திமுக தான் தோல்வியுற்ற இடங்களில் கூடுதலாக உழைப்பை செலுத்தி அங்கும் இனிவரும் தேர்தல்களில் வெற்றிப்பெற வேண்டும் என முடிவு செய்துள்ளது. முதல்வரின் தேர்தல் வெற்றி குறித்த பேச்சுகளில் இது வெளிப்பட்டிருக்கும்.
கொங்கு மண்டலத்தில் தோல்வியுற்றதை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட திமுக தலைமை, இந்த பகுதிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க துவங்கியது. முதல் மாதத்திலேயே இரண்டு முறை இந்த பகுதிக்கு முதல்வரும் பயணித்து கொரோனா பணிகளை முடக்கிவிட்டார்.
அதிக தடுப்பூசிகளை ஒதுக்கி, சென்னைக்கு அடுத்தபடியாக...
கோவைக்கு அதிக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதனை புரிந்துக்கொண்ட பாஜக, கோவைப்பகுதிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை சிதைக்கும் விதமாக, கோவைக்கு தடுப்பூசிகள் தரப்படுவதில்லை என்ற பொய்ப்பரச்சாரத்தை முன்னெடுத்தது.
பின்னர், கோவைக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி விவரங்களை அமைச்சர்.....
வெளியிட்டதும், அதற்கான பதிலையோ புறக்கணித்ததாக சொல்லப்பட்டதற்கான ஆதாரங்களையோ தராமல், அந்த பொய் பிரச்சாரத்தை சத்தமில்லாமல் கைவிட்டது.
இதன்பின், கோவைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கேட்கப்பட்டதையும் பாஜக ஆதரிக்கவோ வலியுறுத்தவோ இல்லை. இப்படி அடுத்தடுத்து கோவை பகுதிக்கு.........
திமுக கோவைப்பகுதிக்கு முன்னெடுக்கும் நலத்திட்டங்களை தடுக்கும் விதமாக,
கோவை தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாக அடுத்த கட்டுக்கதையை கையிலெடுத்திருக்கிறது பாஜக.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்தது, அதிமுக. மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து கோலோச்சிவருவதும் அதிமுக தான்......
திமுகவிற்கு இந்த மண்டலத்தில் பெரிய செல்வாக்கு இல்லை. அதனால் அந்த மண்டலத்தில் பெரிய அளவில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றதில்லை.
இப்படி இருக்கும் போது, கொங்கு பகுதிக்கு திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அதற்கு காரணம் அதிமுகவாகத்தானே இருக்க முடியும்?...
தனது கூட்டணி கட்சியை கேள்வி கேட்க துணிவில்லாமல், காழ்ப்பூணர்ச்சி காரணமாக திமுகவை எதிர்க்கும் நோக்குடன் கொங்கு பகுதிக்கு வரவிருக்கும் நலத்திட்டங்களை தடுக்கும் நோக்கத்துடன் செயல்படும் பாஜகவை இந்த பகுதி மக்கள் புரிந்துக்கொண்டு, இவர்களை புறக்கணிக்க வேண்டும்......
ஏற்கனவே மாநில உரிமைகளையும் வருவாயும் தொடர்ந்து பறிக்கப்பட்டுவரும் நிலையில், மாநிலத்தை பிரித்து சிறு பிரிவுகளாக்குவதன் மூலம், தமிழ் மாநிலம் என்ற அந்தஸ்தைக் குலைத்து, ஒற்றுமையாக போராடும் இம்மாநில மக்களை திசைத்திருப்பி.........
தான் மேற்கொண்டுவரும் அதிகாரப்போக்கை தொடரவே இப்போது இந்த 'கொங்கு நாடு' முழக்கம்.
மக்கள் இதை உணர்ந்து, தான் தலையில் தானே மண்ணள்ளி போட்டுக்கொள்ளாமல், நமக்கு எது வலிமை தரும் என்று உணர்ந்து செயல்பட வேண்டும்.