்பு, டியூப்லைட்டுகள், சீலிங் ஃபேன்கள் ஆகியவற்றை உடனடியா மாத்திட்டு #LED, Energy Efficiency fans வாங்கி மாட்டுங்க என சொல்ல வரல..👇
ஆனா ஏற்கனவே இருக்கிற லைட்டோ, ஃபேனோ பழுதாகி, வேற வாங்க வேண்டி வரும்போது தயவுசெய்து அந்த இடத்தில ஒரு #LED பல்போ, டியூபோ வாங்கி மாட்டுங்க; Energy Efficient மோட்டார் உள்ள ஃபேன் வாங்கி மாட்டுங்க. திரும்பவும் பழைய டெக்னாலஜிக்கு போக வேண்டாம்..👇
அப்புறம் மேல்மட்டத் தொட்டிக்கு(over tank) பயன்படுத்தும் பழைய தண்ணீர் மோட்டார்களை முடிஞ்ச வரைக்கும் மாத்திடுங்க. ஏன்னா பழைய மோட்டார் 1HP செய்யற வேலையை இப்ப வர்ற 0.5HP Enery Efficiency மோட்டார் செய்யும். Light Weight, Power Saving என மேலும் பல சாதக அம்சங்களும் இருக்கு..👇
இன்னுமொரு முக்கியமான விசயம்- #LED பல்புகள் மற்றும் ஒரு Energy Efficient சீலிங் ஃபேன் இவற்றை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு அரசு இலவசமா வழங்கலாம்.👇
அப்படி வழங்கும்போது- இப்போ மாதம் 100 யூனிட் மின்சாரம் இலவசமா அரசு கொடுத்துட்டு இருக்கு. அந்த 100 யூனிட்லயே மாதம் பல லட்சம் யூனிட்களை அரசாங்கம் மிச்சம் பண்ணலாம்.👇
அடுத்து இப்போது பயன்பாட்டுல இருக்க பழைய மின்மாற்றிகள்ல (transformers) அதோட அதிகபட்ச கொள்திறன்ல (total capacity 70% கொடுத்தாலே அதிக வெப்பமடைஞ்சிடும்.
பொதுவா மாலை நேரங்கள்ல மின் பயன்பாடு அதிகமா இருக்கும். அந்த நேரத்துல Over Heat, Fuse போகறது என பல பிரச்சனைகள் இருக்கும்👇
மதிய நேரங்கள்ல பயன்பாடு அதிகம் இல்லாதபோதும் மின்மாற்றிகள்ல மின்சார இழப்பு இருக்கும்.👇
அதுக்கு ஒரே தீர்வு- பழைய மின்மாற்றிகளை மாத்திட்டு, இப்ப வர்ற நவீன மின்மாற்றிகளை நிறுவறது தான். இதுல மின் பயன்பாடு குறைவா இருக்கும் நேரங்கள்ல மின் இழப்பு ஏற்படாது. அதேபோல அதோட முழுமையான கொள்ளளவுல பயன்பாடு இருக்கும்போதும் மின் இழப்பு மிகக் குறைவாதான் இருக்கும்👇
இனி விவசாய மின்பயன்பாட்டுல இருக்க மின் இழப்புக்கு போவோம். இங்கதான் இருக்கறதுலயே அதிகமான மின் இழப்பு இருக்கு. இதை சரி செய்யனும்னா ஒவ்வொரு விவசாயும் மனசு வைக்கனும்..👇
எப்படினா ஒரு இலவச மின்சார இணைப்பு 5HP என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை தோட்டத்தில் உள்ள மின் கம்பத்தில் 5அடி உயரத்தில் ஒரு இரும்பு பெட்டியில் உள்ளே மரப்பலகையில் 32amps fuse carrier 3 மாட்டி, அதில் 7/20 காப்பர் வயர் வழியாக 3 ஃபேஸ் லைனும், ஒரு நியூட்ரல் வயரும் கொடுத்து விடுவார்கள்👇
அதில் இருந்து நாம் மோட்டார் மாட்டியிருக்கும் இடத்திற்கு சப்ளையை கொண்டு சென்று 50amps fuse carries மூன்று மாட்டி, அதில் input connection கொடுத்து, output'இல் இருந்து 3 ஃபேஸ் சப்ளை எடுத்து, 32amps 3 ஃபேஸ் Change-Over'இல் (DB switch எனவும் சொல்வாங்க) காமன்லைன்ல கொடுத்துடனும்👇
