வி.பி.சிங்.. அவரின் பிறப்பு குறித்த விவரம் தேவை இல்லை. ஆனால் அரசியலில் செய்த செயல், பல முறை அடக்குமுறை நடவடிக்கை சந்திக்க செய்தது. #HBD_VPSingh
27% பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, தமிழகத்துக்கு காவிரி நடுவர் மன்றம், அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது இவரின் சாதனைகள்.
நிதியமைச்சராக இருந்த போது திருபாய் அம்பானி உட்பட பலரின் மேல் எடுத்த சொத்து குவிப்பு எதிரான நடவடிக்கை அவரை அமைச்சர் பதவியில் இருந்து இறக்கியது
பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தபோது போபர்ஸ் பீரங்கி ஊழல் மீது நடவடிக்கை எடுக்க மீண்டும் ஒருமுறை அமைச்சர் பதவி பறிபோக காரணமானது.
எல்லாவற்றிற்கும் மேலாக மண்டல் கமிஷன் அறிக்கை படி பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு 27% உறுதி செய்ய, பிரதமர் பதவி விலக காரணமானது. பிஜேபி கொடுத்து வந்த ஆதரவை விலக்க இரண்டு காரணம். ஒன்று இட ஒதுக்கீடு. மற்றொன்று இரத யாத்திரை அனுமதிக்க மறுத்தது.
அன்று பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கேட்டு பேசும் போது முதலில் "பெரியாருக்கும் அம்பேத்காருக்கும்" நன்றி சொல்லி ஆரம்பித்தார். சமூக நீதி குறித்த தெளிவான பார்வை அது. அதனால் தான் இருவரையும் ஒரே தராசில் நிறுத்தினார். நம்மை போல பிரித்து பேசி எதிரி முன்னேற இடம் கொடுக்கவில்லை.
இன்று பிறந்தநாளில் அவர் செய்த சாதனை பேசுவதுடன், சமூக நீதி குறித்த பார்வையில் "பெரியாரையும் அம்பேத்கரையும்" எதிர் எதிர் துருவங்களில் நிறுத்தாது பயணிப்போம்.