RVS Profile picture
23 Jul, 12 tweets, 2 min read
”கட்டை விரலை வெட்டிக் குடுன்னு கேட்ட ஒருவர் குருவா? என்னய்யா இது நாட்ல அந்யாயமா இருக்கே!”
“அவர் குருதாங்க...”
“இதுவா குருவின் லக்ஷணம்?”
“கதை தெரியாதா? ’நீங்கதான் என் மானசீக குரு. என்ன தட்சணை வேணும்.. ப்ளீஸ் கேளுங்க...’னு ஒத்தைக்கால்ல நின்னான் ஏகலைவன். (1/n)
உன்னிடமிருக்கும் சிறந்ததைக் கொடுன்னு கேட்டார் துரோணர்”
“ம்.. அப்புறம்...”
“வில்லாளிக்குச் சிறந்தது அவனது கட்டை விரல். சட்டுன்னு வெட்டிக் கொடுத்துட்டான்...”
“யோவ்... நீயென்ன துரோணருக்கு சப்பைக் கட்டா? ” (2/n)
“இல்லீங்க.. இது கிருபானந்தவாரியார் மகாபாரதச் சொற்பொழிவுல சொன்னது... இதுல ஏகலைவன் எவரெஸ்ட்டுக்குப் போய்ட்டான். துரோணர் மேலேயும் துளி பழி இல்லை... இதையே இன்னொரு மாதிரியும் சொல்வாங்க...”
“எப்படி?”
”நாட்டுல துப்பாக்கி வச்சுக்கணும்னா லைசன்ஸ் வேணும்..ஓகேவா?” (3/n)
“ஆமாம்..”
“அது மாதிரி அந்த காலத்துல சில வித்தைகள்.. ராஜாவுக்கு மட்டும்தான் தெரியணும்னு இருந்தது.....”
“அதனால...”
“நாயோட வாயை அம்பாலக் கட்டுற வித்தையை க்ஷத்திரியனான அர்ஜுனனுக்கு துரோ சொல்லிக்கொடுத்தார் ப்ரோ..” (4/n)
“சரி ப்ரோ...... கத்துக்கொடுக்கட்டும்.. அதுக்கு இவன் கட்டை விரலை ஏன் வெட்டணும்? ப்ரோ... ”
“அதான் சொன்னேனே ப்ரோ... லைசன்ஸ் இல்லாம துப்பாக்கி வச்சுக்கிற மாதிரி.. இந்த வில் வித்தையை கிராதனான ஏகலைவன் துரோவுக்கு தெரியாம மானசீகமாகக் கத்து வச்சுக்கிட்டான்..”
“என்னது? கிராதகனா?...” (5/n)
“கிராதன்பா.. கிராதன்னா.. வேடன்னு அர்த்தம்.. கண்ணப்ப நாயனாரும் கிராதன்தான்.. இப்ப புரியுதா?”
“ஓ.. கிராதன்தான்... கிராதகன்னு மருவியிருக்குமோ... சரி...சரி.. மேட்டருக்கு வா....துரோணரை ஜஸ்டிஃபை பண்ணு.. அவர் பக்கம் கொடி பிடி...” (6/n)
“ராஜாவுக்கு சமமா ஒரு வித்தையை சாமான்யன் இன்னொருத்தன் நாட்ல வச்சுக்கிட்டா.. அது ரொம்ப அபாயகரமான விஷயம்.... எல்லாம் நாசமப்போயிடும்...”
“எப்படி சொல்ற?” (7/n)
“ராணுவத்துல இருக்கிற முக்கியமான வெப்பனை உங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் வச்சுகிட்டு திண்ணையில ஒக்காந்திருந்தா... நீ சும்மாயிருப்பியா? உனக்கு அது சேஃபா?”
“ஐயய்யோ.. நா செத்தேன்... வெளிய தல காட்டவே முடியாதே... ” (8/n)
“அந்த லாஜிக்தான் இங்கேயும்..ராஜ்ய பரிபாலனம் செய்யும் ராஜகுலமான க்ஷத்ரிய அர்ஜுனனுக்குத் தெரிஞ்ச தனுர் வித்தையை வேடுவனான ஏகலைவனுக்குத் தெரிஞ்சா.. வேற எதாவது அல்ப விஷயங்களுக்கு உபயோகிச்சுட்டான்னா... தொந்தரவுதானே... அதான் கறாரா விரலை வாங்கிட்டார்...” (9/n)
“முன்னாடி.. அவனே தன்னிச்சையாக் கொடுத்தான்னு சொல்லிட்டு..அதை வாரியார் சொன்னார்னு சொன்னே...இதை யாரு சொன்னா?...உன்னோட குருவி மூளைக்கு இதெல்லாம் எட்டாதே!! சொல்லு..சொல்லு..யாரு சொன்னா? ”
“இது பக்தர்களால அண்ணான்னு அன்போடு அழைக்கப்படற ஸ்ரீக்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளோட மகாபாரத ப்ரவசனம் (10/n)
குரு. எந்த வித்தைக்கும் குரு கிருபை தேவைப்படுகிறது. குருவே சரணம். தெய்வத்திற்கு ஒரு படி மேல். பிதாவுக்கு அடுத்த படி. #GuruPurnima2021 (n/n)
@Gopalee67 sir, fyi pl.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with RVS

RVS Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(