தர்மர் சந்நியாசி வடிவில் கங்கர் என்ற பெயரிலும், பீமன், மல்லன் எனும் பெயரில் சமையலிலும், அர்ஜுனன் பிருகன்னவள் என்ற பெயரில் பேடியாக நடனம் கற்பிப்பவளாகவும், நகுல - சகாதேவர்கள் தாமக்கிரந்தி - தந்திரிபாலன் என்ற பெயர்களில் பசு - குதிரைகளைப் பராமரிப்பவர்களாகவும் பணி புரிந்தார்கள்!
கீசகன் வதம் நடந்த இடம் "குண்டடம்"
(தாராபுரதில் இருந்து 16K.M)
மஹாபாரத காலத்தில் அர்ஜுனன், எதிரிகளால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு, தாராபுரம் திரும்பிச் சென்றார், அதனால் அவ்விடம்
" ஆநிரை திருப்பு ஊர் "என்று பெயர் பெற்றது!
"இதிகாசங்கள் எத்தனை?' என்று கேட்டால், உடனே எல்லோரிடமிருந்தும் வரும் பதில்கள் இராமாயணமும் மகாபாரதமும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் இதிகாசங்கள் இரண்டல்ல; மூன்று. சிவரகசியம், இராமாயணம், மகாபாரதம் ஆகிய மூன்று என்பதுதான் பண்டைய மரபு. இதை திருமுருக கிருபானந்தவாரியார் கூட
பல சொற்பொழிவுகளிலும் கட்டுரைகளிலும் குறிப்பிட்டுள்ளார்.
சிவரகசியம் என்பது லட்சம் கிரந்தமுடைய பரமேதிகாசம் எனப் பெயர் பெறும். இதிகாசங்களுள் பரமேதிகாசம் உயர்ந்தது என்பது சொல்லாமலேயே உணரப்படும். இச் சிவரகசியம் பரம்பொருளாகிய சிவபெருமான் உமையம்மைக்கு உபதேசித்தருளிய உயர்வுடையது.
சிவரகசியம் பன்னிரண்டு பிரிவுகளை உடையது. அவற்றுள் மூன்றாவது பிரிவைத் தமிழில் செய்யுள் வடிவில் செய்தருளியவர் திருவாரூரைச் சேர்ந்த ஒப்பிலாமணி தேசிகராவார். இந்நூலுள் சிவபெருமானுடைய சிறப்புகளும், ஆன்மாக்களிடத்து(உயிர்கள்) அவர் நடத்தும் ஐந்தொழிற் சிறப்பும் (படைத்தல், காத்தல், அழித்தல்,
உரு கொண்டு நரசிம்மரோடு போரிட்டு வதம் செய்தார்!
லட்சுமி இறைவனிடம் மாங்கலிய பிச்சை கேட்க சிவபெருமானும் அவ்வாறே அருள் செய்ய மஹாவிஷ்ணு உயிர் பெற்று எழுந்து வணங்கினார்.
தம் தோலையும்
எலும்பையும் அணிந்து கொள்ளுமாறு மஹாவிஷ்ணு வேண்ட, இறைவனும் எலும்பை கதையாகக்கொண்டு,தோலைச் சட்டையாகப்
போர்த்து அருள் செய்தார். இவ்வடிவமே சட்டைநாதர் வடிவம் ஆகும்!
சட்டைநாதர் திருக்கோவில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம் (திருஞானசம்பந்தர் உமையிடம் ஞானப்பால் உண்ட ஸ்தலம்!)