திண்ணை மட்டும் உனக்குச் சொந்தம்! - நோயினால் விளைந்த காவியம்
'விதியை யாரால் வெல்ல முடியும்; எல்லாம் விதிப்படிதான் நடக்கும்' என்று மனிதர்கள் புலம்புவதைக் கேட்கிறோம்!
விதியையும் நல்ல விதி - தீய விதி என்று பிரித்துவேறு கூறுவார்கள். இது, அவரவர் பாவ புண்ணிய கணக்கின் வழி வருவது.
சாமான்யர் களுக்கான விதியும் அதனால் ஏற்படும் பலன்களும் அந்த நபரையோ அல்லது அவரைச் சார்ந்தோருக்கானதாகவோ அமையும்.
ஆனால், அருளாளர்களைப் பொறுத்தவரை விதிவசத்தால் அவர்களுக்கு உண்டாகும் பலாபலன்கள்... அவை, அவர்களுக்கான இன்னல்களாகவே இருந்தாலும், இந்த உலகுக்குப் பெரிய பலனை அளிப்பதாக
அமைந்துவிடுவது உண்டு. இதைத் `திருவிதி’ என்று கூறலாமோ என்னவோ? இப்படியான திருவிதியின் வசத்தால் பிறந்ததே `நாராயணீயம்' எனும் காவியம். குருவாயூர் எவ்வளவு பிரபலமோ, அவ்வளவு பிரபலம் `நாராயணீயம்!’ சரி! இனி, இந்தக் காவியம் உதித்த கதைக்கு வருவோம்.
கிருஷ்ண பகவானோடு அமர்ந்து பேசிப் பேசியே
இக்காவியத்தை எழுதியவர் நாராயண பட்டத்திரி. இவர், 1560-ம் ஆண்டில் ‘பாரதப்புழை’ ஆற்றின் வடகரையில் உள்ள மேல்புத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை தந்தையாரிடம் பயின்றவர், பின்னர் ரிக்வேதத்தை மாதவாசார்யரிடமும், தர்க்க சாஸ்திரம் போன்றவற்றைத் தாமோதராசார்யரிடமும் கற்றுத்
தெளிந்தார். வியாகரணம் என்ற சம்ஸ்கிருத இலக்கணத்தை ‘அச்யுதபிஷாரடி’ என்ற அற்புதமான குருவிடம் கசடறக் கற்றார்.
ஒரு நாள், காலை வேளையில் பட்டத்திரியை அழைத்தார் குருநாதர். ஓடிச்சென்று குருவைப் பணிந்து நின்றார் சீடர். குருநாதர் சொன்னார், "நாராயணா! கற்றுத்தர வேண்டியவற்றை எல்லாம்
கற்றுத் தந்துவிட்டேன். இனி, நீ வீடு திரும்பலாம். இல்லறத்தை ஏற்று நடத்து. வானோருக்கான யாக - ஹோமங்களை எல்லாம் சிரத்தையோடு பண்ணு. ஆண்டவன் துணையிருப்பார்.”
குருநாதரை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி எழுந்த பட்டத்திரி, பின்னர் மிகப் பணிவோடு, "குருவே! உங்களுக்கு நான் குருதட்சிணை அளிக்க
வேண்டும்" என்றார்.
புன்னகைத்த குருநாதர், "நாராயணா! குருவுக்கு யாரும் தட்சிணை கொடுத்துவிட முடியாது தெரியுமோ? ஆனாலும் நீ கேட்பதால் சொல் கிறேன். நீ என்னிடம் கற்ற இந்தப் பாடங்களை, மற்றவருக்கு இலவசமாகக் கற்றுக்கொடு. தட்சிணை வாங்காமல் நீ கற்றுக்கொடுக்கும் கல்விச் சேவையே நீ எனக்குத்
தரும் தட்சிணை. போய் வா’" என்றார்.
ஆனாலும், நாராயணப் பட்டத்திரி விடவில்லை. "நீங்கள் நான் தரும் குருதட்சிணையைப் பெற்றே ஆகவேண்டும்" என்று விடாப்பிடியாக நின்றார். அதற்கொரு பெரிய காரணமும் இருந்தது. #ஸ்ரீமந்நாராயணீயம் #ஸ்ரீமந்நாராயணீயம்2
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கீதை சொல்லும் பாதை!
