மாநிலத்திலுள்ள அனைத்து மின் நுகர்வோருக்கும் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். கடந்த சில ஆண்டுகளிலிருந்த தவறான நிர்வாகத்தால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும் கடுமையான நிதி (1/n)
நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இவ்விரு கழகங்களின் நிதிநிலை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மின் உற்பத்தி திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதன் மூலமும், பழைய, செயல்திறன் குறைந்த காற்றாலைகளை புனரமைக்கப்படும். (2/n)
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலமும், மின் உற்பத்தித் திறன் உயர்த்தப்படும். நவீன தொழில்நுட்பங்களையும், நுண் மின்கட்டமைப்புகளையும் பயன்படுத்தி,மின் சேமிப்பை உயர்த்துதல் /விநியோகத்தில் மின் இழப்புகளைக் குறைத்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். (3/n)
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. பன்வரிலால் புரோகித் அவர்களின் மின்துறை சார்ந்த சட்டப்பேரவை உரையிலிருந்து! (4/n)
6,95,697 மக்கள் ( 63%) வாக்களித்து வெற்றி பெற்ற, மக்கள் பிரதிநிதி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் S.ஜோதிமணி @jothims அவர்கள், 23 ஆண்டுகள் பொதுவாழ்வில் நேர்மையையும் கண்ணியத்தையும், தூய்மையையும் தொடர்ந்து கடைப்பிடிப்பவர். ஒன்றிய குழு உறுப்பினராக தனது அரசியல் வாழ்வை தொடங்கி, ( 1/6)
கடின உழைப்பால் இன்று நாடாளுமன்றத்திற்க்கு சென்றவர். விவசாய குடும்பத்தில் பிறந்து எளிய முறையில் வாழ்ந்து மக்களின் செல்வாக்கை பெற்ற S.ஜோதிமணி மீது, News 7 தொலைகாட்சி விவாதத்தில் நாகரீகமற்ற முறையில் பேசியுள்ள கரு.நாகராஜன் அவர்களின் பேச்சு, கடும் கண்டனத்திற்கு உரியது. கொரோனோ ( 2/6)
தொற்று காலத்தில், செயல்படாத மோடி, எடப்பாடி அரசின் மீதான, மக்களின் எண்ணத்தை, நேரலையில் பிரதிபலித்த, S.ஜோதிமணி @jothims மீது, முறையான பதிலை அளிக்க தவறி, " ஆட தெரியாதவன் கூடம் கோணல் என்றானாம் " என்பது போல, நேரலையில் பதில் அளிக்க திராணி இல்லாமல் அவர் மீது, நாகரீகமற்ற முறையில் (3/6)