அந்த Change-Over'இல் இடதுபக்க கனெக்‌ஷனில் கிணத்து மோட்டார் ஸ்டார்ட்டர்'க்கும், வலதுபக்க கனெக்‌ஷனில் போர் மோட்டார் ஸ்டாட்டர்க்கும் கனெக்‌ஷன் கொடுத்து விடுவார்கள்👇
இந்த Change-Over எதற்கு என்றால், ஒரு நேரத்தில் எதாவது ஒரு 5HP மோட்டார் மட்டும் ஓட்ட வேண்டும் என்பதற்காக. அதாவது ஒரே நேரத்தில் இரண்டு 5HP மோட்டார் ஓடக்கூடாது என்பதற்காக. 👇
அடுத்து R பேஸ்ல இருந்து ஒரு வயர் எடுத்து ஒரு 40w பல்புக்கு இணைப்பு கொடுப்பார்கள். இது எதற்கு எனில் கிணற்று மேட்டில் ஸ்டாட்டர் இருக்குமிடத்தில் ஒரு மின்விளக்கு எரிய மட்டும் அனுமதி..👇
சரி இனி மெயின் மேட்டருக்கு வருவோம். தற்போது விவசாயிகள் பயன்படுத்தும் 5HP கிணற்று மோட்டார்கள், ஒரு மணி நேரத்திற்கு 5 யூனிட் எடுக்கும்.
அதுவே நவீன ரக Energy Efficiency மோட்டார்கள் ஒரு மணி நேரத்துக்கு 3.44 யூனிட் மட்டுமே எடுக்கும்.👇
5HP Energy Efficiency கம்பரசர் மோட்டார், ஒரு மணி நேரத்துக்கு 4.13 யூனிட் எடுக்கும். தற்போது விவசாயி பயன்படுத்தும் பழைய மோட்டார் ஒரு மணி நேரத்திற்கு 6.19 யூனிட் எடுக்கும்👇
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி ஒரு சின்ன கணக்கு-
சாதாரண மோட்டாரை விட Enery Efficiency கிணற்று மோட்டார் 3 மணிநேரம் ஓடினால் 4.68 யூனிட் மிச்சமாகும்..🙏
அதேபோல சாதாரண கம்ப்ரசர் மோட்டாரை வுட Energy கம்ப்ரசர் மோட்டார் 12மணி நேரம் ஓடினால் 24.72 யூனிட் மிச்சமாகும்..👇
ஆக மொத்தம் 29.4 யூனிட்கள்.
ஒரு மாதத்திற்கு 882 யூனிட்கள். அதாவது தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் பழைய மோட்டார்கள் மூலம் ஒரு மாதத்தில் ஏற்படும் மின் இழப்பு சுமாராக 882 யூனிட்டுகள்..👇
மின் வாரியத்திற்கு ஒரு இலவச மின் இணைப்பிலிருந்து மாதம் 882 யூனிட்கள் மின் இழப்பு ஏற்படுகிறது எனில்,
தமிழ்நாட்டுல விவசாயத்துக்கு தர்ற இலவச மின் இணைப்பு மட்டும் சுமார் 2 லட்சம் இருக்கும்.👇
இந்த 2லட்சம் இணைப்புகள்ல இருந்து மாசத்துக்கு, வருடத்துக்கு எவ்வளவு மின் இழப்பு ஏற்படும்னு நீங்களே கணக்கு போட்டு பாத்துக்கோங்க.👇
இந்த கணக்கு, நியாயமாக அரசு சொல்லும் 5HP மோட்டாரை மாட்டி மும்முனை (3பேஸ்) மின்சாரம் இருக்கும் போது மட்டும் பயன்படுத்தினால் வரும் யூனிட் அளவு..👇
ஆனால் பெரும்பாலான விவசாயிகள் என்ன பண்ணுவாங்கன்னா, இருமுனை(2phase) இணைப்பை சட்டவிரோதமாக மும்முனை(3 phase) இணைப்பாக மாற்றி ஓட்டுவார்கள்..👇
அதாவது மின்வாரியம் இலவச மின்சார சர்வீஸ்க்கு கொடுப்பது 3பேஸ் மட்டும் தான். நம்ம மக்கள் அதை, 2பேஸ் சப்ளையில் ஒரு கெப்பாசிட்டர் மாட்டி 3பேஸ் சப்ளையாக மாற்றி, கொஞ்சமும் குற்ற உணர்ச்சியில்லாம திருட்டு மின்சாரம் மோட்டரை ஓட்டிட்டுகிரார்கள்👇
இதுமாதிரி திருட்டுவேலை பண்ணி மோட்டார் ஓட்டும் சமயங்கள்ல உறிஞ்சப்படுற யூனிட் தாறுமாறாப் போகும். இது எல்லாமே கணக்கில் வராத மின் இழப்பு(un-accountable power loss) கணக்குல தான் வரும்.
இதையெல்லாம் கணக்குல கொண்டு வந்தா தலை சுத்திடும்.👇
இது மட்டுமில்லாம 5HP மோட்டார்க்கு வாங்கின சர்வீஸ்ல 7.5HP / 10HP மோட்டரை மாட்டி ஓட்டுவாங்க. அதுவும் பழைய மோட்டார்கள். இதனால ஏற்படுற power loss தனி.அதுவும் கணக்கில் வராத மின் இழப்பாதான் கணக்கிடப்படும்👇
இப்படி சட்டவிரோதமா பயன்படுத்தறது தவறு ன்னும், கொடுக்கப்பட்ட லிமிட்டுக்கும் அதிகமான திறனுடைய மோட்டார்கள் பயன்படுத்தும் போது, அது எல்லைமீறிய மின்சாரத்தை உறிஞ்சும் என்பதையும் விவசாய மக்களுக்கு புரிய வைக்கனும்👇
இந்த பிரச்சனைகளை தடுக்க அல்லது குறைப்பதற்கான வழிமுறைகளை பார்ப்போம் வாங்க.👇
விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தையும் கொடுத்து, அதில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின் இழப்பை சரி செய்யனும்னா👇
முதலில் விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் மின் மோட்டார்கள் அனைத்துக்கும் மாற்று மோட்டாராக energy efficiency மோட்டார்களை இலவசமாக கொடுக்க வேண்டும்👇
அடுத்து கம்பத்தில் இருக்கும் இரும்பு பெட்டியில் உள்ள பீஸ் கட்டைக்கு பதிலாக ஒரு சின்ன கன்ட்ரோல் யூனிட் மாட்டவேண்டும். அதில் 5HP மோட்டார் என்ன Amps எடுக்கிறதோ அந்த Amps அந்த சாதனத்தில் செட் செய்து, அதை #EB சீல் பண்ணிடனும்👇
இப்ப ஒரு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வெச்சாச்சு. இனி விவசாயிகள் அதிக HP திறனுடைய மோட்டார் மாத்தி பயன்படுத்த முடியாது. ஏன்னா அப்படி பயன்படுத்துனா அந்த மோட்டார் அதிக லோடு எடுக்கும். அந்த நேரத்துல அந்த கன்ட்ரோல் டிவைஸ் OFF ஆகிவிடும்..👇
கன்ட்ரோல் டிவைஸ் OFF ஆகி விட்டால், #EB ஆபீஸ் வந்து எழுதிகொடுத்து, லைன்மேன் வந்து சீல் ஓபன் செய்தால்தான் திரும்ப ON செய்ய முடியும் என்றவாறு கொண்டு வரணும்👇
அதேபோல கன்ட்ரோல் யூனிட்க்கு 3பேஸ் சப்ளை கட்டாகி, 2பேஸ் சப்ளையாக வரும்போது அந்த டிவைஸ் OFF ஆகிடனும். திரும்ப 3பேஸ் சப்ளை வரும்போது டிவைஸ் தானாகவே ON ஆகும்படி auto-program பண்ண வேண்டும்..👇
இப்படி செய்யும்போது இன்னொரு பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.இனி 2பேஸ் சப்ளையை சட்டவிரோதமாக 3பேஸ் ஆக மாற்றி ஓட்ட மாட்டாங்க. ட்ரான்ஸ்பார்மர்க்கு லோடும் இருக்காது👇
இந்த கன்ட்ரோல் யூனிட் தயாரிப்பது ஒரு பிரச்சனையில்லை. Requirements சொல்லி கேட்டா BCH, L&T, TC Mac, னு பெரிய கம்பெனிகளே தயார் செய்து கொடுக்கும். செலவும் குறைச்சலாதான் வரும். இதையும் இலவசமாவே விவசாயிகளுக்கு வழங்கிடலாம்👇
அடுத்து பார்த்தோம்னா.. மின் திருட்டு. இதை தடுக்க மின்சார வாரியம் சார்பில் தனி பறக்கும்படை இருக்கு. இருந்தும் சில பெரிய இடங்கள்ல நெருங்க முடியறதில்லை. அதுக்கு காரணம் அரசியல் செல்வாக்கு.
