நாடு முழுவதும் 100 நகரங்களில் மத்திய அரசின் SMART CITY திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஈரோடு உள்பட 11 மாநகராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தும் மாநகராட்சிகளுக்கு மத்திய அரசின் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.
ஈரோடு மாநகராட்சி சார்பில், வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து 24 இடங்களில் நுண் உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்துக்கு தேசிய அளவில் 3ஆவது இடத்தையும், தமிழகத்தில் முதல் இடத்தையும் பெற்றுள்ளதாக மத்திய அரசின் அமைச்சகம் அறிவித்துள்ளது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh