இடியப்ப நாயக்கர் பரம்பரை”. ”எல்லப்பச்செட்டி பரம்பரை”.
"கறியார பாபுபாய் பரம்பரை",
இவை வடசென்னை இளைஞர்களுக்கு பாக்ஸிங் கற்றுக் கொடுத்து வளர்த்தெடுத்த மையங்கள் ஆகும்.
சார்பட்டா பரம்பரை காலப்போக்கில் சல்பேட்டா பரம்பரை என பெயர் பெற்றது...
அந்த காலகட்டத்தில் மெட்ராஸ் பாக்சர்களில் பலருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியர் ஆங்கிலோ இந்திய வீரரான நாட்டெர்ரி. அவரது ஸ்டைல், கால் அசைவு நுணுக்கமான சண்டைக்கு பெயர் பெற்றவர் டெர்ரி. ஆங்கிலோ இந்தியன் வீரரான டெர்ரியை முதன்முதலில் வீழ்த்தியவர் கித்தேரி முத்து எனும் மீனவர்...
கித்தேரி முத்துவின் அதிரடி ஆட்டத்தை பாராட்டி ஆல்பர்ட் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ”திராவட வீரன்” என்ற பட்டத்தை தந்தை #பெரியார் அவருக்கு சூட்டினார்....
சார்பட்டா பரம்பரையில் அதிக புகழ்பெற்றவராக கித்தேரி முத்து இருந்தார்.எம்ஆர்.இராதா, பாரதிதாசன் போன்றவர்கள் முத்துவை நேரில் வந்து சந்திப்பார்களாம். இருவரும் குத்துச்சண்டை ரசிகர்கள் கித்தேரி முத்துவிடம் நல்ல நட்பினை கொண்டிருந்தனர் என்ற தகவலை புலவர் பா.வீரமணி பதிவு செய்திருக்கிறார்.
கித்தேரிமுத்துவுக்கு பிறகு பிறகு மீண்டும் டெரியை வீழத்தியது ஜென்டில்மேன் பாக்ஸர் என்று பெயர் பெற்ற ”டாமிகன்” சுந்தர்ராஜன் அவர்கள். அவரது சந்ததியினர் இப்போதும் ராயபுரம் பகுதியில் குத்துச்சண்டை பயிற்சி அளித்து வருவதாக சொல்லப்படுகிறது...
கித்தேரி முத்து அவர்களின் மகன்கள் அன்புமுத்து, அருமைமுத்து ஆகியோர் காசிமேடு ஜிவா நகர் பகுதியில் பாக்ஸிங் கிளப் வைத்திருந்தனர்.
சார்பட்டா பரம்பரையில் புகழ்பெற்ற மற்றொரு பாக்சர் ஆறுமுகம் அவர்கள். தான் பங்கேற்ற 120 போட்டிகளில் 100 போட்டிகளில் நாக்அவுட் செய்து சாதனை படைத்தவர்...
இவரை தொடர்ந்து பாக்சர் வடிவேல், செல்வராஜ் என சார்பட்டா பரம்பரையில் பங்களிப்பு செலுத்திய மீனவர்களின் பட்டியல் மிக நீளம்...
உலககுத்து சன்டை வீரர் முகமது அலி சென்னை வந்தபோது நேரு ஸ்டேடியத்தில் நடந்த காட்சி போட்டியில் அவருடன் மேடை ஏறி சண்டயிட்டவரும் பனைமரதொட்டியை சார்ந்த...
பாக்ஸர் பாபு என்ற மீனவர் தானாம். மீனவர்களை தவிர்த்து பிற சமுதாயத்தினரும் சார்பட்டா பரம்பரையில் பங்களித்துள்ளனர். அதில் முக்கியமானவர் அருணாச்சலம், மாசி, ஜெயவேல் போன்ற பலரும் பங்களிப்பு செலுத்தியுள்ளனர். சார்பட்டா பரம்பரையிலேயே Dancing ஏழுமலை என்ற தரமான பாக்ஸர் இருந்துள்ளார்...