இது மாதிரியான மின் திருட்டில் ஈடுபடுறவர்களை அரசு, இரும்புக்கரம் கொண்டு அடக்கனும்👇
மின்சாரத்தை சிக்கனமாக எப்படி உபயோகிக்கனும் பேசினா பேசிட்டே போகலாம். நாம் நமக்கு தேவையான மின்சாரத்தை மட்டும் பயன்படுத்தனும். மின்சாரத்தை வீண் பண்ணக்கூடாது👇
இனி வரும் காலங்கள்ல நமக்கான மின்சார தேவைகள் அதிககமாகிட்டே போகுது. மின்சார உற்பத்தியில் ஏற்கனவே பல பிரச்சனைகள் இருக்கு. மின் தேவைகள் அதிகமாக ஆக, அதில் உற்பத்தி செய்வதில் உள்ள பிரச்னைகளும் அதிகமாகிட்டே போகும்..👇
ஆக மின்சாரத்தை சரியான முறையில் சிக்கனமாக பயன்படுத்தினால், அது வீட்டுக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது..👇
இந்த மின்சாரம் பத்தின டாப்பிக்ல சூரிய ஒளி மின்சாரம்'ங்கறது ஒரு முக்கியமான பகுதி. இன்னைக்கு உலகம் அதை நோக்கித்தான் போய்கிட்டுருக்கு. அதோட சாதக பாதகங்கள் என்ன அப்படின்னு இன்னொரு #திரட்ல பார்க்கலாம்.!

வாழ்க தமிழ்..🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Balu | பாலு

Balu | பாலு Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @balu_gs

17 Jun
உங்க முதல் jop நினைவுகள்னு பரிசல் ஸ்பேஸ்ல தலைப்பு பார்த்தவுடனே என்னைய அப்படியே 1990க்கு தூக்கிட்டு போயிடுச்சு நினைவுகள்...👇

#திரட்
நல்லமுறைல #BE முடிச்சுட்டு வெளிய வந்து கோவைல லீடிங் டெக்ஸ்டைல் மெசின் கம்பெனில உள்ள கால் வச்சாச்சு வேகமா போயிட்டு இருந்த வாழ்க்கைல திடீர்னு ஒரு பிரச்சனை 3வருசம் பாண்டுல சைன் பண்ண சொன்னாங்க...👇
அப்ப இனி இங்க ஆகாதுனு #ஓசூர்ல இருக்க பிரிமீயர் மில்ஸ் எலக்ட்ரீகல் சூப்பரவைசராக ஜாயிண்ட் செஞ்சு..மெசின் உற்பத்தி செஞ்ச பக்கமும் ஒரு வருசம் இருந்து அதோட மெக்கானீக்கல் நாலேஜ்ம் ஒரு அளவுக்கு தெரிஞ்சுட்டு இங்க வந்தது எலக்ட்ரிக்கல்க்கு நல்ல சாப்போட்டா இருந்துச்சு.👇
Read 21 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(