ஒரு ஊரில் வயதான முதியவர் ஒருவர் தன் பேரனுடன் வசித்து வந்தார். தினமும் அதிகாலையில் எழுந்து, சமையலறை மேஜை அருகில் அமர்ந்து, பகவத் கீதை படிப்பது அவர் வழக்கம். அனைத்து விஷயங்களிலும் அவரைப் பின்பற்ற நினைத்த பேரனும், கீதை படிக்க முற்பட்டான். ஒருநாள் தாத்தாவிடம்,
நானும் உங்களைப்போல் தினமும் பகவத் கீதை படிக்கிறேன். ஆனால், எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை; புரிந்த கொஞ்சமும், புத்தகத்தை மூடி வைத்ததும் மறந்துவிடுகிறது. இப்படி அதைப் படிப்பதால், எனக்கு என்ன பிரயோஜனம்? என்று கேட்டான். அடுப்பில் கரியைப் போட்டுக்கொண்டிருந்த தாத்தா, அமைதியாக
அந்தக் கரிக் கூடையைச் சிறுவனிடம் கொடுத்து, நதிக்குப் போய் இந்தக் கூடையில் நீர் கொண்டு வா என்றார். பேரனும் கூடையுடன் ஆற்றுக்கு ஓடினான். ஆனால், மூங்கில் கூடையில் தண்ணீர் தங்குமா என்ன? அவன் வீடு திரும்புவதற்குள் தண்ணீர் முழுவதும் ஒழுகிவிட்டது. தாத்தா சிரித்துக்கொண்டே, நீ இன்னும்
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்றபோது தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார்...!
அவர்களில் ஒருவர் கக்கன்...
இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்..!
போலீஸ்
பொதுப்பணி
விவசாயம்
சிறுபாசனம்
கால்நடை பராமரிப்பு
உள்துறை
சிறைத்துறை
நிதி
கல்வி
தொழிலாளர் நலம்
மற்றும்
மதுவிலக்கு...
இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர் .. பத்து வருடங்கள் அமைச்சராக இருக்கும் போது வெளியூர் சென்றால் தன் துணிகளை தானே துவைத்து கொள்வார்..
ஒரு முறை அவர் திருச்சி மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு இரவு
ரயிலில் சென்னை செல்ல வேண்டும்.. நிகழ்ச்சிகளை முடித்து திருச்சி ஜங்ஷனுக்கு வந்த போது அவர் செல்ல வேண்டிய ரயில் கிளம்பி விட்டது.. அடுத்த ரயில் அதிகாலையில்...
அமைச்சராக இருந்தாலும் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை.. ரயில்வே அதிகாரிகளையும் அணுகவில்லை... பேசாமல் ஒரு துண்டை விரித்து
#ஸ்ரீமந்நாராயணீயம் என்பது ஸ்ரீமத் பாகவதத்தின் சாரத்தை மிகவும் அழகாகவும் சுருக்கமாகவும் சுவையாகவும் கூறுவதாகும். இதனை சுமார் 1580 - ஆம் ஆண்டின் ஸ்ரீநாராயண பட்டத்ரி என்பவர் இயற்றினார். இதனை இயற்றிய இடமானது பூலோக வைகுண்டம் என்று
அழைக்கப்படும் குருவாயூர் ஆகும். அங்கு உள்ள ஸ்ரீகுருவாயூரப்பனின் சன்னிதியிலேயே அமர்ந்து இதனை இவர் இயற்றினார்.
இதனை இயற்றக் காரணம்?
கேரள மாநிலத்தில் உள்ள மேப்பத்தூர் என்ற இல்லத்தில் நாராயண பட்டத்ரி பிறந்தார். இவர் பல வேத சாஸ்திரங்களை ஐயம் இன்றி தெளிவாகக் கற்றறிந்தார்.