இப்போதும் ராயபுரம், சென்னை துறைமுகம் சுற்றியுள்ள பகுதி சேர்ந்த பெரியவர்கள் பலரும் பாக்சர் அருணாச்சலம் அவர்களை பற்றி பேச கேட்கலாம்.
தலித் சமுதாயத்தில் இருந்து சார்பட்டா பரம்பரையில் புகழ்பெற்ற வீரர்களில் அருணாச்சலம், அந்தோணி ஜோசப் போன்றவர்கள் முதன்மையானவர்....
ஆங்கிலோ இந்திய குத்துச்சண்டை வீரரான நாட்டெர்ரியுடன் நடந்த போட்டியில் மேடையிலேயே அருணாச்சலம் அவர்கள் உயிரிழந்தார். அவரது வீர மரணத்திற்கு இரண்டு மாதங்கள் கழித்து டெரியை கித்தேரி முத்து வீழ்த்தினார். இந்த போட்டிக்கு பிறகுதான் கித்தேரி முத்து மிக பிரபலம் அடைந்தார். அவரைத் தொடர்ந்து..
SM.ஷேக் முகமது மீயான் சாகிப் சார்பாக பரம்பரையை குத்துச்சண்டை போட்டிகளில் நிலைநிறுத்திக் கொண்டு வந்துள்ளார் இப்படி சார்பட்டாபரம்பரை மீனவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் அடையாளமாக இருக்கையில் வரலாறு திரிக்கப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது இப்போது குண்டு வாத்தியார் பரம்பரை தான் உள்ளது!
ஊர் எல்லையிலும் தமிழ் நிலமெங்கும் நிற்கும் குதிரைச் சிலைகளின் மேல் சுடலை மாடன், அய்யனார், கருப்பண்ணசாமி ஆகியோர் அமர்ந்திருப்பதுபோல ஒரு முஸ்லிமான ‘ராவுத்த குமாரசாமி’ அமர்ந்திருப்பதைக் கொங்கு பகுதியில், சிவகிரியை அடுத்துள்ள காகம் கிராமத்தில் பார்க்கலாம்.
காகம் கிராமத்தில், கண்ணன் கூட்டத்தினரால் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் வழிபடப்படும் ‘ராவுத்த குமாரசாமி’ சற்றே வேறுபடுகிறார். சிறு மினாராக்கள், விமானம் என்று கோயிலின் அமைப்பே, மதங்களைக் கடந்து இங்கு மனிதநேயம் வெழிபடப்படுவதை பார்க்கலாம். கோயிலின் நுழைவாயிலி லிருந்து...
கருவறை வரை, வாளை உயர்த்திப் பிடித்து அமர்ந்தவாறும், வாயில் சுருட்டுடன் கைலி உடுத்தி ஒருக்களித்துப் படுத்தவாறும், குதிரையின் மேல் அமர்ந்தவண்ணம் என வெவ்வேறு நிலைகளில் ராவுத்தர் சிலைகள் உள்ளனவாம்.கருவறையில் குமாரசாமியான முருகனுக்குப் பின்னால்,பீடத்தில் வாளை உயர்த்திப் பிடித்தவண்ணம்,
தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்தால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்த போது காங்கிரசை சேர்ந்த பிரதமர்கள் சட்டை செய்யவில்லை.
ஐ.நா கூட்டத்திற்கு வந்த பிடல் காஸ்ட்ரோவை, யாரும் சந்திக்க கூடாதென்று மற்ற நாட்டு தலைவர்களை அமெரிக்கா மிரட்டிய போது
அதை பொருட்டாக மதிக்காது அப்போதைய பிரதமர் நேரு பிடலை சந்தித்தார். முதன் முதலாக #என்னைக்#கௌரவித்த உலக #தலைவர்#நேரு என #பிடல் அச்சமயத்தில் நன்றி தெரிவித்தார்.
அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஒரு சிறு புள்ளி யைக் கூட மாற்றினால்
இந்திய அவ்வொப் பந்தத்தில் கையெழுத்திடாது என்று உங்கள் அதிபரிடம் சொல்லுங்கள் என அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சரை எச்சரி த்து அனுப்பினார் மன்மோகன்.