இயற்கையாகவே மிகுந்த பக்தி உடையவரான பட்டத்ரியை, வாத நோய் பீடித்தது. இதனால் மிகவும் சிரமப்பட்ட நிலையில் இருந்த அவரிடம் ஒரு ஜோசியர், நீ சென்று #ஸ்ரீகுருவாயூரப்பன் இடத்தை அடைந்து, அங்கு அவனுடைய பெருமைகளை விளக்கும் நூலை இயற்றினால் இந்த நோய் நீங்கும் என்றார். உடனே இவரும் குருவாயூரை
மகாபாரதத்தில் யுத்தம் நடந்த போது அபிமன்யு இறந்த நாளன்று , ஜயத்ரதன் என்பவனை, மறுநாள் சூர்யஸ்தமனத்துக்குள் கொன்று விடுகிறேன் அல்லது தீக்குளிப்பேன் என்று சபதம் செய்தான் அர்ஜுனன்.
உடனே கண்ணன் " அர்ஜுனன், என்ன நீ , திடிரென்று சபதம் எடுத்து விட்டாய்.
ஜயத்ரதன் மஹாதேவரிடம் வரம் பெற்றவன் . அவனை கொல்வது அவ்வளவு எளிய காரியமா என்ன? "
அதற்கு அர்ஜுனன் " அதெல்லாம் எனக்கு தெரியாது. அவனை நாளை சூர்யஸ்தமனத்துக்குள் கொல்வேன். இல்லையென்றால் நெருப்புக்குள் குதிப்பேன். அதான் நீ இருக்கிறாயே. எனக்கு என்ன கவலை "
கண்ணனுக்கு தூக்கம் வரவில்லை.
நேராக அர்ஜுனனிடம் சென்றான்
கண்ணன் "வா மஹாதேவரிடம் செல்வோம்."
அர்ஜுனன் கண்ணன் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டான். கண்னனுடன் கிளம்பினான்.
போகும் வழியில் அர்ஜுனனுக்கு பயங்கரமாக பசித்தது. மிகவும் களைத்து போனான்.
அர்ஜுனன் "கண்ணா எனக்கு பசிக்கிறது. நான் மிகவும் களைத்து பொய்
குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய வெண்கல உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும்., குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும். பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும்.
அது சரி.. குருவாயூர் கோயிலில்
இதற்கு அப்படி என்ன விசேஷம்..?
இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு.
முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள். அவளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை அழைத்துச் செல்வார் யாருமில்லை. பணவசதி கிடையாது.
ஆனால் குழந்தை கண்ணனைக் காண வேண்டும் என்றும்., அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்கு கொள்ளை ஆசை.
அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது....
அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து., நன்கு அலம்பி., துடைத்து ஒரு பை நிறைய
சினிமாவைக் கொண்டு நம் இதிகாசத்தை அழிக்கும் முயற்சி.
சிவாஜி நடித்த பழைய கர்ணன் திரைப்படத்தில் உண்மையான மகாபாரதம் எப்படி பொய்யாக திரிக்கப்பட்டது –ஒரு பார்வை.....
ஐம்பது வருடங்களுக்கு முன்பு இருந்த மக்கள் மஹாபாரத கதையை அறிந்தவர்கள், அவர்கள் அப்படத்திலுள்ள பெரும்பாலான காட்சிகள்
ஜோடிக்கப்பட்டவை என்பதை உணர முடிந்தது.....
ஆனால் இன்று இருப்பவர்களுக்கு பாரதக் கதையே தெரியாதே, திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அதை அப்படியே நம்பிவிடும் வாய்ப்பே அதிகம்...
இத்திரைப்படத்தில் ஜோடிக்கப்பட்டுள்ள காட்சிகளில் மிகவும் கண்டிக்கத்தக்க காட்சி:
இறுதியில் கிருஷ்ணர்
கர்ணனிடம் வந்து தர்மத்தை பிச்சை கேட்கும் காட்சி. எடுத்துச் சொல்வதற்கு ஆள் இல்லை என்பதால், பெரும்பாலான தமிழக மக்கள், கிருஷ்ணர் கர்ணனிடம் பிராமண ரூபத்தில் வந்து அவன் செய்த தானத்தின் பலன்களை தானமாகப் பெற்றார் என்று இன்று வரையில் நம்பிக் கொண்டுள்ளனர். ஆனால் இதில் எள்ளளவும்